தேடிவந்த விடயங்களை
தனக்குள்ளே மறைத்து
செருக்குடன் நிற்கிறது
செதுக்கப்பட்ட ஓவியம்
தீராத சிக்கலில்
சேர்ந்திட்ட வாழ்கையாய்
குழப்பங்களுடன் நீள்கிறது
கோடுகளின் நீட்சி
தீட்டியவர் யாரோ
ஜொலிப்புடன் மிளிர்கிறது
எண்ணங்களில் தேர்ந்த
வர்ணங்களின் சேர்க்கை
குறுக்கும் நெடுக்குமாய்
விழுந்திட்ட கோடுகள்
சொல்லிச் செல்வதன்
இரகசியம்தான் என்ன?
பலவேறு சமயங்களில்
புரியாமலே போவதேன்
அழகான கருப்பொருள்
இயல்பான பார்வைக்கு
அர்த்தங்கள் புரியாமல்
புதிராயே இருப்பதுதான்
ஒவியனுள் ஒழிந்திருக்கும்
இரகசிய அழகோ?
இணைய தேடலின்
இடைப்பட்ட நொடியில்
கண்டிட்ட ஓவியம்
கண்முன்னே வந்து
விதைத்துச் செல்கிறது
விடைகள் தெரியா
ஓராயிரம் கேள்விகளை
ஒய்யாரமாய் நின்று
-- பிரியா
வணக்கம்
பதிலளிநீக்குகுறுக்கும் நெடுக்குமாய்
விழுந்திட்ட கோடுகள்
சொல்லிச் செல்வதன்
இரகசியம்தான் என்ன?
அருமையான கவிதை நல்ல சொல் வளம் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் தங்கள் முதல் வருகைக்கும் வாழ்துக்கும்... :)
நீக்குஎன்னவென்று சொல்வது எப்படி பாராட்டுவது வாழ்க்கையை வாசித்து காட்டும் அழகே அழகு அத்தனை வரிகளும் அருமை வாழ்த்துக்கள் சகோதரி
பதிலளிநீக்குமிக்க நன்றி கவி நாகா சார்... :)
நீக்கு''அர்த்தங்கள் புரியாது புதிராயே இருப்பதுதான்
பதிலளிநீக்குஓவியனுள் ஒளிந்திருக்கும் இரகசிய அழகோ''
அழகான, அருமையான வரிகள்.
மிக்க நன்றி வியா பதி.... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.. :)
நீக்குஅழகான ஓவியமும் அதற்கேற்றாற்போல் உங்களின் சிறந்த கற்பனையும்...
பதிலளிநீக்குமிகமிக அருமை! ரசிக்கின்றேன் உங்கள் ரசனையை!
வாழ்த்துக்கள் தோழி!
த ம.1
மிக்க நன்றி தோழி தமிழ் மணம் வாக்கிற்க்கும்...
நீக்குஅழகான கவிதை,,, தங்கள் ஓவிய ரசனை மிக அழகாக உள்ளது...
பதிலளிநீக்குவாழ்த்துகள் தோழி...
மிக்க நன்றி நண்பரே... அதை வரைந்த ஒவியார் van gogh எனக்கு மிகவும் பிடித்த ஒவியர்...
நீக்குதமிழ் மணம்: இரண்டு
பதிலளிநீக்குமிக்க நன்றி நண்பரே...
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
தமிழ்மணம் தந்தேன் தனிச்சுவை பாட்டில்
எமதுளம் நன்றே இணைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி சார்... :)
நீக்கு