பக்கங்கள்

இது ஒரு நதியின் பயணம்..,



ஊற்றுக்கள் கொடுக்கும் உயிரில்
உடலாகி ஊரும் கிளைகள்

இசைக்கருவி அற்றுப் பாடி
இலைகளில் தாளம் போட்டு

எழுப்பிடும் சலசல சப்தம் 
என்றேனும் ஒய்ந்ததும் இல்லை 

வருவோரை மறுப்பதும் இல்லை 
போவோரைப் பழிப்பதும் இல்லை

சிறிதென்று சிரித்து விடுவதுமில்லை 
பெரிதென்று பயந்து நிற்பதுமில்லை

மலைகளை உருட்டித் தள்ளி
மடுவினைக் கடந்தே ஓடும் 

செல்லும் வழி தெரியாதெனிலும்
சேருமிடம் கடல்தான் - என்றும்

இருபுறமும் கைகள் நீட்டி 
இணைவோரைப் பரிவுடன் சேர்த்து

தவறும் கிளைகளை தனியேவிட்டு 
தனக்கான வழியைத் தானேபேணி

கள்ளப்பட்டு காய்ந்த சருகை
அள்ளிக்கொண்டு அணையில் சேர்க்கும் 

உள்ளம் கொதித்தால் மட்டும்
வெள்ளமாய் வேர்கள் அரிக்கும் 

காட்டைக்கடந்து கடலைத்தேடி 
நாட்டைச்சுற்றும் நன்னீர்சுனையாய்...

நீலப் பரப்பை நினைவில்கொண்டு 
சீலம் கடக்கும் சிறப்புத்தேராய்.. 

நளினங்கள் காட்டும் வழியில் 
நடைபோடும் கன்னிப் பெண்ணாய்

ஓய்வுகள் இன்றித் தொடரும்
ஒரு நதியின் பயணம்...!


-- பிரியா

19 கருத்துகள்:

  1. செல்லும் வழி தெரியாதெனினும்
    சேரம் இடம் கடல்தான்

    தவறும் கிளைகளைத்தனியே விட்டு
    தனக்கான வழியைத் தானே பேணி
    ஓய்வுகள் இன்றித் தொடரும் ஒரு நதியின் பயணத்தை
    மிக மிக அழகாகப் படம்பிடித்துக்காட்டியிருக்கிறீர்கள் இந்தக் கவிதை வரிகளில் ஒவ்வொரு வரியும் அர்த்தம் உள்ள வரிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி வியாபதி தங்கள் வருகைக்கும் வாழ்த்திர்க்கும்...

      நீக்கு
  2. சேரும் இடம் கடல்தான் தவறாக 'சேரம்' என வந்து விட்டது தவறுக்கு வருந்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. சாதாரண நோக்கில் பார்த்தால் ஒரு அழகிய நதியின் நெடிய‌ பயணம் மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். ஆனால் அரவணைப்பு, சகிப்புத்தன்மை, பொறுமை, இனிமை, தீயதை விட்டு அகலுதல், அனிதனினும் தீயதை ஆக்ரோஷமாய் அழித்தல் என்று பல்வேறு குணாதிசயங்கள் நதியுடன் பின்னிப்பினைந்து செல்வதாய் எழுதியுள்ள‌ கற்பனை மிகப் பிரமாதம்! இனிய வாழ்த்துக்கள் ப்ரியா!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் உங்களுக்கு என்னுடைய மிகப் பெரிய நன்றி அம்மா...நான் எழுதும் கவிதைகள் அனைத்துமே இதைப் போன்ற உள் அர்த்தம் கொண்டவைதான்... ஆனால் அது அனைவரையும் சென்றடைகிறதா என்ற சந்தேகம் எப்பொழுதும் உண்டு, இன்று முதல் முறையாக என் கவிதையின் ஆன்மாவைப் படித்த ஒருவரின் கருத்தை இங்கே பார்க்கிறேன்... அதற்காக இதற்க்கு முன் படித்த்வர்கள் யாவருக்கும் புரிதல் இல்லை என்று கூறவில்லை... ஆனால் முதல் முதலில் என் கவிதையின் ஆன்மாவை கருத்தில் இங்கே உரைத்த்வர் தாங்களே.. அதர்காகவே அந்த பெரிய நன்றி...தொடர்ந்து வந்து ஆதரவு
      தாறுங்கள்... :)

      நீக்கு
  4. அழகான , அர்த்தம் நிரம்பிய கவிதை ...!

    இசைக்கருவி அற்றுப் பாடி ,
    இலைகளில் தாளம் .... அடடா அழகு ரசனை பிரியா ஜி ...!

