தொலைந்தவர்கள் நாங்கள்
தேடுகின்றோம் வாழ்வுதனை
முளைவிட்ட இடம்தாண்டி
வேர்விட்ட இடம்தனிலே
இரட்சகர்கள் வான்செல்ல
அறிந்தவர்கள் தலை தொங்க
வீதிகளில் அலைகின்றோம்
மீட்பர்கள் யாருமின்றி
அலையுடனே மிதக்கின்றோம்
கரைசேர வழியின்றி - எம்
தோணிகள் அத்தனையும்
தூர்ப்பெடுத்துப் போனதனால்
நாடென்றோம் பிழையென்றார்
நட்பென்றோம் பிழையென்றார்
உரைத்திடுங்கள் யாரேனும்
ஊறென்று ஏதுமிருந்தால்
எதற்காய் வாழ்கின்றோம்
யாருக்காய் தொடர்கின்றோம்
எதுவுமே அறிந்திலோம்
கதியற்றவர் ஆனதனால்
இருந்தும் இருக்கிறோம்
இருப்பினை விதைத்தபடி
தொலைந்து போனவர்களாய்
தொலைக்கப் பட்டவர்களாய்
--பிரியா
குறிப்பு : ஊறு - கேடு
தலைதொங்க - தலை குனிய
தேடுகின்றோம் வாழ்வுதனை
முளைவிட்ட இடம்தாண்டி
வேர்விட்ட இடம்தனிலே
இரட்சகர்கள் வான்செல்ல
அறிந்தவர்கள் தலை தொங்க
வீதிகளில் அலைகின்றோம்
மீட்பர்கள் யாருமின்றி
அலையுடனே மிதக்கின்றோம்
கரைசேர வழியின்றி - எம்
தோணிகள் அத்தனையும்
தூர்ப்பெடுத்துப் போனதனால்
நாடென்றோம் பிழையென்றார்
நட்பென்றோம் பிழையென்றார்
உரைத்திடுங்கள் யாரேனும்
ஊறென்று ஏதுமிருந்தால்
எதற்காய் வாழ்கின்றோம்
யாருக்காய் தொடர்கின்றோம்
எதுவுமே அறிந்திலோம்
கதியற்றவர் ஆனதனால்
இருந்தும் இருக்கிறோம்
இருப்பினை விதைத்தபடி
தொலைந்து போனவர்களாய்
தொலைக்கப் பட்டவர்களாய்
--பிரியா
குறிப்பு : ஊறு - கேடு
தலைதொங்க - தலை குனிய
இருந்தும் இருக்கிறோம் இருப்பை விதைத்தபடி... படித்ததும் மனதில் கனமானது. அலைகளுடன் போராடிக் கரையேறும் இவர்களின் துயர் தீரும் நாள் எந்நாளோ...?
பதிலளிநீக்குஅந்த நாளுக்கான காத்திருப்பில்தான் அத்தனை பேரும் அண்ணா.... என்றாகிலும் இவர்தம் சொந்த மண்ணில் மீண்டும் இவர்கள் வேர் பிடிக்க வேண்டும், அதற்க்கு இன்னும் எத்தனை தலைமுறைகள் ஆகுமோ.....
நீக்குமனதை கனக்க வைக்கும் உண்மை வரிகள்... காலம் ஒரு நாள் மாறும்...
பதிலளிநீக்குநம்பிக்கைகள் மட்டும் மாறாததாய்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குநாம் தழிழ்ரகள் எமக்கென்று ஒருநாடு இல்லை மாற்றான் நாட்டில் ஓரத்தில் தொங்கிக்கொண்டு வாழ்கிறோம். மற்ற இனத்துக்கென்று ஒரு நாடு இருக்கு... இல்லாத படியால் குண்டோடும் கடலோடும். போராட வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம்.
எப்போது தனியும் தாகம்.......கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உண்மைதான் ரூபன் தமிழர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் மதம் மொழி இனம் இவற்றில் ஏதாவது ஒன்றின் பெயரில் நடக்கும் சண்டைகளால் லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப் படுகின்றனர்.... அனைவரின் வாழ்க்கையுமே இப்படி போரட்டமாகத்தான் அமைகிறது, என்றாகிலும் ஒரு நாள் அனைவருக்கும் விடிவு கிடைக்குமென்ற நம்பிக்கையில்
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குத.ம 3வதுவாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்
நீக்குநாடதைத் தான்தொலத்து நாமெல்லாம் பாரினில்
பதிலளிநீக்குவேடரைப் போலானோ மே!
