எத்தனைதான் சுருக்கங்கள்
எண்ணிவிட எத்தனித்தேன்
பாட்டியின் முகத்தினிலே
ஒவ்வொரு சுருக்கமும்
ஒவ்வொரு கதையை
தன்னகத்தே கொண்டு
எத்தனை ஆசைகள்
எத்தனை கோபங்கள்
எத்தனை பரிதாபங்கள்
எத்தனை அழுகைகள்
அத்துனையும் ஒன்றுசேர்ந்து
உன் முக சுருக்கமாய்
ஆனதா என் பாட்டி!
இத்துனை காலங்கள் வாழ்ந்தாயே
இனி உனக்காய் உனக்கென
ஆசையேதும் உண்டா..
ஒன்றின்று உள்ளது என்றால்
என்னென்று கேட்டேன் நான்
ஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும்
பேரனை காண வேண்டும்
என் மகனை பார்த்தால் சொல்வாயா?.........
என்னென்று சொல்வேன் நான்
கேள்விக்கு பதிலொன்றும் உரைக்காமல்
மெல்ல நடந்தேன் அவ்விடம் விட்டு
சென்ற இடம் முதியோர் இல்லம்
--பிரியா
பாட்டிகளுக்கு இருக்கும் ஒரே ஒரு ஆசை பேரக் குழந்தைகளிடம் கொஞ்சிப் பேசி சிரிப்பதுதான். அதுதான் அவர்களுக்கு சொர்க்கம்.
பதிலளிநீக்குகவிதை மிக அருமை..பாராட்டுக்கள்
மிக்க நன்றி...
நீக்குகவிதையின் FONT SIZE யை சற்று பெரிதாக்கவும்
பதிலளிநீக்குமாற்றி அமைத்து விட்டேன்... நன்றி :)
நீக்குஆறு மாதத்திற்கு ஒரு முறையேனும்
பதிலளிநீக்குபேரனை காண வேண்டும்
என் மகனை பார்த்தால் சொல்வாயா?.........
மகனைப் பெற்றவள் மனிதனை காணவில்லையே
கண்டும் காணாமலும் விடப்படும் சோகம்...
நீக்குமுகத்தின் ஒவ்வொரு சுருக்கமும் அனுபவ முத்திரைகள்! பாசத்தைக் கொட்டி மகனை வளர்த்த அந்த மனம் பேரனைப் பார்க்கத் துடிக்கும் வேதனை நாம் கண்முன் காணும் நிதர்சனம்! கவிதை மனதைத் தொட்டது...!
பதிலளிநீக்குநான் ஒரு முதியோர் இல்லம் சென்று வந்த பொது அங்கே கேட்ட சோக கதைகள் என்னை இவ்வரிகளை எழுத வைத்தது.... நம்மை பெற்று வளர்த்தவர்களை உடன் வைத்து கவனிக்க கூட முடியாத இயந்திர மயமான வாழ்வில் நாளை எதை பெற போகிறோம்... விடையே சொல்ல இயலாத கேள்வி
நீக்குஉண்மைதான் தோழி! பெற்றோரை உடன் வைத்து அவர்கள் மனங்குளிரப் பராமரிப்பது பிள்ளைகளின் பாக்கியம் என்பதை எவரும் உணர்வதில்லை. முதுமை தாக்கி, தன் பிள்ளைகள் அலட்சியம் செய்யும் போது மனம் தான் செய்த தவறை உணர்ந்து என்ன பயன்? இது உரத்துச் சொல்லப்பட வேண்டிய விஷயம்தான்!
நீக்குமுகச் சுருக்கம் வயதானவர்களிடம்
பதிலளிநீக்குமனச் சுருக்கம் வாரிசுகளிடம்
யதார்த்த நிலை சொல்லும் கவிதை அருமை
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளுக்கு... :)
நீக்கு