பக்கங்கள்

நூல் அறிமுகம் - உருமாற்றம் (The Metamorphosis)

நான் வாசித்து ருசித்த சில நூல்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இத்தளத்தில் நூல் அறிமுகம் பகுதியை சில நாட்களுக்கு முன் தொடங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் முதல் அறிமுகத்திற்க்குப் பின் நீண்ட நாட்களாக ஏதும் நூல்களைக் குறித்து இங்கே என்னால் பேச இயலவில்லை. இடைவெளி கொஞ்சம் பெரிதெனினும் இம்முறை மற்றுமொரு ஆகா சிறந்த நூலுடனே தங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

பிரான்ஸ் காப்கா (FRANZ KAAFKA )அவர்களின், தமிழில் உருமாற்றம்  என்ற பெயரில் வெளிவந்த ஜெர்மன் மொழி நூலான THE METOMORPHOSIS என்பதுவே அதுவாகும்.

மனிதர்கள் பொதுவாகவே அவர்களுக்கு விருப்பப் பட்டதை செய்ய   அனுமதிக்கப்படுவதே இல்லை பொதுவாக இவை பெரும்பாலும் பாதிப்பது படிப்பு வேலை இதை போன்ற விடயங்களில்தான்.  அப்படியான கால கட்டங்களில் தனக்கு விருப்பம்  இல்லாத ஒன்றை செய்யும் பொழுது தனது கனவுகள் முடக்கப் படும் பொழுது அவன் தனக்குள் ஒரு புழுவினைப்போல் பூச்சியைப்போல் உணர்கிறான். அப்படியானதொரு மன நிலையில் இருக்கும் நம்முடைய எழுத்தாளர் காப்கா தன்னுடைய  அந்த நிலையை இந்த கதையின் முக்கிய கதாப்பாத்திரம் மூலம் விளக்குகிறார்.

இக்கதையின் நாயகன் ஒரு நிறுவனத்தில் மார்க்கட்டிங் துறையில் பணியில் இருக்கிறான். அவனுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவன் உடல் ஒத்துழைக்கிறதோ இல்லையோ நிதமும் பயணம் செய்தே தீர வேண்டிய சூழ்நிலை அவனுடையது. இருப்பினும் தன்னுடைய குடும்பத்திற்காக தனக்கு விருப்பமே இல்லாத அந்த வேலையை அவன் செய்கிறான். அப்படியான ஒரு நீண்ட பயணத்தின்  அடுத்த  நாளின் காலைப்  பொழுதில் அவன் தன் படுக்கையில் இருக்கிறான். அன்றும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இரயிலின் நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது, அலுவலகத்திற்கு சென்று சில பொருள்களை எடுத்துக் கொண்டு பின் இரயில் நிலையம் செல்ல வேண்டும்.

அப்பொழுதுதான் அவன் உணர்கிறான் தான் அன்றைய பொழுதில் ஒரு பூச்சியாக மாறியிருப்பதை. உடலளவில் ஒரு முழுமையான பிரமாண்ட பூச்சியாக மாறியிருப்பதை, அவனால் தன்னுடைய உடலை அசைக்கவே முடிவதில்லை. அக்கணத்தில் அவன் உடலுடையதான அவன் போராட்டத்தில் காலம் கடக்கிறது இவன் குறித்த நேரத்தில் பணிக்கு வராததை அடுத்து அவன் நிறுவன தலைமை எழுத்தர் அவனைத்தேடி அவன் இல்லம் வருகிறார். அதன் பிறகே அவன் நிலை குறித்து அனைவருக்கும் தெரிய வருகிறது. அச்சமும் கவலையும் அனைவரையும் சூழ்கிறது. அவன் வீட்டின் நிலைமை அப்படியே புரட்டி போட்டதுபோல் மாறுகிறது. அவன் வீட்டில் ஒரே வருமானம் ஈட்டும் நபர் அவன் தான். இப்பொழுது குடும்பத்தினைக் குறித்த கவலையும் அவனை சூழ்கிறது.குடும்பத்திலும் அவனைக்  குறித்த கவலை.

