பக்கங்கள்

இக்கவிதை



என் வாசலில்
காத்துக் கொண்டிருக்கும்
மரணப் பிசாசின்
பயமற்ற தருணமொன்றில் - நான்
இக்கவிதையை எழுதுகிறேன்

என் வாழ்வின்
அர்த்தமற்றுப் போன
பல பொழுதுகளில்
ஏதேனும் ஒன்றை
அர்த்தப் படுத்துவதாய் - அது
அமைந்து விடக்கூடும்

நான் இரசித்த
இரசிக்காமல் விட்ட
எத்தனையோ பொழுதுகளில்
ஏதேனும் ஒன்றை - அது
தொட்டுச் செல்லக் கூடும்

என்னுள் கட்டுண்ட
என்னைக் கட்டுப்படுத்திய
எத்தனையோ வார்த்தைகளின்
சாராம்சமாய் - அது
மாறிவிடக் கூடும்

எது எப்படியோ
இப்பொழுது இந்தக்கணம்
இக்கவிதை என்பது
என்னால் எழுதப்பட்டுக்
கொண்டிருக்கிறது...


-- பிரியா

6 கருத்துகள்:

  1. இப்பொழுது... இக்கணம்... அதுதான் முக்கியம்! கவிதை உள்ளிருந்து பிரவகிக்கையில் எதையும் சொல்லலாம். மனக் கடலின் அலைகளின் பிரதிபலிப்புகளல்லவா...? அருமையாச் சொன்னீங்க! மிக ரசிக்க வைத்த கருப்பொருள் + வரிகள்!

    பதிலளிநீக்கு
  2. எழுதப்படும் இக்கவிதை அருமை... தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. எப்பொழுதும் உன்னால் எழுதிடமுடியும்
    இப்பொழுதும் உன்கவி இனிமையே
    செப்பாமல் முடியுமோ செந்தமிழழகை
    தப்பாமல் நானும் தருவேன் வாழ்த்துனக்கு!...

    அருமை! வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி... நிச்சயமாய் உங்கள் வாழ்த்துகளே என் எழுத்துகளுக்கு உற்சாக டானிக்

      நீக்கு