பக்கங்கள்

நூல் அறிமுகம் - உருமாற்றம் (The Metamorphosis)

நான் வாசித்து ருசித்த சில நூல்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இத்தளத்தில் நூல் அறிமுகம் பகுதியை சில நாட்களுக்கு முன் தொடங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் முதல் அறிமுகத்திற்க்குப் பின் நீண்ட நாட்களாக ஏதும் நூல்களைக் குறித்து இங்கே என்னால் பேச இயலவில்லை. இடைவெளி கொஞ்சம் பெரிதெனினும் இம்முறை மற்றுமொரு ஆகா சிறந்த நூலுடனே தங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

பிரான்ஸ் காப்கா (FRANZ KAAFKA )அவர்களின், தமிழில் உருமாற்றம்  என்ற பெயரில் வெளிவந்த ஜெர்மன் மொழி நூலான THE METOMORPHOSIS என்பதுவே அதுவாகும்.

மனிதர்கள் பொதுவாகவே அவர்களுக்கு விருப்பப் பட்டதை செய்ய   அனுமதிக்கப்படுவதே இல்லை பொதுவாக இவை பெரும்பாலும் பாதிப்பது படிப்பு வேலை இதை போன்ற விடயங்களில்தான்.  அப்படியான கால கட்டங்களில் தனக்கு விருப்பம்  இல்லாத ஒன்றை செய்யும் பொழுது தனது கனவுகள் முடக்கப் படும் பொழுது அவன் தனக்குள் ஒரு புழுவினைப்போல் பூச்சியைப்போல் உணர்கிறான். அப்படியானதொரு மன நிலையில் இருக்கும் நம்முடைய எழுத்தாளர் காப்கா தன்னுடைய  அந்த நிலையை இந்த கதையின் முக்கிய கதாப்பாத்திரம் மூலம் விளக்குகிறார்.





இக்கதையின் நாயகன் ஒரு நிறுவனத்தில் மார்க்கட்டிங் துறையில் பணியில் இருக்கிறான். அவனுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவன் உடல் ஒத்துழைக்கிறதோ இல்லையோ நிதமும் பயணம் செய்தே தீர வேண்டிய சூழ்நிலை அவனுடையது. இருப்பினும் தன்னுடைய குடும்பத்திற்காக தனக்கு விருப்பமே இல்லாத அந்த வேலையை அவன் செய்கிறான். அப்படியான ஒரு நீண்ட பயணத்தின்  அடுத்த  நாளின் காலைப்  பொழுதில் அவன் தன் படுக்கையில் இருக்கிறான். அன்றும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இரயிலின் நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது, அலுவலகத்திற்கு சென்று சில பொருள்களை எடுத்துக் கொண்டு பின் இரயில் நிலையம் செல்ல வேண்டும்.

அப்பொழுதுதான் அவன் உணர்கிறான் தான் அன்றைய பொழுதில் ஒரு பூச்சியாக மாறியிருப்பதை. உடலளவில் ஒரு முழுமையான பிரமாண்ட பூச்சியாக மாறியிருப்பதை, அவனால் தன்னுடைய உடலை அசைக்கவே முடிவதில்லை. அக்கணத்தில் அவன் உடலுடையதான அவன் போராட்டத்தில் காலம் கடக்கிறது இவன் குறித்த நேரத்தில் பணிக்கு வராததை அடுத்து அவன் நிறுவன தலைமை எழுத்தர் அவனைத்தேடி அவன் இல்லம் வருகிறார். அதன் பிறகே அவன் நிலை குறித்து அனைவருக்கும் தெரிய வருகிறது. அச்சமும் கவலையும் அனைவரையும் சூழ்கிறது. அவன் வீட்டின் நிலைமை அப்படியே புரட்டி போட்டதுபோல் மாறுகிறது. அவன் வீட்டில் ஒரே வருமானம் ஈட்டும் நபர் அவன் தான். இப்பொழுது குடும்பத்தினைக் குறித்த கவலையும் அவனை சூழ்கிறது.குடும்பத்திலும் அவனைக்  குறித்த கவலை.

