புரியாத புதிர்
-------------------
எத்தனை முறைதான் எரிப்பது
துளிர்க்காத மரத்தின்
நனையாத வேர்களை....
---X---
சலித்துப்போகிறேன்...
-------------------------------
கேட்டுக் கேட்டு
பெறாத பதில்களுக்கு
எத்தனை கேள்விகள்
விடாத மழையாய்
---X---
மீண்டும் மீண்டும்
--------------------------
சலித்துப் போயின
கண்ணகியின் பரல்கள்
கோவலன் சபையில்
எத்தனை முறைதான்
பட்டுத் தெறிப்பது
நீதியற்ற நியாயத்திற்க்காய்....
---X---
நிச்சயமாய்.....
----------------
அவிழ்ந்து விழும் நுனியின்
கடைசி முடிச்சுடன்
மொத்தமாய் விழுவர்
இந்த துச்சாதனர்கள்
என்றாகிலும் ஒரு நாள்....
----------------
அவிழ்ந்து விழும் நுனியின்
கடைசி முடிச்சுடன்
மொத்தமாய் விழுவர்
இந்த துச்சாதனர்கள்
என்றாகிலும் ஒரு நாள்....
--பிரியா
அருமையான வரிகள்! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் சகோ... :)
நீக்குதுச்சாதனர்களுக்கு இந்தச் சாட்டையடி உறைக்குமா என்ன...? வரிகள் வேதனையும் கோபமும் ஒருங்கே கொண்டு சுள்ளென்று விழுந்திருக்கின்றன. நன்று.
பதிலளிநீக்குஎன்ற்றைகானும் உறைக்கும் என்ற நம்பிக்கையில் தானே அண்ணா நகர்கிறோம்.... ஹ்ம்ம் எழுத்தில் மட்டும் தானே காட்ட முடிகிறது
நீக்கு