மனதில் இருக்கும் வலிகள்
உங்கள் வரிகளாகக் கண்டு
வழிகிறது என் கண்களுமே!...
வலிதீர வழி வகுப்போம்!..
வாழ்த்துக்கள் பிரியா!
என்றாகிலும் ஒரு நாள் வழி தீரும் என்ற நம்பிக்கையிலேயே
நீக்குஇருந்தும் இருக்கின்றோம்....,
பதிலளிநீக்கு>>
கவிதை முழுக்க சொல்லாத வலியை இவ்விரு சொற்கள் சொல்லிட்டுது பிரியா!
நன்றி அக்கா... வேறு வழி அற்ற உள்ளங்களின் வாழ்க்கை இப்படிதானே அக்கா...
நீக்குகடைசி சிலவரிகள் கனக்க வைத்தன! உண்மை நிலையை கண் முன் நிறுத்தும் சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி தளிர் சுரேஷ் சார்...
நீக்குகவிதை மனதை கனக்க வைக்கின்றது!
பதிலளிநீக்குஇலங்கையில் வெளியான ' மெல்லக் கசிந்தது' என்ற இசை ஆல்பத்தைக் கேட்டிருக்கிறீர்களா? இலங்கைத்தமிழர்களின் மன வலியை முழுமையாக வெளிப்படுத்தும் பாடல்கள் அவை. அதில் ஒரு பாடல், ' மறந்து போகுமோ மண்ணின் வாசனை? தொலைந்து போகுமோ தூர தேசத்தில்?' என்று ஆரம்பிக்கும். தேசத்தையும் இணைந்திருந்த உறவுகளையும் பிரிந்து விட்ட வலி அதில் எப்படி பிரதிபலித்ததோ அதே வலி உங்கள் கவிதையிலும் பிரதிபலித்து மனதைப் பிசைகிறது.
அந்த ஆல்பத்தினைக் கேட்டதில்லை அம்மா ஆனால் அந்த பாடலை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கேட்டிருக்கிறேன்... சிறிய பாடல் ஆழமான வரிகளுடன், கேட்ட உடன் கணக்க செய்தது.... நீங்கள் குறிப்பிட்ட இந்த வரிகளை அச்சிறுமி பாடி முடித்துவிட்டு ஒரு முறை சொல்லிக் காட்டுவாள் உண்மையில் பாடிய போது கேட்டதனை விட அவள் மீண்டும் உரைக்கையில் அதன் வழி இன்னும் அதிகமாய் இருக்கும்... இப்போதைய நிலையில் நம்மால் அவர்களுக்கு செய்ய முடிந்ததெல்லாம் அவர்களுடைய சோகங்களைப் பகிர்ந்து கொள்வது மட்டுமே, வேறு எதுவும் செய்ய இயலா மிகப் பெரும் கையறு நிலையில் நாம் உள்ளோம்
நீக்குஉள்நெஞ்சின் ஏக்கம் உரைத்தவரி இவ்வுலகின்
பதிலளிநீக்குகள்ளத் தனத்தின் கரி !
வலிமூடி வந்த வரிகள் அருமை ப்ரியா
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
உலகின் கள்ளத்தனத்தின் மீது கரி பூசிடத்தான் நினைக்கிறோம்... காலம் இன்னும் கனிந்திலையே அண்ணா....
நீக்குமீட்பர்கள் இவ்வுலகில் மிகக்குறைவு. அவர்களுக்கு பணிச்சுமையும் அதிகம். நமக்கு நாமே மீட்பர் ஆனால்தான், நல்லது நடக்கும்.
பதிலளிநீக்குஉண்மைதான் சரியாக சொன்னீர்கள்...
நீக்கு//எதற்காய் வாழுகின்றோம்// கண்டிப்பாக ஒரு நாள் நல்ல நிலை அடைவோம், சொந்த நாடு பெறுவோம் என்ற நம்பிக்கையில்..
பதிலளிநீக்குமனம் கனக்க வைக்கும் கவிதை, அருமை.
நம்பிக்கையுடனே கடக்கும் நாட்க்கள்...
நீக்கு