பக்கங்கள்

கேள்வி ஒன்று



ஊரெங்கும் நாடெங்கும் தேடியலைந்து
ஜாதிஜாதகப் பொருத்தம் பார்த்து

கூன்குருடு செவிடுபேடு நீக்கி
முகப்பொருத்தம் முற்றிலும் பார்த்து

பச்சைஒலைப் பந்தல் இட்டு
குலையுடன் வாழைமரம் கட்டி

மாவிலைத் தோரணம் கோர்த்து
வீடு மொத்தமும் அலங்கரித்து

குதிரையில் மாப்பிள்ளை அழைத்து
தலைவாழை இலையில் சோறிட்டு

அம்மிமிதித்து அருந்ததி பார்த்து
மேளதாளம் கொட்டி முழங்க

காத்திருந்த எந்தன் கழுத்தில்
கணக்காய் மூன்று முடிச்சிட்டு

தனதென்று உரிமை ஆக்கி
கூட்டி வந்த தெதற்காக?

அழுக்காய்போன துணிகள் துவைக்கவும்
வீட்டைப்பெருக்கிச் சுத்தம் செய்யவும்

பாத்திரங்கள் கழுவித் தோய்க்கவும்
வாய்க்குருசியாய் சமைக்கவும் தானா?

இதற்க்காய் தானென்று என்னிடம்
அன்றே கொஞ்சம் உரைத்திருந்தால்

நவீன இயந்திரங்கள் நான்கை
வாங்கி வை போதுமென்றிருப்பெனே

திருமணமென்ற பெயரில் இங்கே
வீண் செலவுகள் இத்தனை எதற்கு?

சம்பளம் இல்லா வேலைக்காரி
வீட்டிற்கு தேவையென்று நினைத்தாயோ?

மனிதப்பிறவி எடுத்திங்கும் கேவலப்பட்ட
இயந்திர வாழ்வோ பெண்ணிற்கு?

கேள்வி கேட்டு நிற்கிறாள்
புதிதாய் மணமான பெண்ணொருத்தி...

பதிலாய் ஏதும் உண்டோ
இதைப் படிப்பவர் உங்களிடம்...



-- பிரியா



பி. கு. : இக்கவிதை மெசினாய் மாறிய, மாறிகொண்டிருக்கும், மாறப்போகின்ற என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளுக்கும், அவர்களை அங்ஙனம் மாற்ற துடிப்பவர்களுக்கும் மட்டும் சமர்ப்பணம்



12 கருத்துகள்:

  1. நச்சென்று நெற்றிப் பொட்டிற் அடித்தாற் போன்ற கேள்விகள்....

    பதிலளிநீக்கு
  2. மனவோலம்தனை முளங்கினாய் கேள் பெண்ணே
    தினமிதுதான் வாழ்வோ திருந்தும்பொறு
    குணமதை மாற்றிடலாம் உன்குணத்தாலே நீயும்
    பணம்செலவழிக்க வேண்டாம் பாசமுடன் நேசமூட்டு!...

    உங்கள் கவி அருமை தோழி! நான் ச்சும்மா உங்க பாட்டுக்கு எசப்பாட்டு பாடினேன்.

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா உங்கள் எசப்பாட்டு அருமை... மிக்க நன்றி தோழி

      நீக்கு
  3. அது அந்தக் காலம்... இந்தக் காலத்தில் பல நல்ல மாற்றங்களை போற்றுவோம்...

    யோசிக்க வேண்டிய கேள்விகளுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைக்கும் அதே வாழ்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் மாற்றம் வேண்டுமே தனபாலன் சார்... அதற்கான கேள்வியே இது

      நீக்கு
  4. இன்று நிலைமை மாறி வருகிறது. பெண்ணை சமமாய் மதித்து உணர்வுகளைப் புரிந்து நடப்பவர்கள் உண்டு. (சில வீடுகளில் கணவனே சமையலும் செய்து பேய் முழி முழிப்பதும் உண்டு) ஆனால் அவையெல்லாம் சதவீத அளவில் குறைவே. இன்னும் நிறைய மாற வேண்டும். அந்த மனப்பக்குவத்தை குழந்தைகளிடம் போதித்து வளர்த்தால் இது போன்ற கவிதைகள் எழவே இடமிராது. மனங் கவர்ந்தது கவிதை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சார்... இந்த கவிதை கேள்வி எழுப்ப முடியதவர்களுக்காய் கேள்வி எழுப்ப முடிந்த ஒரு பெண்ணின் கேள்வி அவ்வளவே... அதனால்தான் பின் குறிப்பையும் சேர்த்தே இட்டேன்...

      நீக்கு
  5. அருமையான கவிதை நீங்கள் குறிப்பிட்டுள்ள நிலையிலேயே இன்னும் அதிக சதவீத பெண்கள் உள்ளதே நித்சனம் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பலர் அப்படித்தான் இருக்கிறார்கள் தோழி...சரியான கேள்வி உங்கள் கவிதை! பெண்களும் சேர்ந்து திருந்த வேண்டும்...சில பெண்கள் நாம் அப்படித்தான் இருக்கவேண்டும், பெண்கள்..அப்படி எதாவது உளறினால் கோபம் தலைக்கு ஏறுகிறது....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சரியாக சொன்னீர்கள்... ஆண்களுடன் சேர்ந்து பெண்களும் திருந்தினால் அனைத்தும் சரியாகும்...

      நீக்கு