எண்ணக் கிறுக்கல்களின்
எல்லைக்குள் அடைந்து
நடைபோடும் நாட்களில்
மறைந்திருக்கிறது பலவற்றின்
தொடக்கமும் முடிவும்
அத்தனையும் அறிந்தும்
அருமைகள் புரிந்தும்
புரியாமலே தொடர்கின்றன
இடைப்பட்ட தேடலின்
இணையற்ற பயணங்கள்
தேடலின் அர்த்தங்கள்
புரிகின்ற தருணத்தில்
முடிவுகள் தொலைந்து
ஆரம்பங்கள் வந்திறங்கும்
அந்திநேரப் பொழுதாய்
உத்திரவாதங்கள் ஏதுமற்ற
உன்னத வாழ்க்கையிது
தொலைகிறது நகர்கிறது
துயரங்கள் தொலைக்கும்
திருப்பங்கள் நிறைந்ததாய
இருப்பினும் என்ன
கனவுகள் கலைக்கும்
கசடுகள் தவிர்த்து
இயல்பாய் தொடருவோம்
இனிதான வாழ்வதனை
--பிரியா
எல்லைக்குள் அடைந்து
நடைபோடும் நாட்களில்
மறைந்திருக்கிறது பலவற்றின்
தொடக்கமும் முடிவும்
அத்தனையும் அறிந்தும்
அருமைகள் புரிந்தும்
புரியாமலே தொடர்கின்றன
இடைப்பட்ட தேடலின்
இணையற்ற பயணங்கள்
தேடலின் அர்த்தங்கள்
புரிகின்ற தருணத்தில்
முடிவுகள் தொலைந்து
ஆரம்பங்கள் வந்திறங்கும்
அந்திநேரப் பொழுதாய்
உத்திரவாதங்கள் ஏதுமற்ற
உன்னத வாழ்க்கையிது
தொலைகிறது நகர்கிறது
துயரங்கள் தொலைக்கும்
திருப்பங்கள் நிறைந்ததாய
இருப்பினும் என்ன
கனவுகள் கலைக்கும்
கசடுகள் தவிர்த்து
இயல்பாய் தொடருவோம்
இனிதான வாழ்வதனை
--பிரியா
நாமாக பாதி, தானாக பாதி - தொலைத்ததும் தொலைந்ததும். ம்ம்ம்...!துயரங்கள் தொலைக்கும் திருப்பங்கள்....யோசிக்கவைக்கும் சொல்லாடல்.
பதிலளிநீக்கும்ம்... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிரோஷன்...
நீக்குகவிதை அருமை..விழிகாட்டிய வழியில் எல்லாம் சென்றுவிட்டு மனிதமனம் பழிபோடுவதோ பாதையின்மீது.
பதிலளிநீக்குஉண்மைதான்... மிக்க நன்றி கலியபெருமாள் சார்... தொடர்ந்து வாருங்கள்..
நீக்குஅருமையான கவிதை.
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார்... தொடர்ந்து வாருங்கள்...
நீக்குபுரியாமலே தொடர்வதால்தான் வாழ்க்கையின் எல்லை காண நாமும் பயணிக்கிறோம்...
பதிலளிநீக்குஅருமை! நல்ல கற்பனை!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.3
புரிதலுக்கான தேடல்தானே பயணங்களின் ஆரம்பம்... நன்றி தோழி...
நீக்குமிக்க நன்றி சார்... :)
பதிலளிநீக்கு'அத்தனையும் அறிந்தும், அருமைகள் புரிந்தும்,
பதிலளிநீக்குபுரியாமலே தொடர்கின்றன-- இடைப்பட்ட தேடலின்
இணையற்ற பயணங்கள்'. அருமையான வரிகள் பாராட்டுக்கள்
மிக்க நன்றி வியாபதி சார்... :)
நீக்குபுரிதலுக்காய் அலைகிற தேடல்...! இடைப்பட்ட தேடலின் இணையற்ற பயணங்கள்! வார்த்தைகள் ஒவ்வொன்றும் அயர வைக்கின்றன; ரசிக்க வைக்கின்றன. அருமைங்க ப்ரியா!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்... நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் பின்னூட்டம்... மகிழ்ச்சியாய் இருக்கிறது...
நீக்குஎண்ணக் கிறுக்கல்களின் எல்லைக்குள் அடைந்து நடைபோடும் நாட்களில் மறைந்திருக்கிறது பலவற்றின் தொடக்கமும் முடிவும்! உண்மை அருமை
பதிலளிநீக்குமிக்க நன்றி நாகா சார்.. :)
நீக்குஇருப்பினும் என்ன
பதிலளிநீக்குகனவுகள் கலைக்கும்
கசடுகள் தவிர்த்து
இயல்பாய் தொடருவோம்
இனிதான வாழ்வினை,,,,,,,,,,,,,,,,,,,அருமை பிரியா
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி அண்ணா.. :)
நீக்குசிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)
நீக்குதேடலில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் பொதிந்திருக்கிறது! எல்லாமே புரிந்து விட்டால் அந்த சுவாரசியம் மரணித்து விடும்! நீங்கள் சொல்வது மாதிரி, உத்திரவாதங்கள் ஏதுமற்ற இந்த உன்னத வாழ்க்கையில் கலைந்து போன கனவுகளையும் அவற்றின் கசடுகளின் சுவடுகளையும் அழித்து விட்டு இனிமையுடன் இந்த வாழ்க்கைப்பாதையைத்தொடர்ந்து செல்வோம்!
பதிலளிநீக்குமிக அருமையான,தமிழ் விளையாடும் இனிய கவிதை ப்ரியா! அன்பு வாழ்த்துக்கள்!!
பழைய கசடுகள் தானே நிகழ்கால சுவாரஸ்யங்களை மறைக்கின்றன அதனால்தான் உரைத்தேன் கசடுகளின் சுவடுகளும் சேர்த்து கலையட்டும் என்று...மிக்க நன்றி அம்மா.. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... :) தொடர்ந்து வாருங்கள்...
நீக்கு