பக்கங்கள்

சிதறல் - 14

மெல்ல
-----------
பெருவெள்ளமென
இத்தனை வேகமெதற்க்கு
உன்னை முழுவதுமாய்
இரசித்திட வேண்டும்....
மெல்லவே  நடந்துவா!
மழை மகளே



                                             -----X----




அவிழ்ந்த முத்துக்கள்
--------------------------------
கோர்த்து வைத்த முத்துக்களில்
ஏதோ கோளாறு
சரசரவென அவிழ்ந்து விழுந்தது
வீட்டுக் கூரையின் மேல்
மழைத்துளியாய்....


                                               ----X----


உனக்காகவே
--------------------
ஒன்றும் அவசரமில்லை
செல்ல மழையே...
இன்றில்லையேனும் நாளைக்காயினும்
உனக்காக மட்டுமே!
இந்த புல்வெளியும்
அந்த செடிகொடியும்
மற்றும் அனைத்தும்.....


                                               ----X----


வாத்தியார்
------------------
ஏன் மழையே
சங்கீதப் பிள்ளைகளுக்கெல்லாம்
நீதான் வாத்தியாரோ
என் வீட்டுப்  பாத்திரங்களில்
நன்றாகவே வாசிக்கிறாய்
ஜலதரங்கம்....





--பிரியா

8 கருத்துகள்:

  1. வணக்கம்
    குட்டிக்கவிதைகளை இரசித்தேன். பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. அழகான கற்பனை சிதறல்கள் கண்டு களித்தேன். படங்களும் கவிதையும் அபாரம் எடுத்து சொல்ல வார்த்தையே இல்லம்மா wow. பதிவுக்கு நன்றி! தொடர வாழ்த்துக்கள்....!

    http://kaviyakavi.blogspot.com/2014/08/blog-post_3.html#comment-form

    பதிலளிநீக்கு
  3. மழைத்துளிகளை முத்துக்களாய் உவமித்தது அருமை. சில்லென்ற மழையில் நனைந்த இனிய அனுபவம் கவிதைகள் படிப்பதிலும் கிடைக்குமென்பதை இப்பதான் பாக்கறேன். சூப்பர்.

    பதிலளிநீக்கு
  4. மழையை ரசித்த விதம் அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  5. உங்களை இன்று என் வலைத்தளத்தில் தொடர்பதிவிற்கு அழைத்திருக்கிறேன் ப்ரியா!

    பதிலளிநீக்கு
  6. மெல்ல நடந்து வருமாறு மழையிடம் வேண்டுகோள் விடுக்கும் இந்தக் கவிதை மிக அருமை!!

    பதிலளிநீக்கு
  7. மழை பற்றிய சிறு கவிதைகள் அருமை.

    முத்துச்சிதறல் வலைப்பூவின் மூலம் தங்கள் தளம் கண்டேன். இனி தொடருவேன் !

    எனது புதிய பதிவு : விடுமுறை விண்ணப்பம்
    http://saamaaniyan.blogspot.fr/2014/08/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்திவிட்டு கருத்திடுங்கள்.நன்றி

    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு