பக்கங்கள்

புல்வெளி


தலைச்சுமையாய் 
தான் சுமந்த 
பனித்துளியை 
என்னிடத்தில் 
தந்து செல்ல 
பனி இரவில் 
தவமிருக்கும் 
பச்சைப் புல்வெளி

இது எதுவும் 
அறியாமல் 
நடந்ததேதும் தெரியாமல் 
முகம் பார்க்கும் 
கண்ணாடியாய் - துளியதனை
கை கொள்ள 
சட்டென்று உடைந்து 
சிதறிப் போனது 
சின்னப் பனித்துளி 

தலைபாரம் 
குறைந்தாலும் 
கரைந்த பனித்துளிக்காய் 
கண்ணீருடன் 
"புல்வெளி"



-- பிரியா 

16 கருத்துகள்:

  1. நன்று. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    கவிதையின் வரிகள் நன்று வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. புல்வெளிகள் சுமந்து நிற்கும் பனித்துளிகளை Handle with care என்று சொல்லி இருக்கிறது தங்கள் கவிதை :) ! பல நேரங்களில் யாரோ தவமிருந்து சுமந்து தரும் பனித்துளிகளை கண்ணாடியென முகம் பார்க்க நினைத்து கைகொண்டு உடைத்துவிடத்தான் செய்கிறோம் !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.... கவனமுடன் இருக்க வேண்டி உள்ளது பல நேரங்களில்...

      நீக்கு
  4. பனித்துளியையும் ரசனையுடன் நோக்கிய உங்கள் கவிமனம் ரம்யம்!

    பதிலளிநீக்கு
  5. பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ தங்கள் முதல் வருகைக்கும், கருத்திட்டமைக்கும்.... தொடர்ந்து வாருங்கள்

      நீக்கு