பக்கங்கள்

வெல்வோம் வா




இருளும் ஒளியும்
இணைகின்ற காலமதில்
வெளிச்சத்தை பிடித்து
நிறுத்திடும் முயற்சியிது

நிலமென்ன கடலென்ன
எங்கும் வெல்லலாம்
வித்தியாசங்கள் ஏதுமில்லை
உயர்வொன்றே குறிக்கோளாய்

துள்ளட்டும் கால்கள்
துயரங்கள் நீங்கி
நீளட்டும் கைகள்
நீலவானையும் தாண்டி

தகிக்கும் ஆதவனோ
குளிரும் மாலையோ
என்னதான் செய்திடும்
எம்மான் உன்னை

உறுதி கொண்ட
உள்ளமது - உனக்கென
வாய்த்திருக்கும் வரையில்
தடைகளென்று ஏதுமில்லை...
வாழ்வோம் வா!



---பிரியா 


குறிப்பு : இது சித்திரம் பேசுதடி முகநூல் பக்கத்திற்காக எழுதிய கவிதை

16 கருத்துகள்:

  1. உறுதி கொண்ட உள்ளமது உனக்கென்ன
    வாய்த்திருக்கும் வரையில் தடைகள்
    என்று ஏதும் இல்லை வாழ்வோம் வா! உண்மை உண்மை அருமை!

    அழகான படமும் அதற் கேற்ற கவிதையும் அசத்தலே.
    வாழ்த்துக்கள் பிரியா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி இனியா... படம் சித்திரம் பேசுதடி பக்கத்தில் கொடுக்கப்பட்டது... அதற்க்கான கவிதையை நான் எழுதினேன் அவ்வளவே

      நீக்கு
  2. நம்பிக்கையூட்டும் வார்த்தை ஜாலங்கள் அருமை அருமை ! தோழி வாழ்த்துக்கள் மென்மேலும் கவிதைப் பூக்கள் மலரட்டும் .முடிந்தால் வாருங்கள் தோழி என் தளத்திலும் ஒரு பாடல் காத்திருக்கின்றது .மிக்க நன்றி பகிர்வுக்கு .

    பதிலளிநீக்கு
  3. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இனி இடும் பதிவுகளை நிச்சயம் பகிர்கிறேன்... நன்றி :)

      நீக்கு
  4. தன்னம்பிக்கை வரிகள்! ஊக்கமுட்டும் சொற்கள்! அருமையான படைப்பு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. நானும் இந்தப் படத்தை வெச்சுக்கிட்டு என்ன கவிதை எழுதறதுன்னு தெரியாம யோசிச்சுக்கினே இருந்தேன். வார்த்தை முட்டீச்சு. விட்டுட்டேன். ஹி... ஹி...

    இப்ப இங்க பாக்கறப்ப படத்துக்குக் பொருத்தமான கவிதையா.... இல்ல கவிதைக்குப் பொருத்தமான படமான்னு பிரமிப்பா இருக்கு. ஹாட்ஸ் ஆஃப் ப்ரியா...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா... முயற்ச்சி செய்துருக்கலாமே அண்ணா...

      நன்றி அண்ணா... இந்த வாரக் கவிதைக்கான படத்தையும் பாருங்கள், படமே கவிதையாய் இருப்பதை...

      நீக்கு
  6. பாசிட்டிவான கவிதை.. சூப்பர்ங்க

    பதிலளிநீக்கு