பக்கங்கள்

வெற்று அறிவிப்புகளும், முரண்பட்ட நீதியும்

வெற்று அறிவிப்புகள்
ஓங்கி ஓங்கி ஒலிக்கின்றன
எங்கேனும் வெள்ளம் பாதித்த
எங்கேனும் கட்டிடம் இடிந்த
எங்கேனும் தீ பிடித்த
ஒவ்வொரு காலையிலும்

இந்த அறிவுப்புகள்
இங்கே எதை
நிவர்த்திக்க முடியும்
எரிந்த கட்டிடங்களில்
எந்த உயிரைத் தந்திட முடியும்?
இடிபாடுகளின் மத்தியில்
எதைத் தேடிக் கொடுக்கும்?
அலையோடும் வெள்ளத்தில்
இவைகள் எத்தகைய
படகுகளைக் கொண்டு வர முடியும்?
ஒன்றுமே புரியவில்லை - இதில்
காலம் கடந்து வரும்
நீதியற்ற நீதித் தீர்ப்புகள்
இன்னொருவகை

எரிந்து போன பிஞ்சுகளைப் போல
கட்டிட இடிபாடுகளைப் போல
வெள்ளம் அடித்த
ஊரினைப் போல
இந்த நீதிவான்களும்
மொத்தமாய் உருமாற்றம் ஆனால் தான் என்ன?

இவர்களின் இந்த
அநீதியான நீதி
எதைச் செய்து விட முடியும்
இவைகள் யாருக்கானவை?
வெற்று அறிக்கைகளைப்
போலத்தான் அவையும்
பயனொன்றும் இல்லாமல்.....



-- பிரியா

4 கருத்துகள்:

  1. வணக்கம்

    இந்த சம்பவம் நடந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது.. நேற்று அறிவிப்பு வந்தது. தீர்ப்பு வழங்குவதாக.. தீர்ப்பை ஒட்டி வெளியான கவிதை நன்றாக உள்ளது... பகிர்வுக்கு நன்றி
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தீர்ப்பு அத்தனை நன்றாக இல்லை... இது போன்ற தீர்ப்புகள் இந்திய நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மேலும் மேலும் குறைத்துக் கொண்டே வருகிறது

      நீக்கு
  2. சமூகத்தின் மீது உள்ள கோவமும் ஆதங்கமும் தெரிகிறது

    பதிலளிநீக்கு
  3. வெற்று அறிவிப்புக்களாகிவிட்ட நீதி! அருமை! சிறப்பான கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு