பக்கங்கள்

நடந்தேறா முயற்சி

சிறிது நாட்களாக
சில நினைவுகளை
அழிக்கும் முயற்ச்சியில்
ஈடுபட்டுள்ளேன்
தீவிரமாக

ஒரு கரும்பலகையை
சுத்தம் செய்வதுபோல் - அது
அத்தனை சுலபமாய்
இருப்பதில்லை

பாத்திரத்தில் வடித்த
எழுத்துக்களைப் போல் -
அவைகளின் ஆழம்
கொஞ்சம் அதிகம்

நீக்க நினைக்கையில்
நிச்சயம் எச்சங்களை
விட்டே செல்லும்
கீறல்களாக

இருப்பினும் ஏதேனும்
ஒரு வகையில் அத்தனையும்
அழித்தொழிக்க முயல்கிறேன்

சேதாரங்கள் மட்டும்
சற்றே குறைவாக
இருக்கும்படி




--பிரியா

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    தீயதை அழித்துவிடுங்கள் நல்லதை சேமியுங்கள்
    கவிதையில் கூறிய விதம் கண்டு மகிந்தேன் பகிர்வுக்கு வாழ்த்துக்கள் த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி ரூபன் உங்கள் வாழ்த்துக்கும் வாக்கினுக்கும்

      நீக்கு
  2. பதில்கள்
    1. நினைக்க மட்டுமே முடியும் அண்ணா பல நேரங்களில்

      நீக்கு
  3. சீக்கிரம் அழிச்சுடுங்க. இல்லாட்டி அது உங்களை அழிச்சுடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முயற்ச்சி மட்டுமே செய்ய முடியும் அக்கா... அது மட்டுமல்லாமல் இக்கவிதை என் சொந்த அனுபவம் அல்ல அக்கா.... வேறொன்றின் தொடர்ச்சி

      நீக்கு
  4. அழகிய கவிதை! அற்புதமான சிந்தனை!
    அழிப்பது என்பது இலகுவானதா பிரியா?
    அழிந்திடுமா விரைவில்...

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாய் இலகுவானது இல்லைதான் சகோ... ஆனால் சில தேவையற்றவையை நீக்கலாம் இல்லையா

      நீக்கு
  5. மனதில் எழுதிய எழுத்துக்கள் அவ்வளவு சீக்கிரம் அழியாது! உண்மைதான்! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. வணக்கம்
    இன்று தங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்று பார்வையிட முகவரி இதோ.
    http://blogintamil.blogspot.com/2014/08/raja-day-7.html?showComment=1409445973167#c7251801609786561377

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  7. வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்,
    http://blogintamil.blogspot.com/2015/03/blog-post_5.html

    பதிலளிநீக்கு