பக்கங்கள்

நூல் அறிமுகம் - அபிதா


புத்தக அறிமுகங்கள் ஆரம்பிக்கப்பட்டு இது வரை மூன்று புத்தகங்களும் மொழி பெயர்ப்பு நூல்களாகவே அமைந்தன. பெரிதாக அதற்கென்று காரணங்கள் எதுவும் இல்லை. என்னுடைய வாசிப்பும் அவ்வரிசையில் அமைந்து விட்டதால் அறிமுகமும்  அவ்வாறே  அமைந்தது. இம்முறை அவ்வரிசையில் நான்  இங்கு எடுத்து வந்திருப்பது ஒரு அற்ப்புதமான காலங்கள் கடந்து நிற்க்கும் தமிழ் எழுத்தாளர் ஒருவரின் நாவல்.. நாவலின் பெயர் "அபிதா" .. எழுதியவர் "லா.ச.ரா" என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட லா. சா. ராமாமிருதம்.





ஒரு காதல் கொண்ட மனதின் பல்வேறு கால கட்ட துடிப்புகளே இந்த நாவல். உடனே இதை ஒரு சாதாரண காதல் கதை என்று நினைக்க வேண்டாம். கதையின் நாயகன் தான் காதலித்த நாயகியை ஒரு கட்டத்தில் பிரிந்து ஊரினையும் பிரிந்து, வெளியூர்  சென்று அங்கே வேறொருவரையும் மணம் புரிந்து கொண்டு பல ஆண்டுகளுக்குப் பின் சொந்த ஊருக்கு திரும்பி வருகிறார், தன்  மனைவியையும் அழைத்துக்கொண்டு!.

ஊருக்கு வந்து தன்னை வளர்த்த தன் மாமாவின் வீட்டில் தங்குகிறார். பின் தன காதலியின் வீட்டிற்கு சென்ற பார்க்க அந்த வீட்டில் ஒரு பருவ வயது பெண்ணைப் பார்க்கிறார், அச்சு அசல் அவரின் காதலியின் தோற்றத்தினூடே. ஒரு கணம் தடுமாறிப் போகிறார். மூப்பும் வயோதிகமும் அவளை மட்டும் அணுகாதது எப்படி என்று வியந்து போகிறார். பின்னர் தான் தெரிய வருகிறது அவருடைய காதலியும், அவருடைய தந்தையும் இறந்து விட்ட செய்தி, அத்துடன் அப்பெண் அவள் காதலியின் மகளென்றும். அந்த வீட்டில் இப்பொழுது அவர் காதலியின் கணவர் தனது இரண்டாம் மனைவியுடன் வசித்து வருகிறார் என்பதும்.

மனிதர் வேறு எதைப்பற்றியும் கூறாமல் அந்த குடும்பத்தின் பால்ய கால குடும்ப நண்பனாக அங்குள்ளவர்களுடன் பேசி விட்டுச் செல்கிறார். அதன் பின் நிதமும் அந்த வீட்டிற்கு வருவதும் அவர்களுடன்  பொழுதைக் கழிப்பதுமாக இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவர் மனைவியும் அவருடன் வந்து அந்த குடும்பத்தில் கலந்து விடுகிறார். அவர்கள் அதன் பின் அந்த வீட்டிலேயே தங்குகிறார்கள். ஆனால் இவை அனைத்தையும் அவர் செய்வது அந்த பெண்ணை(காதலியின் மகளை) பார்ப்பதற்காக மட்டுமே என்பது அவர் மனம் மட்டும் அறிந்த இரகசியம். இதனை தொடர்ந்து கதை ஒரு வித்தியாசமான பாணியில் பயணிக்கிறது, எதிர்பாராத பல திருப்பங்களுடன், எதிர்பாராத முடிவுடனும்.




நான் படித்த லா. சா.ரா வின் முதல் புத்தகம் இது. முதல் புத்தகத்திலேயே தன் கவித்துவமிக்க எழுத்தினால் கட்டிப் போட்டு விட்டார். பல இடங்களில் படிப்பது கதையா இல்லை கவிதையா  என்னும் அளவிற்கு அற்புதமான வார்த்தை கையாடல். இதை உண்மையில் படித்து அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அந்த உணர்வை வார்த்தைகளாய் விவரிக்க இயலாது. உங்களுக்கு ஒரு சிறந்த நாவலை படிக்க வேண்டுமென்ற தீராத ஆவல் உண்டா? அப்படியெனில் கட்டாயம் இந்நாவலைப் படியுங்கள். உயிர்மை காலச்சுவடு உள்ளிட்ட பல முன்னணி பதிப்பகங்களில் கிடைகிறது.


இணையத்தில் அழியாச்சுடர் பக்கத்தில் இந்நாவலின் ஒரு பகுதி மட்டும் வாசிக்கக் கிடைக்கிறது


வாசித்துப் பார்த்து எண்ணங்களைப் பகிருங்கள்.


குறிப்பு :   நான் நாவலின் பலமாய் இங்கே குறிப்பிட்ட அவரின் வார்த்தை நடை அமைப்பையே சிலர் குறையாய் சொல்வதும் உண்டு. லா.ச.ரா வின் எழுத்துக்களை முதலில் புரிந்து கொள்வது சற்றே கடினமாக இருக்கலாம். ஆனால் ஒருமுறை அவரைப் படித்து உங்களுக்குப் பிடித்துவிட்டால்அவரை விட்டு வெளி வருவது மிகவும் கடினம்.


--பிரியா


8 கருத்துகள்:

  1. விமர்சனம் நன்று... ரசிக்க வைத்தது... நல்ல குறிப்பு...

    பதிலளிநீக்கு
  2. லா.ச.ரா என்பது தான் சரியான பெயர்.இவரது சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிழையைத் திருத்திக் கொள்கிறேன் சகோ.... சிறுகதைகள் நான் இன்னும் படித்ததில்லை... முதல் தொகுப்பை வாங்கி வைத்துள்ளேன் இனிமேல்தான் படிக்க வேண்டும்... கருத்துக்கு நன்றி :)

      நீக்கு
  3. விமர்சனம் நல்லா பண்ணுறீங்க பிரியா!!

    பதிலளிநீக்கு
  4. ல.ச.ரா.வின் எழுத்துக்களை நான் வாசித்தது இல்லை ! கவித்துவம் என்று சொல்லிவிட்டீர்கள் !! கட்டாயம் அவர் எழுத்துகளுக்குள் மூழ்குகிறேன் :) :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கட்டாயம் படிக்கலாம்... நிச்சயம் ஏமற்றாது தம்பி....

      நீக்கு