பாகம் - 2
பாட்டி கொடுத்த டீ மற்றும் பிஸ்கட் இரண்டையும் சாப்பிட்டுக் கொண்டே முகிலன் ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்படியே எதிரில் இருந்த கடைகளின் பக்கம் அவன் பார்வை சென்றத ஒரு ஒரு கடையாய் நோட்டமிட்டு கொண்டே வந்தவன் பார்வை அங்கே பேக்கரியில் நிலைத்து நின்றது.
பேக்கரி முதலாளி யாரிடமோ தன் கடையில் முன்புறம் வைக்கப் பட்டிருந்த முதியோர் இல்லத்திற்கான நிதி உதவி பெட்டி குறித்து உரக்க பேசிக் கொண்டிருந்தார்.இந்த காலத்துல யாரு சார் வயசுல பெரியவங்களுக்கு மதிப்பு கொடுக்குறாங்க, எல்லாம் முதியோர் இல்லத்துல அனாத மாறி சேத்தி விடறாங்க. அதுனாலதான் சார் அந்த மாறி உள்ளவங்களுக்கும் அப்படியான இல்லங்கள பெரிய மனசோட நடத்திட்டு வர்றவங்களுக்கும் நம்மால முடிஞ்சத செய்வோம்னு....
அவரது பேச்சை கேட்டுக்கொண்டே பார்வையை திருப்பிய முகிலனின் கண்கள் அந்த சாலையோர வளைவில் நிலைத்து நின்றது.அப்போது அந்த சாலையின் திருப்பத்தில் ஒரு முதியவர் தள்ளாடி தள்ளாடி நடந்து வந்து கொண்டிருந்தார். மேலே கிழிசலான கருப்பு நிற உடை, பல நாட்களாய் சரி செய்யப்படாத காரணத்தால் முடி நன்கு வளர்ந்து சடை போட்டிருந்தது, தாடியும் வளர்ந்து வயிறு வரை இருந்தது. அவரின் தோற்றமே அவரின் நிலையை நன்கு உணர்த்தியது.
அவர் மெல்ல நடந்து வந்து எதிரே இருந்த கடைகளின் ஒவ்வொன்றின் முன்னேயும் நின்று கையேந்தி ஏதோ கேட்டுக்கொண்டே வந்தார். அவரின் தோற்றமே அவர் எதற்காக கையேந்துகிறார் என்பதை நன்கு உணர்த்தியது. முதலில் கேட்ட தையல் கடைக்காரர் வேகமாய் வெளியே வந்து ஒரு நாணயத்தை அவர் கையில் வைத்து விட்டு சென்றார். அடுத்ததாய் பேக்கரி.
பேக்கரிகாரர் ஏனோ அவரைப் பார்த்ததுமே விரட்டி அடித்தார்" போ போ ஏவாரம் ஆகுற நேரத்துல கட முன்னாடி வந்து நின்னுட்டு, இப்படி நின்னா கடைக்குள்ள யாரு வருவா நகுந்து போ" என்று சத்தமிட்டவாறே படிகளில் இறங்கி வந்து துரத்தினார்.முகிலனுக்கு சற்றுமுன் அவர் பேசிய வார்த்தைகள் அனைத்தும் காதில் மீண்டும் ஒலித்தது. முகிலனின் முகத்தில் ஒரு விரக்தி புன்னகை தோன்றி மறைந்தது.
பெரியவரும் அங்கிருந்து அமைதியாய் நகர்ந்து கார் புரோக்கர் ஆபீஸ் முன் நிற்க அங்கே வெள்ளையும் சொள்ளையுமாய் இருந்த பெரிய மனிதர்கள் யாருக்கும், பாவம் கருப்பு சட்டை அணிந்த அந்த முதியவர் கண்ணில் படவே இல்லை. அடுத்ததாய் அந்த மாட்டுத் தீவனக் கடைக்காரர். அவர் மேஜையில் அமர்ந்தவாறே அப்படியே தூங்கி விட்டிருந்தார்.பெரியவர் ஏதும் பேச இயலாதவராய் அங்கிருந்து மெதுவாய் நகர்ந்தார்.
இவற்றையெல்லாம் முகிலனும் அருகில் நின்றவாறே டீ கடை பாட்டியும் சாலையின் இந்த பக்கமாய் நின்றவாறே அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.
(தொடரும் )
முதல் பாகத்தை படிக்க விரும்புவோர் இங்கே படிக்கலாம்..
--பிரியா

பேச்சும் செயலும் வெவ்வேறான மனிதர்கள்! அருமை! தொடர்கிறேன்! நன்றி!
பதிலளிநீக்குபல்வேறுபட்ட மனிதர்களின் பிரதிபளிப்பு... மிக்க நன்றி தங்கள் கருத்திருக்கு... நிச்சயம் தொடருங்கள்
நீக்குமனிதர்களின் பேச்சுக்கும் நடத்தைக்கும் உள்ள முரண்பாட்டைக் கண்டு பல முறை வியந்ததுண்டு நான். அழகாக எழுத்தாக்கி ரசிக்க வைத்து விட்டீர்கள். தொடரும் பகுதியைப் படிக்க உடன் விரைகிறேன்.
பதிலளிநீக்குநாம் வாழ்வில் சந்திக்கும் பல மனிதர்களின் பிரதிபலிப்பே இங்கே பாத்திர வடிவமாய் உருப்பெற்று உள்ளது சார்..
நீக்கு