கனவுகள் காண்கிறேன் நிதமும்
கண்ணே உன்னைக் கண்டிடும்
திருநாள் நோக்கியே!
தேசங்களின் தூரங்களின் மீது
இதுவரை இல்லாத கோபம்
வந்ததென்ன இப்போது உன்னாலே!
இன்னும் வெளிவராத உன்
மென் பாதங்களை - தாயின்
வயிற்றினூடே தொட்டுப் பார்த்திட
கணினியின் வழியே நுழைந்து
நீளாத என் கைகளின் மீது
நீங்காத கோபம் எனக்கு
சின்னதாய் நீ உதைத்திட
சிணுங்கிடும் உன்தாய் கண்டு
சிலிர்த்திட ஆசை நிறைய
என்ன சொல்வேன் கண்ணே
பணத்தினின் பின்னால் ஓடி
இழந்திட்ட விடயங்கள் ஏராளம்
பொறுத்திடு கண்ணே கொஞ்சம்
மண்ணில் நீ வரும் கணம்
வந்திடுவேன் நானும் பறந்தே
அள்ளி எடுத்து அணைத்திடவும்
உச்சி முகர்ந்து களித்திடவும்
ஆராரோ கீதம் பாடிடவும்....
தந்தையின் நிலைதனை அறிந்தே
அதுவரை கொஞ்சம் பொறுத்திரு
அன்னையுடன் சேர்ந்து களித்திரு.
---பிரியா
கணினியின் வழியே என் கைகள் நீளவில்லையென்று கோபம்...! யப்பா...! வேறு வழியேயில்லாமல் சந்தர்ப்ப சூழலினாலும் பொருளீட்டும் ஆவலினாலும் வெளிநாட்டிலிருக்கும ¢தகப்பனின் உணர்வை என்னமாய் பிரதிபலிச்சிருக்கீங்க...! சூப்பர்ப் ப்ரியா!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்...ஒரு தந்தையின் உணர்வுகளை சரியாக பிரதிபலிதிருக்கிறேனா என்ற சந்தேகம் இருந்தது உங்கள் பின்னூட்டம் உற்ச்சாகமளிக்கிறது.... :)
நீக்குநியாயமான ஏக்கம்
பதிலளிநீக்குநன்றி சார்... :)
நீக்குமிகச்சிறந்த வரிகள் உள்ளத்து உவமைகள் அற்புதம் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்.. :)
நீக்கு''கணினியின் வழியே நுழைந்து நீளாத என் கைகளின்மீது நீங்காத கோபம் எனக்கு'' ஒவ்வொரு வரியும் அருமையான கருத்துக்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி வியாபதி...:)
நீக்குதந்தையின் எண்ணத்தோட்டத்தில் எத்தனை பாசப்பூக்கள் மணம் வீசுகிறதம்மா..... கவிதை அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்... :)
நீக்கு