பக்கங்கள்

மழையீன்ற முத்துக்கள்...




தாளமிட்டு மேலே விழுந்து
துள்ளிக் குதிக்கும் துளியதனை
சின்னக் கைகள் நீட்டியே
சேர்த்தே பிடித்திட முனைகின்றேன்

முத்துத் துளிகளை ஒன்றாக்கி
முத்தான மாலை கோர்த்திடவே
முயன்றே பிடிக்கிறேன் துளிகளையே
முழுதும் கோர்த்து முடித்திடவே

இயற்க்கை என்ற ஆசானோ
அயராது வடிவம் மாற்றிடவே
இயலாது நானும் தோற்கின்றேன்
மயக்கும் அந்த அழகினிலே

மாலைகள் மாறின கைவளையாய்
வளைகள் மாறின கால்கொலுசாய்
மழைத்துளியிங்கு மாறிற்று ஒவ்வொன்றாய்
கலையினில் இலயித்தது எல்லாமுமாய்

வந்தது அங்கே வானவில்
வர்ணங்கள் சேர்த்திட முத்ததனில்
மாயங்கள் செய்திட்ட வானதுவே
மறைத்திற்று அனைத்தையும் நொடியினிலே

பட்டுத் தெறித்த மழைத்துளிகள்
விட்டுச் சென்ற எச்சமதை
இருத்திக் கொண்டேன் மனதினிலே
மாய்ந்தே இரசிப்பேன் தினம்தினமே...


-- பிரியா 

16 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ரசித்ததை அனைவரும் ரசிக்கும்படி
      அருமையாக கவியாக்கியதை மிகவும் ரசித்தேன்
      தொடர வாழ்த்துக்கள்

      நீக்கு
  2. மழைக் கவிதை அருமை தோழி !!! வாழ்த்துகள் !!!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கவிதை மழையில் நானும் நனைந்தேன் ரசித்தேன்.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. துளித்துளியாய் சிந்திய கவிதைத்துளி
    விழிவழியே உள்ளம் நுழைந்ததடி!...

    அழகிய அருமையான மழைத்துளியாய் மிளிர்ந்த கவிதைத்துளி!!!

    வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
  5. மழை துளிப்போல் கவி துழியும் சிந்திடவே
    சிந்தனை துளிர் போல் துளிர்ந்ததுவே!

    உங்கள் கவிதையும்,ரசனையும் அருமை
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. சிறிய மழையில் நனைவதும், பெருமழையை பார்த்து ரசிப்பதும் எனக்கு மிகமிகமிகப் பிடித்த விஷயங்கள்! மழை முத்துக்களைக் கோர்த்து மாலையாக்கிவிட முயன்ற உங்களி்ன் கவிதா மனம் அபாரம்! மிக ரசித்தேன்! சூப்பர்ப் ப்ரியா!

    பதிலளிநீக்கு