பக்கங்கள்

சிதறல் - 7

கவிதையின் பிறப்பு 
-------------------

ஒற்றைக் கோப்பை 

கொஞ்சம் தேநீர் 
நிறைய கண்ணீருடன் 
பிறக்கின்றன 
பல கவிதைகள் 



-----X-----

வலி 
------


நிராகரிப்பைக் காட்டிலும்
மிகப்பெரிய வலியாய்
வேறொன்றும் இருப்பதில்லை


                                                -----X-----

உயிர் 
-------

விட்டுக் கொடுக்கவே இயலாத 
படிமங்களின் வழியே 
கசிந்து கொண்டே இருக்கிறது - உயிர் 
இன்றும் நேற்றும் நாளையும்...


                                               -----X-----


அழியாமல் 
----------------

நேற்றைக்கும் 
நாளைக்குமான கோலங்கள் 
காற்றோடு கலந்தாலும் 

வரைவதை மட்டும்
நிறுத்தவேயில்லை மனது  








-- பிரியா 

12 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஒவ்வொரு தலைப்பிலும் எழுதிய கவி வரிகள் சிறப்பு மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அனைத்தும் அருமை... உண்மையும் கூட... தொடர வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. ''நிராகரிப்பைக் காட்டிலும் மிகப் பெரிய வலியாய் வேறொன்றும் இருப்பதில்லை'' உண்மைதான். நிராகரிக்கப் படும்போதுதான் அது புரியும்

    பதிலளிநீக்கு
  4. சிந்திக்கத் தோணும் சிதறல்கள் எல்லாமே
    விந்தை செதுக்கும் விருந்து !

    அருமை ப்ரியா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    3

    பதிலளிநீக்கு
  5. எல்லாச் சிதறல்களும் அருமையாக இருந்தாலும் ‘வலி’ சற்றுக் கூடுதலாக! உண்மையில் நிராகரிப்பு, புறக்கணிப்பைப் போன்ற வலிதரும் விஷயம் வேறெதுவும் இல்லைதான்!

    பதிலளிநீக்கு
  6. கவிதையின் பிறப்பு...

    கொஞ்சம் கண்ணீரும் சேர்ந்துதான் கவிதையின் பிறப்பிடம் என்று சொல்லியிருப்பது நெஞ்சை வருடிய நிஜம்...

    உயிர்...
    விட்டுக்கொடுக்கவே முடியாத படிமங்களின் வழியே உயிர் கசிந்து கொண்டேயிருப்பதாய் தீட்டியிருப்பது அற்புதமாய் ரசிக்கவைத்தது... மிக ஆழமான சிந்தனை... இப்படியொரு வரிகளைத்தீட்டியதில் நிச்சயம் நீங்கள் கர்வம் கொள்ளலாம்...

    அழியாமல்...

    வரைவதை மட்டும் நிறுத்தவேயில்லை மனது....
    சூப்பர்.... இதுபோன்ற வாழ்வியல் யதார்த்தத்தை வருடிச்செல்லும் கவிதைகள் எப்போதுமே என் ஸ்பெஷல் ரசனைக்குரியது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சாய்ரோஸ்... இத்தனை அருமையான விளக்கமான விமர்சனத்திற்காகவே, சிதறல்கள் எப்பொழுதும் காத்திருக்கிறது... இது போன்ற விமர்சனங்களே மேலும் மேலும் எழுத வைக்கின்றன....

      நீக்கு