    பதிலளிநீக்கு
  5. நதியின் பயணத்தையும்
    ஜதியோடு பாடலாக்கி
    இனிமை சேர்த்திங்கே
    எழுதிய அழகேஅழகு!

    வாழ்த்துக்கள் தோழி!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தோழி... வாழ்திர்க்கும் வாக்கிர்க்கும்... :)

      நீக்கு
  6. ஊற்றுக்கள் கொடுக்கும் உயிரில்
    உடலாகி ஊரும் கிளைகள்

    நளினங்கள் காட்டும் வழியில்
    நடைபோடும் கன்னிப் பெண்ணாய்

    ஓய்வுகள் இன்றித் தொடரும்
    ஒரு நதியின் பயணம்...!

    அழகிய கவிதை

    வாழ்த்துக்கள் தங்கையே 3

    பதிலளிநீக்கு
  7. சகோதரிக்கு வணக்கம் நதியின் ஓட்டத்தை மிக அழகுபட உவமைகளோடு அருமையாக அமைந்துள்ளது நதியை பெண்ணாக உவமைப்படுத்தியது அழகு! சின்னஞ்சிறு பறவைகளே என் சின்னஞ்சிறு பறவைகளே என்ற கவிதைக்கு இந்த கவிதை பதிலாக அமைந்து விட்டது பார்த்தீர்களா? நதி என்றால் கரைகள் வேண்டும் அல்லவா...

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் கவி நாகா சார்... உங்களுக்கு முதலில் என் நன்றி கருத்துரை இட்டமைக்கு... சில விளக்கங்கள் கொடுக்க ஆசைப் படுகிறேன்... முதலில் இந்த கவிதையில் நான் நதிகளின் கரையினைக் குறித்து எங்கே கூறி உள்ளேன் என்று கூற இயலுமா... இரண்டாவது இங்கே நான் நதியுடன் இணைத்துக் கூறியது மொத்த மனித இனத்தின் வாழ்க்கையை, பெண்ணை மட்டும் அல்ல... அடுத்தாக என்னுடைய நிலைப்பாடு சின்னஞ்சிறு பறவைகளே கவிதையில் உரைத்ததுதான்... அது என்றும் மாறாது... ஆதலால் என் எழுத்துக்களிலும் மாற்றங்கள் நிச்சயம் வராது, இது வரையிலும் இனிமேலும் நான் எழுதுபவை அனைத்தும் அதனை ஒத்துதான் அமையும்... நன்றி சார்

    பதிலளிநீக்கு
  9. கரைகளை குறிப்பிடவில்லை என்பது உண்மைதான் நீங்கள் நதி என்று சொல்லும் போது கரைகள் மறைபொருளாக இருக்கிறது கரைகள் இல்லாமல் நதி ஏது? கரைகள் என்ற கட்டுப்பாட்டுக்குள் நதியின் ஓட்டம சிறப்படைகிறது அது போகின்ற வழியெல்லாம் நன்மைகள் செய்துகொண்டு அழகான நடையுடன் சென்று தான் ஓடி வந்த கழைப்பு தீர கடலில் ஓய்வெடுக்கிறது உங்கள் எண்ணங்களையோ கருத்துகளையோ குறை கூறுவதாக நினைக்கவேண்டாம் சின்னஞ்சிறு பறவைகளே கவிதைக்கான பதிலை இந்த கவிதை தந்திருக்கிறது என்பதை மட்டும்தான் சொல்லியிருக்கிறேன் மிக்க நன்றி சகோதரி

    பதிலளிநீக்கு
  10. நதியின் பயணம் கவிதை அருமை.
    ஜீவன்சுப்புக்கு நன்றி.
    மன உணர்வுகளை அழகான கவிதையை படிக்க தந்தமைக்குஉங்களுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி மேடம் தங்கள் முதல் வருகைக்கும் பாராட்டுக்கும்... தொடர்ந்து வாருங்கள்.. :)

      நீக்கு
  11. வணக்கம் சகோதரி...

    தங்கள் வலைப்பூவைப் பற்றி வலைச்சரத்தில் சொல்லியிருக்கிறேன்...
    நேரம் கிடைக்கும் போது வந்து பாருங்கள்... அதற்கான சுட்டி கீழே..


    http://blogintamil.blogspot.ae/2013/09/blog-post_7179.html

    நன்றி...

    நேசத்துடன்
    சே.குமார்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வலைசரத்தில் என் வலைப்பூவை அறிமுகப் படுத்தியதர்க்கு மிகவும் நன்றி.. இதைப் போன்ற ஊக்குவிப்புகளே எங்களைப் போன்றவர்களின் எழுத்துக்களை மேலும் செம்மைப் படுத்துகின்றன....

      நீக்கு