பக்கங்கள்

என்னுயிர் தோழன்...

எதிர்காலம் இதுதானென்று
எதுவும் அறியாமல்
எண்ணச் சிக்கலில்
சிக்கித் தவிக்கையில்

உனக்கான பாதை
இதுதான் என்று
கைகாட்டியாய் நின்று
வழிகாட்டியாய் ஆனவன்

பகுத்தறிவு சித்தாந்தங்கள்
பலவும் கற்றறிவித்தான்
வாழ்வின் உன்னதங்கள்
எதுவென்று உணர்த்திட்டான்


தவறுகள் தவறிச்
செய்திட்டால் - உடன்
தயக்கங்கள் ஏதுமின்றி
தவறாமல் உரைத்திடுவான்

எந்தன் எழுத்தின்
வாசங்கள் எல்லாம்
மெல்லமாய் சொல்லாமல்
சொல்லிச் செல்லும்

எங்கள் கருத்துக்களின்
தரங்களின் முகவரி
இவர் தானென்று
அவனைக் காட்டி

இயற்க்கையின் நேசனவன்
இயல்பினில் புத்தனவன்
பெண்மையின் தோழனவன்
உண்மையின் வெளிச்சமவன்

அன்பினில் அன்னையாய்
கண்டிப்பில் தந்தையாய்
எல்லாமுமாய் என்னுடனிருக்கும்
என்னுயிர் தோழனவன்


--பிரியா

19 கருத்துகள்:

  1. ஆம் அத்தகையவனே
    உயிர்த்த்தோழனாய் இருக்கச் சாத்தியம்
    அற்புதமான படைப்புக்கும் தொடரவும்
    நல் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...

      நீக்கு
  2. நண்பன் / நட்பு என்றால் எப்படி இருக்க வேண்டும்...? என்பதை அருமையாக சொல்லி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. நீங்களும் ஒரு ஓட்டு இடலாம் என்று ஏற்கனவே மெயிலில் சொல்லி உள்ளேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் சார்...முதல் ஓட்டு வேறு ஒருவரிடம் இருந்து வரட்டும் என்று காத்திருந்தேன் அதனால்தான்... :)

      நீக்கு
  4. எண்ணத்தில் ஏற்றமும் மனதில் மாற்றம் வர உள்ளத்தில் எழுதும் உன்னத தோழனின் வெற்றிப்பாதை தொடர வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  5. நால்லாருக்குங்க ... கவிதை தோழனை போலவே , வாழ்விலும் தோழர்கள் அமையட்டும் ....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தோழனைக் குறித்து எழுதிய கவிதை தான் இது... நன்றி ஜீவன் :)

      நீக்கு
  6. ஒரு நண்பனுக்கான கவிதை
    வாசிக்கும்போதே எனக்குள் சில நினைவுகள்....!

    அருமை பிரியா வாழ்த்துக்கள் ப்ரியா

    பதிலளிநீக்கு
  7. நல்ல நட்பு! நல்ல கவிதை! வாழ்த்துக்கள்!

    தமிழ்மணத்தில் வாக்கும் அளித்துவிட்டேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி கவிப்ரியன் தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :) வாக்கினுக்கும் சேர்த்து நன்றிகள்... :)

      நீக்கு