நட்பெனும் பெயர் கொண்ட
ஒற்றைப் பாதையில்
நாம் இப்பொழுது
ஏதொன்றும் அறியா
கணித்தறிய முடிந்திடா
காலத்தின் முடிவில்
என்றேனும் ஒருநாள்
என் பாதை
தனித்து பிரிந்தாலும்
நிச்சயம் ஒருநாள்
வந்திடுவேன் உனைத்தேடி
மகிழ்ந்திட்ட நாட்களின்
எச்சங்களில்
மீண்டும் வாழ்ந்திட
அன்று நான்
அனுப்பி வைக்கும்
துண்டுச் சீட்டின்
ஓற்றை வார்த்தை
உணர்த்திச் செல்லும்
வந்திருப்பது யாரென்பதை
அதற்காகவே
வைத்திருக்கிறேன்
எனக்கே எனக்கென்று
உனக்கானதொரு
"செல்லப் பெயரை"....
---பிரியா
----------------
பதிலளிநீக்குஎதுவும் சொல்வதற்கில்லை என்று கூறுகிறீர்களா... புரியவில்லையே
நீக்குஅஹா... அருமையான கவிதை...
பதிலளிநீக்குநன்றி குமார் சார்... :)
நீக்குசெல்லப் பெயரிட்டுச் சிங்கார மாய்க்கூவி
பதிலளிநீக்குவெல்லும் விளையாட்டில் மேவு!
ரசிக்க வைத்த கவிவரிகள் பிரியா!
வாழ்த்துக்கள்!
த ம.3
நன்றி சகோ... :)
நீக்குஅசத்தல கவிதை...
பதிலளிநீக்குநல்லதொரு சிந்தனை...
ரசித்தேன்
மிக்க நன்றி சௌந்தர் சார்... :)
நீக்குபிரியாவின் செல்லப்பெயர் நல்லப்பெயராய் இருக்கட்டும்
பதிலளிநீக்குஹாஹா நன்றி ஐயா... :) தங்கள் வாக்கு பளிக்கட்டும்
நீக்குநல்லது... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎனது தளம் தெரியும் தானே...?
தொடர வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன் சார்... அச்சோ தங்களின் தளம் தெரியாமல நான் உங்களுடைய இப்போதைய பதிவு வரை அனைத்தையும் படித்தென் வேலைப் பளுவின் காரணமாக கமெண்ட் இடவில்லை மன்னிக்கவும் சார்...
நீக்குநல்ல கவிதை பிரியா..
பதிலளிநீக்குநன்றி கோவை ஆவி சார்... :)
நீக்குஉங்கள் செல்லப் பெயர் நல்லப்பெயர் வாங்க வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி கலியபெருமாள் சார்... :)
நீக்குஅருமை பிரியா
பதிலளிநீக்குநன்றி அண்ணா...
நீக்கு