இதன் பிறகு காப்கா இந்த கதையை நகர்த்திச் செல்வதுதான் அலாதியானது. தன மனதின் பிரதிபலிப்பை அவர் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இருக்கும் உறவினை அவர் இக்கதையின் மூலம் அதன் நாயகனின் உருமாற்றத்தின் வழியே சொல்லிக் கொண்டு செல்வார்.நாயகனின் உருமாற்றத்தினால் அவன் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள் அனைத்தையும் கொண்டு இறுதி முடிவு மனதை கணப்படுத்தியே செல்லும். நிச்சயம் படித்து பாருங்கள் உங்களிலும் அந்த நாயகனை வாழ்வின் ஏதேனும் ஒரு கணத்தில் உங்களால் காண இயலும்

கதையை கீழுள்ள லிங்கில் ஆன்லைனில் படிக்கலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தையும் கூறுங்கள்.

http://balajikrishna.wordpress.com/2013/07/09/உருமாற்றம்-ஃப்ரன்ஸ்-காஃ/
--பிரியா

சகியே .....

நோக்கும் இடத்திலெல்லாம் - சகியே
உந்தன் நிலவு முகத்தினினால் 
காணும் பெண்ணிலெல்லாம் - சகியே 
என்மனம் காதல் கொள்ளுதடி

சிதறல் -6

தடைகளின்றி 

நிறைவேறாத 
பலவற்றுடன் 
நிறைவேறிய 
ஒன்றாய் 
நகர்ந்து 
செல்கிறது - இந்த 
நீண்ட 
வாழ்க்கை 

நம்பிக்கையுடன்....பரிதாபத்திற்குறிய நாட்களின்
கடைசி பகுதியின்
இறுதி நொடிகளில்
நிற்கிறது வாழ்வு

நாளைய பொழுதின்
நீங்காத நம்பிக்கையுடன்
நீள்கிறது பொழுதுகள்
எதிர்வரும் பாதையினூடே

கண்ணீர் விட்டழுத
நேற்றைய பொழுதின்
நியாபகங்களின் ஊடே
நினைவுகளைத் தேக்கியபடி

கன்னத்தில் விழுந்திட்ட
கண்ணீர் துளிகள்
சட்டென கரைகின்றன
காற்றில் கற்பூரமாய்

கரைகளைக் கடந்து
தடைகளைக் கடந்து
தொடர்கிறது வாழ்க்கை
வாழ்வோமென்ற நம்பிக்கையுடன்--பிரியா

ஒரு மௌனம் ஒரு காதல்அருகருகே பயணித்தும்
கண்கொண்டு பார்த்தும்
பேச்சினைக் கடந்து
மௌனிகளாகவே தொடர்கிறோம்
நானும் சாலையோர மரமும்

எங்களுக்குள் கதைக்க
எவ்வளவோ இருந்தும்
மௌனத்திலேயே கரைகின்றன
எழுத்துக்களற்ற எங்களின்
எண்ணப் பரிமாற்றங்கள்

தேர்ந்ததொரு புரிதலில் 
கிளைகளை அசைத்து 
சம்மதம் சொல்கின்றன 
என் மௌனங்களும்
தங்களுக்கு அர்த்தப்பட்டதாய்மறுத்துப் பேசாத 
மௌனக் காதலன் 
கிடைத்த மகிழ்ச்சியில்
குதூகலமாய் - என் காதல்
கிளைகளுடனும்  மரங்களுடனும் 

வார்த்தைகளைத் தேடும்
அவசியம் ஒழிந்ததில்
தடைகளைத் தாண்டிய,
எண்ணங்கள் மிதக்கின்றன
ஏகாந்த வெளியில்


-- பிரியா