கசக்கிப் போட்ட
காகிதக் குப்பைகளின்
கசங்கல்களின்
இடைவெளியின் வழியே
ஒரு எழுத்தோ
ஒரு சொல்லோ
ஏதோ ஒன்று
ஏக்கப் பார்வையுடன் - என்னை
கணப்பொழுதின் துகள்களின்
இடைவெளியின் வழியே
அந்த ஏக்கத்தை
கண்டு கொள்கின்றன
என் கண்களும்
கேள்வியுடன்
ஏக்கமும், கேள்வியும்
சந்தித்த தொனியின்
இடைவெளிக்கிடையில்
நசுங்கிப் போகின்றன
பல கேள்விகளும்
சில பதில்களும்
-- பிரியா
மனதின் வலிகளும் அவ்வாறே போகட்டும்...
பதிலளிநீக்குநன்றி தனபாலன் சார்... எழுத்தே அதர்க்கான முயற்ச்சி தானே... :)
நீக்குகசங்கிய மனவலிகள் ?
பதிலளிநீக்குகசக்கி எறிய வேண்டும் என்ற எண்ணத்தில்
நீக்குவித்தியாசமான சிந்தனை....
பதிலளிநீக்குஅழகிய கவிதை
நன்றி சௌந்தர் சார்.... :)
நீக்கு//நசுங்கிப் போகின்றன பல கேள்விகளும் சில பதில்களும்//
பதிலளிநீக்குஆம்.. பல நேரங்களில்
அத்துடன் செர்ந்து இன்னும் சிலதும்... இல்லையா சகோ?
நீக்குஅருமையான சிந்தனை! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சார்... :)
நீக்குஅருமையான கவிதை!
பதிலளிநீக்குநன்றி அம்மா... :)
நீக்குசிதைந்து போகட்டுமே வலிகள்
பதிலளிநீக்குசெதுக்கட்டும் சிந்தனை மேலும்...!
மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ....!
மிக்க நன்றி தோழி.... சிதைந்து போக வேண்டும் என்ற ஆசைதான்.... :)
நீக்குஉள்ளத்தின் கசங்கல்கள்
பதிலளிநீக்குகிறுக்கும் வலிகள் இங்கே
காகிதங்களையும்
கசக்கிச் செல்கிறது ...!
அருமை வாழ்த்துக்கள் ப்ரியா
அருமையான கவிதை. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
நீக்குநன்றி அண்ணா... :)
நீக்குநன்றி விஜய் சார்... உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. :)
நீக்குவலி நிறைந்த வார்த்தைகள் இங்கே கவிதை வரிகளாக
பதிலளிநீக்குமிக அற்புதம் .வாழ்த்துக்கள் தோழி .இனிய கவிதை
வரிகளும் இனிதே தொடரட்டும் .
மிக்க நன்றி சகோ... நிச்சயம் தொடர்கிறேன்..
பதிலளிநீக்கு