பக்கங்கள்

சிதறல் - 8


மரணம் 
-----------

முன் என்பதும் 
பின் என்பதும் 
யாரென்று 
அறியாத வரையில் - மரணம் 
என்னிடம் 
மரணித்தே கிடக்கிறது  


-----X-----

நினைவுகள்
----------------- 

தூர் வாரப்பட்ட குளமாய் 
மேலும் மேலும் நிறைகிறது 
எனக்குள் 
உன் நினைவுகள் 

-----X-----

அனைத்துமாய் 
---------------------

வேரும் விழுதுமாய் 
என்னுள் அனைத்துமாய் 
கட்டுண்டு கிடப்பது 
நான் மட்டுமே
அதனால்தான்
விழுவதிலும் துளிர்க்கிறேன்
விதையாயும் விழுதாயும் இருப்பதனால்
-----X-----

முடிவுகள்
---------------

எதோ ஒன்றின் 
முடிவை நோக்கிய தருணங்களில் 
எப்படி முடிப்பது 
என்ற எண்ணத்தில் 
அழுந்தி அழுந்தி 
கரைந்தே போகின்றன
நினைவுகள் - நிறைவுற்றதாய்  




-- பிரியா 

28 கருத்துகள்:

  1. அடேங்கப்பா... சிதறல் கவிதைகள் 8வது வரை வந்துவிட்டதா?.... நான்தான் லேட் போல... சரியான காட்டுக்குள் மாட்டிக்கொண்டதால் செல்போனுக்கும் சிக்னல் இல்லை... நெட்டுக்கும் சிக்னல் இல்லை...

    சிதறல்-8

    அனைத்துமே ஆத்மார்ந்த எண்ணக்கவிதைகள்...
    மரணம் என்னிடம் மரணித்தே கிடக்கிறது என்பதையும்
    என்னுள் அனைத்துமாய் கட்டுண்டு கிடப்பது நான் மட்டுமே என்பதையும் வெகுவாய் ரசித்தேன்...

    அற்புதமான சிந்தனை... எதையோ இழந்த தனிமைச்சூழலைத்தவிர வேறெங்கும் உற்பத்தி ஆகமுடியா கவிகள்...

    மிக மிக ரசித்தேன்...

    த.ம. தேவையான அளவு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் தோழரே... மிக நீ...ண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் வலைத்தளத்தில் உங்களை சந்திக்கிறேன்.... அதனால் என்ன? நீங்கள் அனைத்து சிதறல்களையும் நேரம் கிடைக்கையில் தாராளமாய் இங்கே வாசிக்கலாமே...

      உண்மைதான் பெரும்பாலான என் கவிதையின் பிறப்பிடம் தனிமை தான்... எனக்கு மிகவும் பிடித்ததாயும் அமைந்திருப்பதும் அதுவே... நன்றி... :)

      நீக்கு
  2. அனைத்தும் அருமை முக்கியமாய் அனைத்துமாய்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. சிதறல்கள் மனம் நனைத்து
    குளிர்வித்தது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வாக்குகளுக்கும் நன்றி சார்... :)

    பதிலளிநீக்கு
  5. சிதறியவை அனைத்தும் முத்துகள் பிரியா! கோர்த்து மாலையா தரவா1? இல்ல எதாவது கிராஃப்ட் செஞ்சுதரவா!?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா அக்கா நீங்க எது செஞ்சாலும் அழகுதான்.. எப்படி வேணுனாலும் கொடுங்க அக்கா... :)

      நீக்கு
  6. பதில்கள்
    1. நன்றி சுந்தரா முத்து மேடம் உங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் :).. தொடர்ந்து வாருங்கள்...

      நீக்கு
  7. சிதறிய கவித்துளிகள் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  8. முதல் கவிதையே முத்தாய்ப்பாய் உள்ளது...அருமை தோழி...

    பதிலளிநீக்கு
  9. மனதோடு நின்றது மரணம்

    அருமை ப்ரியா
    இனிய வாழ்த்துக்கள்
    13

    பதிலளிநீக்கு
  10. சிதறல்கள் என்று நீங்கள் சிதற வைக்கும் வார்த்தைத்துளிகள் சிதறிக்கிடந்தாலும் , ஏதோ ஒரு இணைவு அவைகளுக்குள் !! :) :) எப்போது தொடரட்டும் இணைவு !! மரணித்துக் கிடக்கும் மரணம்-நிறைக்கும் நினைவுகள்-கட்டுண்ட உங்களில்- கரையும் நினைவுகள் ..மரணம் ... :) (ஒரு வட்டத்தை உணர்கிறேன்...) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகச் சரி சகோ.... இந்த சிதறல் மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்து சிதறல்களுமே இப்படித்தான்... அவற்றினை கண் காணாத ஒரு கயிறு இணைத்திருக்கும்....

      நீக்கு
    2. கண் காணா கயிறு எந்தன் கண்ணுக்கு தெரியுதே அக்கா !! ( FYI இதே போல் ஒரு கமென்ட் ஐ நான் முன்பே இட்டிருக்கிறேன் )

      நீக்கு
    3. உன் கண்களுக்கு அது தெரியவில்லை என்றால் தான் யோசிக்க வேண்டும் தம்பி...

      நீக்கு
  11. மழைச் சாரல் போட்டு சிதறல் வந்து என்னை நனைத்தது ,அந்த சிதறலில் என் உள்ளம் குளிர்ந்தது!
    +1

    பதிலளிநீக்கு
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா உடனே பார்க்கிறேன்... தெரிவித்தமைக்கு நன்றி தனபாலன் சார்... :)

      நீக்கு