பக்கங்கள்

ஒரு வெளிச்சப் பறவை


எங்கிருந்தோ வந்ததொரு 
வெளிச்சப் பறவை 
இருட்டினுள்  நானடைய 
நினைக்கும் பொழுதுகளில் - என் 
திசை மாற்றிச் செல்ல 


என்னவென்று அறியாத 
மாயமொன்று அதன் 
திசைகளின்  வழியே 
தனைமறந்த நிலையில்  - எனை 
வழிநடத்திச் செல்கிறது 

அதன் அகண்ட 
வெளிச்சச் சிறகினடியில் 
உயிர்பெற்று எழுகிறது 
கருகிப்போன கனவுகளும் - பெரும் 
மழைகண்ட நிலமாய் 

வெல்லாத என் சொல்லும் 
தோற்காத அதன் சொல்லுமாய் 
விரிகின்ற பிராமண்டத்தில் 
மறைகின்றது - எனை சூழ்ந்த 
மொத்த இருளும்.





-- பிரியா 

குறிப்பு : நானடைய - நான்+அடைய - 
அடைதல் - கூடு சேருதல் என்னும் பொருள் (பறவைகள் கூட்டினுள் அடைதல் போல) 

16 கருத்துகள்:

  1. வணக்கம்
    கவிதையின் வரிகள் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. // வெல்லாத என் சொல்லும்
    தோற்காத அதன் சொல்லுமாய்... //

    அருமை சகோ...

    பதிலளிநீக்கு
  4. கருகிப்போன கனவுகளும்-பெரும்
    மழைகண்ட நிலமாய்...
    நான் ரசித்த நல்லவரிகள்... வாழ்த்துக்கள் சகோதரி.
    Killergee
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.... :)

      நீக்கு
  5. படத்திற்கேற்ப கவிதை வரிகளைக் கண்டு ரசித்தேன் இனிய வலைத்தள நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமை கொள்கிறேன் தோழி வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அம்மா... உங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்... :)

      நீக்கு
  6. ரசித்தேன் கவி வரிகளை அருமை தொடர வாழ்த்துக்கள் ....!

    பதிலளிநீக்கு