இதன் பிறகு காப்கா இந்த கதையை நகர்த்திச் செல்வதுதான் அலாதியானது. தன மனதின் பிரதிபலிப்பை அவர் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இருக்கும் உறவினை அவர் இக்கதையின் மூலம் அதன் நாயகனின் உருமாற்றத்தின் வழியே சொல்லிக் கொண்டு செல்வார்.நாயகனின் உருமாற்றத்தினால் அவன் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள் அனைத்தையும் கொண்டு இறுதி முடிவு மனதை கணப்படுத்தியே செல்லும். நிச்சயம் படித்து பாருங்கள் உங்களிலும் அந்த நாயகனை வாழ்வின் ஏதேனும் ஒரு கணத்தில் உங்களால் காண இயலும்

கதையை கீழுள்ள லிங்கில் ஆன்லைனில் படிக்கலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தையும் கூறுங்கள்.

http://balajikrishna.wordpress.com/2013/07/09/உருமாற்றம்-ஃப்ரன்ஸ்-காஃ/




--பிரியா

19 கருத்துகள்:

  1. அருமை...
    இணைப்பில் போய்ப் பார்க்கிறேன்...
    நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நீங்க குடுத்த லிங்க்கில புத்தகத்தைப் படிக்க என் கண்ணுக்கு பவர் பத்தலை ப்ரியா...! லென்ஸ்தான் தேவைப்படும் போலருக்கு. கிடைச்சா புத்தகமா வாங்கி அவசியம் படிச்சுடறேன். படிக்கணும்கற ஆசைய ஏற்படுத்தி விட்டது நீங்கள் தந்த அறிமுகம்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அத அப்படியே டவுன்லோட் செய்து ஜூம் செஇது படிக்கலாமே... ;)

      நீக்கு
  3. அறிமுகமே கலக்கல். நம்மில் பலருக்குள்ள பிரச்சனை! சில நாள் கழித்து படித்துவிட்டு சொல்கிறேன். அறிமுகத்திற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி நிரோஷன் நிச்சயம் படியுங்கள்.. படித்து விட்டு கருத்து தெரிவியுங்கள்... :)

      நீக்கு
  4. இனைப்பிற்கு நன்றி சகோதரி. நல்ல விமர்சனம். கண்டிப்பாக படிக்க வேண்டும்...

    தொடர்ந்து இது போன்ற நூல் அறிமுகங்களை வெளியிடுங்கள்....

    பாராட்டிகள்.

    பதிலளிநீக்கு
  5. நல்ல அறிமுகம் உங்கள் விளக்கம் கதையை படிக்க ஆவல் கொள்கிறது நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவி நாகா சார்... நிச்சயம் படியுங்கள்... :)

      நீக்கு
  6. நல்ல அறிமுகம் உங்கள் விளக்கம் கதையை படிக்க ஆவல் கொள்கிறது நன்றி

    பதிலளிநீக்கு
  7. இணைப்பை வாசித்துவிட்டு சொல்கிறேன் பிரியா
    நல்ல பயனுள்ள பதிவுகள் தொடரட்டும்

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அண்ணா..நிச்சயம் வாசித்து விட்டு உங்கள் கருத்தினை சொல்லுங்கள்... :)

      நீக்கு
  8. வணக்கம் சகோதரி...
    ஏன் இவ்வளவு இடைவெளி, அடுத்த பதிவு போடலாமே!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சகோ கொஞ்சம் பெரிய இடைவெளிதான்.... இன்று முதல் பதிவுகள் தொடர்சியாக வரும்.... என்னை நினைவுகூர்ந்ததற்க்கு நன்றிகள்... :)

      நீக்கு
  9. புத்தகத்தில் என்னதான் இருக்கிறது என தேடுவோர் மத்தியில்
    நம் எண்ணமே புத்தகமாக இருக்கிறது என்பதை உங்கள் அறிமுகத்தின் மூலம்
    உணர முடிந்தது....

    அருமை...அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்..
    நன்றி....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அருள் உங்கள் கருத்திற்கு...நிச்சயமாய் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்தான் இது... படித்துவிட்டு உங்கள் கருத்தை மீண்டும் பகிருங்கள்

      நீக்கு