பக்கங்கள்

நட்சத்திரக் கூரையினடியில்



உங்களில் எவரும்
இரவு வானில்
மின்மினியாய் மின்னும்
நட்சத்திரங்களை இரசித்ததுண்ட
என்றாகிலும்?
இந்த நட்சத்திரக் கூரைக்கடியில்
என்னவெல்லாம் நடக்கும்
யோசித்ததுண்ட
எந்நாளும்?


இந்த நட்சத்திரக் கூரைக்கடியில்,

போர்களால் நசிந்த
ஒரு தேசத்தின் குடிமகன்
விடியலுக்கான ஒளியை
தேடிக்கொண்டிருக்கலாம்

ஒரு அகதி முகாமில்
காரணமே அறியாமல்
யாரோ ஒருவர்
தன்நாட்டவராலே
துன்புறுத்தப்படலாம்


இந்த நட்சத்திரத்தின் பார்வையில்,

மனைவியெனும் பேரில்
தன்  நிலைகளைக் கடந்து
பெண்ணொருத்தி கணவனின்
"பசியாற்றிக்" கொண்டிருக்கலாம்

குடும்பத்தின் நிலைகருதி
காலநேரம் கடந்து
கணவனொருவன்
கடமையாற்றிக் கொண்டிருக்கலாம்



இந்த நட்சத்திரம்,

பிழைப்பின் காரணம்
தேசாந்திரம் செல்லும்
தலைவனின் மனதில்
தலைவியின் காதலை
வருத்தத்துடன் விதைத்துச்
செல்லலாம்

காதல் கொண்ட
இளம் நெஞ்சமொன்றில்
பல வரிகளை விதைத்து
புது கவிஞர்களை
உருவாக்கிச் சிறக்கலாம்

கண் கூசும் இதன்  ஒளியினடியில்,

வாழ்வின் வெளிச்சம்
சிறிதுமற்ற யாரோஒருவர்
வாழ்க்கைத் தூண்டிலுடன்
விதியை வளைக்கலாம்

காலத்தின் பிடியான
மரணத்தில் பிழைக்க
யாரோ ஒருவர்
விளக்கின் வெளிச்சத்தை
துணைக்கு அழைக்கலாம்......


எது எப்படியோ
இந்த நட்சத்திரம் - நிதமும்
ஒளி வீசிக் கொண்டிருக்கிறது
அனைவருக்கும் பொதுவாய்
ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்து...

இன்றேனும் நிமிர்ந்து பாருங்கள்-
ஒளித்தெறிப்பில் உங்களின்
உணர்வுகளும் மறைந்திருக்கும்
"உயிரோட்டமாய்"


--பிரியா




23 கருத்துகள்:

  1. வானமெனும் அகன்ற கூரையின் கீழ் நிலவின் பார்வையில்தான் பொதுவாக இப்படியான காட்சிகளைக் கவிஞர்கள் சித்தரிப்பார்கள். நட்சத்திரத்தின் பார்வையில் வந்த கவிதை அழகு! உயிரோட்டம் பற்றிப் புனைந்த இந்தப் பாவும் உயிரோட்டமாகவே...! (நான் நிறைய தினங்கள் நிலவையும் நட்சத்திரங்களையும் வெகுநேரம் கண்டு ரசித்ததுண்டு.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா... நீங்கள் சொல்வதும் உண்மைதான் ஆனால் எப்பொழுதும் நிலவினை இரசிக்கும் நான் ஒரு நாள் நட்சத்திரங்களை வியந்து பார்த்து நின்றபொழுது தோன்றிய வரிகளே இவை.... தமிழர்களின் நிலை குறித்த கட்டுரை ஒன்றை அப்பொழுது வாசித்துக் கொண்டிருந்தென் இரண்டும் சேர்ந்து மனதில் தோன்றியவையே இந்த வரிகள்...

      நீக்கு
  2. வணக்கம்
    மனதை நெகிழ வைக்கு கவிதை... நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  4. அழகு... அருமை... ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளதை ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. மின் நூல் பற்றிய தகவல் - உங்களுக்கு உதவலாம் :- http://dindiguldhanabalan.blogspot.com/2014/01/Ethics-and-e-Books.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்பொழுதுதான் உங்கள் இடுகையில் பார்த்து விட்டு வந்தேன் தனபாலன் சார் உண்மையில் மிகவும் உபயோகமான பதிவு... பகிர்வுக்கு நன்றிகள்... :)

      நீக்கு
  6. கழுகுப் பார்வை என்பதுபோல்
    இந்த நட்சத்திரப் பார்வை மனதை
    விசாலப்படுத்திப் போகிறது
    அதிகம் சிந்திக்கச் செய்யும்
    அற்புதமான கவிதை

    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு



  8. வாழ்வின் நிஜங்களைத் தொட்டு
    பாடம் நடத்தும்
    பால்வெளி முற்றத்தின்
    நட்சத்திர ஆசிரியையின்
    நாட்குறிப்புக்களாய்
    ஓர் உணர்வு இங்கே
    உயிருள்ள கவிதையாக..!

    அருமை பிரியா
    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    பதிலளிநீக்கு
  9. நட்சத்திரங்கள் பற்றி வித்தியாசமான பார்வை! அருமையாக வந்துள்ளது கவிதை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. திருடனின் சாமர்த்தியம், முதிர்கன்னி(ண்ணன்) ஏக்கம், காவலர்களின் விழிப்பு என இரவின் மர்மம் இன்னும் நீளும் ப்ரியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் அக்கா... இந்தக் கூரையினடியில் நடக்கும் விசயங்களை சொல்லப் போனால் சொல்லி மாலாது... அதனால்தான் சிறிதை மட்டும் சொல்லி இதைப் போலவே எல்லாமும் என்று முடித்தேன்...

      நீக்கு