பக்கங்கள்

சிதறல் -6

தடைகளின்றி 

நிறைவேறாத 
பலவற்றுடன் 
நிறைவேறிய 
ஒன்றாய் 
நகர்ந்து 
செல்கிறது - இந்த 
நீண்ட 
வாழ்க்கை 


----X ----

தொலைதல் 

அறிவிப்பு  பலகைகள் 
இருப்பதே இல்லை 
வாழ்க்கைப் பாதையில் 
அதனால்தானோ என்னவோ 
அடிக்கடி தொலைகிறோம் 
மீண்டாளும்....


----X ----

எதனைக்  கொண்டு?

எழுத்தினைக் கொண்டு 
                       காயம் துடைப்பேன் 
எண்ணங்களைக் கொண்டு 
                       மனதினை நிறைப்பேன் 
எதனைக் கொண்டு 
                       வாழ்வினைக் கடப்பேன் ?
அறியவேயில்லை...


----X ----



என் வானம் 

நீங்கள் என்னை
கூண்டுக்குள் அடைக்கலாம் 
என்ன செய்ய 
எனக்கு 
அங்கேயும் 
வானம் தெரிகிறதே....




---பிரியா 

16 கருத்துகள்:

  1. முதல் மூன்றில் வாழ்வின் பிடிமானமற்ற பிடியை அசைபோட்ட மனதிற்கு, கடைசி கவிதை ஆறுதல் சொல்லியது !,
    இப்போ எனக்கு ஒரு பாரதி பாட்டு நியாபகம் வருது :) "நின்னை சரணடைந்தேன்" னு சோக ரேகையோடு பாடிக்கொண்டே போய் !, கடைசிலே "துன்பம் இனியில்லை சோர்வில்லை...சோர்வில்லை,தோற்பில்லை னு முடிப்பான் " :) சோக ரேகைக்கு நம்பிக்கை ரேகைக்குள் சமாதி கட்டும் சாமர்த்தியம் ! சிதறல்கள் சேர்ந்து கொண்டன ! கடைசி கவியில் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... நின்னை சரனடைந்தேன் எனக்கு மிகவும் பிடித்த பாரதியின் பாடல்களில் ஒன்று, அத்துடன் என் கவிதைகளை ஒப்பிட்டமைக்கு நன்றி தம்பி... உண்மையை சொல்லப் போனால் நானும் அப்படியான அமைப்பினை தரும் பொருட்டே கவிதைகளை வரிசைப் படுத்தினேன்....

      நீக்கு
  2. தொலைதலும் வானமும் இன்னும்
    தொலையவில்லை நினைவை விட்டு

    அருமை பிரியா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. தொலைதலும் மீளலும் தொட்டதே வாழ்வு
    உலைதலும் உண்டென் றுணர்!

    சிதறல்கள் அனைத்தும் சிலிர்க்க வைத்தது!
    ஆனாலும் அதில் ’தொலைந்து’ போனேன் நான்..:)

    அருமை! வாழ்த்துக்கள் பிரியா!

    த ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி தங்கள் வாழ்துக்கும் வாக்குக்கும்... :)

      நீக்கு
  4. என்னை கூண்டுக்குள் அடைத்தாலும் என்ன செய்ய அங்கேயும் ஒரு வானம் தெரிகிறதே இது உயிர்வான சிந்தனை வாழ்த்துக்கள் சகோதரி

    பதிலளிநீக்கு
  5. கூண்டினுள் அடைத்தாலும் வானம் தெரிவதை மிக ரசித்தேன் ப்ரியா...! பல பெண்களை இன்னும் உயிர்ப்புடன் வைத்திருப்பதே அதுதானே...! எதனைக் கொண்டு வாழ்வைக் கடப்பது? யோசித்துப் பார்த்ததில் என் மனசுக்குத் தோன்றிய ஒன்று : புன்னகை! சரியான்னு நீங்கதான் சொல்லணும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சார்... புன்னகை என்பதும் சரிதான்... நன்றி சார்... :)

      நீக்கு