பக்கங்கள்

நிலவும் மீனும்

முதல் முதலாய்  
     விடிகாலைப் பொழுதின் 
வானதனை இரசித்திருந்தேன் 
     முற்றிலும் மறந்து 

காதல் கொண்ட 
    இளம் சிட்டுக்களாய் 
ஒற்றை நிலவுடன் 
    ஒரேயொரு நட்சத்திரம் 

அருகிருந்த வான்முழுதும்
    ஏதுமற்ற வெளியாய்....
காதலரின் மனமறிந்து
    மறைந்தனவோ பிறமீன்கள்!



கவிதைக்காரர்  பக்கங்கள் 
    நிறைகிறது  வார்த்தைகளால்  
நிலவும் விண்மீனும் 
    நிகழ்த்திடும் ஜாலத்தால் 

இயற்க்கை ஓவியன் 
    மாபெரும் வித்தைக்காரன் 
இரவென்ன பகலென்ன 
    அவனுக்கேது கேள்வி 

இயல்பான வண்ணங்களில் 
    இயந்திசைத்த கோடுகளால் 
இருப்பினைக் காட்டுவான் 
    எப்போதும் குறையாமல் 


--பிரியா



8 கருத்துகள்:

  1. இயற்கை ஓவியன் காட்டும் இணையற்ற எழில் ஓவியங்களை ரசிக்கத்தான் மனிதனுக்கு நேரமிலலை... ரசிப்பவருக்கோ மகிழ்விற்கு எல்லையில்லை. ரசனையில் தோய்ந்த கவிதை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை அண்ணா... ஒரு நால் அதிகாலை 4 மணி அளவில் எனக்கு இரசிக்க கிடைத்த நிலவையும் நட்சத்திரத்தியும் கொண்டு எழுதப்பட்டவையே இந்த வரிகள்... எத்தனை விடையங்களை இழக்கிறோம் இந்த இயந்திர வாழ்க்கையில்....

      நீக்கு
  2. உங்களின் ரசனையின் வெளிப்பாடு அருமை

    பதிலளிநீக்கு
  3. மனத்தைக் கவர்ந்த கவிதைப் பகிர்வுக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தோழி .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ வருகைக்கும் வாழ்த்துக்கும்... :)

      நீக்கு
  4. என்னமா ரசித்துள்ளீர்கள் அதன் வெளிப்பாட்டில் அழகிய கவிதை.
    நன்றி வாழ்த்துக்கள்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிஜம் தான் சகோ... அன்று அந்த நிலவையும் விண்மீனையும் அத்தனை தூரம் இரசித்தேன்.... :)

      நீக்கு