வாழ்தல்
---------------
கிளைகளையும்
இலைகளையும் தாண்டி
பரவிக் கிடக்கிறது
அந்த மரம்
நிழலின் வழி
-----X-----
குழப்ப நிலை
--------------------
இடைவெளியின்றி
சிதறிக் கிடக்கும்
குறுக்குக் கோடுகளில்
எத்தனை முயன்றும்
கண்டறிய இயலவில்லை
இந்தக் கோடு
எங்கே தொடங்கி
எங்கே முடிகிறதென்று
-----X-----
--பிரியா
---------------
கிளைகளையும்
இலைகளையும் தாண்டி
பரவிக் கிடக்கிறது
அந்த மரம்
நிழலின் வழி
-----X-----
குழப்ப நிலை
--------------------
இடைவெளியின்றி
சிதறிக் கிடக்கும்
குறுக்குக் கோடுகளில்
எத்தனை முயன்றும்
கண்டறிய இயலவில்லை
இந்தக் கோடு
எங்கே தொடங்கி
எங்கே முடிகிறதென்று
-----X-----
இன்னமும்
-----------------
இன்றைய பொழுது
எனக்கானதாய் புலர்ந்திருந்தது
என்பதை அறிவதற்குள்
உச்சி வந்து விட்டது
இருக்கட்டும்
இன்னமும் இருக்கிறதே மாலையும் இரவும்
-----X-----
வித்தியாசம்
--------------------
நீள் வெளிச்சம்
சிதறிக் கிடக்கும் அறையினுள்
இருட்டு பறந்து கிடக்கின்றது
ஒரு பாகம் வெட்டுப்பட்ட
சதுரம் போல்
வித்தியாசம்
--------------------
நீள் வெளிச்சம்
சிதறிக் கிடக்கும் அறையினுள்
இருட்டு பறந்து கிடக்கின்றது
ஒரு பாகம் வெட்டுப்பட்ட
சதுரம் போல்
--பிரியா
இன்னும் இருக்கிறதே... திருப்தி...
பதிலளிநீக்குநிச்சயமாய் சகோ.... :)
நீக்குகிறுக்கிய கோடுகளில்
பதிலளிநீக்குஒழிந்தே இருக்கும்
தொடக்கமும் முடிவுமாய்
வலிகளையும் கண்டறிய
முடியவில்லை
வாழ்வின் வட்டத்தில்
அருமை பிரியா
அத்தனையும் ரசிக்கும் படியாய் இருக்கிறது
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா..... :)
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஇரசிக்கவைக்கும் வரிகள் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன்....:)
நீக்குஇந்தக் கோடு எங்கே தொடங்கி எங்கே முடிகிறது என்று தெரியவில்லை.ம்..ம்..ம் அப்படித் தானே எங்கள் தலை விதியும் இல்லையா பிரியா.
பதிலளிநீக்குஅருமையான சிந்தனைகள்! தொடர வாழ்த்துக்கள் ...!
உறவுகளைப் பிரிந்து வாழும் அனைவரின் நிலையும் அப்படியே சகோ... :)
நீக்கு