தடைகளின்றி
நிறைவேறாத
பலவற்றுடன்
நிறைவேறிய
ஒன்றாய்
நகர்ந்து
செல்கிறது - இந்த
நீண்ட
வாழ்க்கை
----X ----
தொலைதல்
அறிவிப்பு பலகைகள்
இருப்பதே இல்லை
வாழ்க்கைப் பாதையில்
அதனால்தானோ என்னவோ
அடிக்கடி தொலைகிறோம்
மீண்டாளும்....
----X ----
எதனைக் கொண்டு?
எழுத்தினைக் கொண்டு
காயம் துடைப்பேன்
எண்ணங்களைக் கொண்டு
மனதினை நிறைப்பேன்
எதனைக் கொண்டு
வாழ்வினைக் கடப்பேன் ?
அறியவேயில்லை...
----X ----
என் வானம்
நீங்கள் என்னை
கூண்டுக்குள் அடைக்கலாம்
என்ன செய்ய
எனக்கு
அங்கேயும்
---பிரியா
முதல் மூன்றில் வாழ்வின் பிடிமானமற்ற பிடியை அசைபோட்ட மனதிற்கு, கடைசி கவிதை ஆறுதல் சொல்லியது !,
பதிலளிநீக்குஇப்போ எனக்கு ஒரு பாரதி பாட்டு நியாபகம் வருது :) "நின்னை சரணடைந்தேன்" னு சோக ரேகையோடு பாடிக்கொண்டே போய் !, கடைசிலே "துன்பம் இனியில்லை சோர்வில்லை...சோர்வில்லை,தோற்பில்லை னு முடிப்பான் " :) சோக ரேகைக்கு நம்பிக்கை ரேகைக்குள் சமாதி கட்டும் சாமர்த்தியம் ! சிதறல்கள் சேர்ந்து கொண்டன ! கடைசி கவியில் !
அப்படியா... நின்னை சரனடைந்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடல்களில் ஒன்று, அத்துடன் என் கவிதைகளை ஒப்பிட்டமைக்கு நன்றி தம்பி... உண்மையை சொல்லப் போனால் நானும் அப்படியான அமைப்பினை தரும் பொருட்டே கவிதைகளை வரிசைப் படுத்தினேன்....
நீக்குஅனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி தனபாலன் சார்... :)
நீக்குஎன்-வானம்...- அருமை!
பதிலளிநீக்குமிக்க நன்றி உஷா மேம்...
நீக்குதொலைதலும் வானமும் இன்னும்
பதிலளிநீக்குதொலையவில்லை நினைவை விட்டு
அருமை பிரியா
வாழ்த்துக்கள்
அப்படியா மிக்க நன்றி அண்ணா.... :)
நீக்குதொலைதலும் மீளலும் தொட்டதே வாழ்வு
பதிலளிநீக்குஉலைதலும் உண்டென் றுணர்!
சிதறல்கள் அனைத்தும் சிலிர்க்க வைத்தது!
ஆனாலும் அதில் ’தொலைந்து’ போனேன் நான்..:)
அருமை! வாழ்த்துக்கள் பிரியா!
த ம.3
மிக்க நன்றி தோழி தங்கள் வாழ்துக்கும் வாக்குக்கும்... :)
நீக்குஎன்னை கூண்டுக்குள் அடைத்தாலும் என்ன செய்ய அங்கேயும் ஒரு வானம் தெரிகிறதே இது உயிர்வான சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரி
பதிலளிநீக்குமிக்க நன்றி கவி நாகா சார்... :)
நீக்குகூண்டினுள் அடைத்தாலும் வானம் தெரிவதை மிக ரசித்தேன் ப்ரியா...! பல பெண்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே அதுதானே...! எதனைக் கொண்டு வாழ்வைக் கடப்பது? யோசித்துப் பார்த்ததில் என் மனசுக்குத் தோன்றிய ஒன்று : புன்னகை! சரியான்னு நீங்கதான் சொல்லணும்!
பதிலளிநீக்குஉண்மைதான் சார்... புன்னகை என்பதும் சரிதான்... நன்றி சார்... :)
நீக்குகவிதைகள் அருமை...
பதிலளிநீக்குமிக்க நன்றி குமார் சார்... :)
நீக்கு