தனியொரு மோன நிலையில்
மரத்தினில் யாழ் மீட்டி
இசைக்குதொரு இலை
இலை மீட்டும் ராகத்தில்
தான் மயங்கி கிடந்து
இரசிக்குதொரு மரம்
உயிரின் ஊற்றாய் ஊரெடுத்து
பெருகி வழிகிறது இன்னிசை
திசை எங்கும்
காலத்தின் மீட்டெடுக்க முடியா
பாதையின் வழியே சிலிர்ப்புடன்
செல்லும் கீதத்தின்வழி
மரணத்தில் எல்லை யதிலும்
பிரித்தறிய முடியா இரு
உயிரின் பாடல்
பயணங்களின் எல்லை அறிந்தும்
கலியுரும் நடனத்துடன் தொடர்கிறது
பாதங்கள் இரண்டும்
--பிரியா
இலைக்கு பெருமை சேர்த்துவிட்டீர்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் ... :)
நீக்குஅழகான கவிதை... பாராட்டுகள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி ... :)
நீக்குத ம மூன்று
பதிலளிநீக்குநன்றி தங்கள் வாக்குகளுக்கும்
நீக்குஇசைக்கின்ற இலையும்
பதிலளிநீக்குஇரசிக்கின்ற மரமும்
இணைந்தே தந்த
இதமான கவிதை!
மிக மிக இதமாக இதயத்தை வருடிச்சென்ற கீதம்!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.4
மிக்க நன்றி சகோதரி வருகைக்கும், வாழ்த்துக்கும், வாக்குகளுக்கும் ... :)
நீக்குமிகவும் ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி சார் ... :)
நீக்குஅப்ப்டியே அர்த்தம் சொல்லிடுங்க...ஹிஹிஹி
பதிலளிநீக்குபட்டுப்போய் தன கடைசி நாளுக்காய் காத்திருக்கும் ஒரு மரத்தினையும் அதனுடன் ஒட்டி கொண்டு இருக்கும் ஒற்றை இலையையும் குறித்து எழுதி உள்ளேன்... இறுதி நாட்களின் சோகத்தினை அவைகள் இசை மீட்டி சந்தோசத்துடன் எதிர் நோக்குவதாக அமைத்துள்ளேன்... அவ்வளவே
நீக்குசகோதரி, தங்களை " எனது முதல் பதிவின் சந்தோஷம் தொடர்கிறது" என்ற தொடர்பதிவினை தொடர அன்புடன் அழைக்கிறேன்.
பதிலளிநீக்குhttp://muhilneel.blogspot.com/2013/08/blog-post_6.html
மிக்க நன்றி தோழி தங்கள் அழைப்பிற்கு... முதலில் நேரம் தாழ்த்திய என் பதிலுக்கு மன்னிப்பு கேட்கிறேன்... உடல் நலமின்மையால் கடந்த 15 தினங்களாக ஆன்லைன் வர இயலவில்லை... நிச்சயம் நாளை உங்கள் பதிவினை படித்து தொடர்கிறேன்...
நீக்குஇப்போது பூரணமாய் குணமடைந்து நலமுடன் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.நன்கு ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் தோழி.
நீக்குஇலை மீட்டும் இராகத்தில் மயங்கிடந்ந இரசிக்கிதொரும் மரம் அருமை வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குமிக்க நன்றி கவி நாகா சார்... :)
நீக்கு