பக்கங்கள்

சிதறல் - 5


நம் பொழுதுகள்

நான் உனக்காகவும் 
நீ எனக்காகவும்
பகிர்ந்தளித்த பொழுதுகள்
உனக்கானவையாயும்
எனக்கானவையாயும் 
பகிரப்படுகின்றன நினைவுகளில்...


நேரம்

நமக்கான 
நேரங்களும் மணித்துளிகளும் 
நம்முடையதாகவே இருக்கட்டும் 
வட்டியுடன் திரும்பினாலும்
முதலில் தொலைத்ததற்க்கு
முற்றிலும் ஒப்பாகாது.



பழைய தடங்கள்

நேற்றைய பொழுதின்
தடயங்களும் கூட
தொடர்வதில்லை 
இன்றைய பொழுதின்
சில நினைவுகளால்



அடங்கா காலம்

யாருக்கும் 
அடங்கா காலத்தை
தனக்குள் 
அடக்கும் முயற்ச்சியில்
"கடிகாரம்"







--- பிரியா

30 கருத்துகள்:

  1. அனைத்தும் அருமை... முக்கியமாக நேரமும் காலமும்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நேரம் என்ற தலைப்பில் வந்த குறுங்கவிதை மனதில் முதலிடம் பிடித்தது. மற்ற அனைத்துக் கவிதைகளும் சிறப்பே1 உங்களின் துளிப்பாக்கள் அனைத்தும் எங்களுக்கு மைசூர்ப்பாக்கள்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்... :) இந்த வாரத்திர்க்கு இன்னும் நிறைய இனிப்புகள் உண்டு வரிசை கட்டி... முதலில் வந்த மைசூர்ப்பாவைப் போல் அனைத்தையும் ரசித்து வாழ்த்திடுங்கள் சார்...

      நீக்கு
  3. அடங்காத காலமும்
    அழகிய நேரமும்
    அருமை ப்ரியா

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. வணக்கம்

    ரசிக்கும் படி உள்ளது கவி வரிகள் அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  5. அத்தனையும் அருமை! மிகவே ரசித்தேன்!

    நேரம் என்னை நிறுத்தியது!...

    வாழ்த்துக்கள் பிரியா!

    த ம.4

    பதிலளிநீக்கு
  6. ம்ம்ம்.....கந்து வட்டியுடன் திரும்பினாலும்...தொலைத்ததற்கு ஒப்பாவதில்லை! என்ன தொலைக்காமல் இருக்க முடிவதில்லை....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுவேதான் நிரோஷன்... தொலைத்து பின்பு வருந்துகிறோம்

      நீக்கு
  7. வட்டியுடன் திருப்பினாலும் முதலில் தொலைத்ததற்கு முற்றிலும் ஒப்பாகாது சத்தியமான வரிகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வியாபதி சார்... வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

      நீக்கு
  8. வழக்கம்போலவே இந்தச்சிதறல்களும் மிக மிக அருமை...

    பதிலளிநீக்கு
  9. பதில்கள்
    1. வேண்டாம் எனில் விட்டு விடலாம்... வருத்தப் படுவீர்களே என்று இட்டது :P

      நீக்கு
  10. யாருக்கும் அடங்கா காலம் அருமையான சிந்தனை...அழகு

    பதிலளிநீக்கு