பக்கங்கள்

புழுதி படிந்த தெருக்களில்....

புழுதி படிந்த தெருக்களின்
முகங்கள் அத்தனை எளிதாய்
மறக்கக்  கூடியதாய் இல்லை....
கால்களை எண்ணிக்கைக்குள்
அடக்கும் முயற்ச்சியினை -எப்பொழுதோ
விட்டொழித்தாகி விட்டது...


புழுதி படிந்த தெருக்களின்
கட்சி, சாதி, மதம் எதுவென்று
யாரும் அறிந்திருக்கவில்லை...
அதன் மொழி கூட
அதீத இரகசியமாயிருந்தது!

புழுதி படிந்த தெருக்களின்
திண்ணைகள்  எப்பொழுதும்
வெறுமையாய்  இருப்பதேயில்லை....
அந்த ஜன்னல்களில்  நிதமும்
செய்திகளிருக்கின்றன புதியதாய்
கண்டோ கேட்டோ !

புழுதி படிந்த தெருக்களில்
வானம் அத்தனை
வெண்மையாய் இருந்தது
வியப்புக்குரியதாய் !
காற்று இயல்பாய் வீசியது
அனைவருக்கும் பொதுவாய்.....

புழுதி படிந்த தெருக்களை
இப்பொழுது பார்க்கவே முடிவதில்லை...
அவை காணாமல் போனதனால்....



--பிரியா

3 கருத்துகள்:

  1. அந்தப் புழுதிப் படிந்த தெருக்களிலேயே
    அதிகக் காலம் வாழ்ந்தவன் என்கிற முறையில்
    அதன் ஜீவனைத் தெளிவாய் உணர்ந்தவன் என்கிற முறையில்
    கவிதையை முழுமையாய் இரசிக்க முடிந்தது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. புழுதி படிந்த தெருக்களில் நடந்து காலில் கிரண்டைக்கால் வரை புழுதி ஏறியபடி வலம்வர ஆசைதான்... இப்போது இருக்கும் இடத்தில் புழுதி படிந்த தெருக்களைக் காண முடியவில்லை.

    கவிதை அருமை...

    பதிலளிநீக்கு