பக்கங்கள்

தேவதையின் காதல்...




மௌனங்களில் உரையாடி
பூக்களுடன் உறவாடும்
வனதேவதை அவள்

கொண்ட நேசமெல்லாம்
கண்டு சொல்லியது
வனமென்னும் வனப்பு

இங்கேயே வளர்ந்தவள்
அறிந்தது என்னவோ
பூவும் பறவையுமே

அதிகம் நேசிப்பதும்
அறிந்து கொண்டதும்
ஏகாந்தம் மட்டுமே

புதியவர் வரவை
சட்டென சொன்னது
சருகும் பறவையும்

சத்தத்தின் திசை
காட்சியாய் காட்டியது
ஆண்மகன் ஒருவனை

ஏகாந்தமாய் எனக்காய்
இருந்த வனத்துள்
வந்தவன் யாரிவன்

கண்களின் கேள்விக்கு
வார்த்தைகளில் பதிலளித்தான்
மலர்கொய்ய வந்ததாய்

கருவண்டு கண்கள்
படபடத்து ஓய்ந்தது
பட்டாம்பூச்சியாய்

இருக்கத்தான் செய்கிறது
ஏதோஒரு ஈர்ப்பும்
வந்தவன் மீது

மயங்கித்தான் நின்றான்
மடந்தையின் அழகினில்
வந்தவனும் அங்கு

கண்கள் பேசிட
வார்த்தைகள் மறைந்து
மௌனம் மீண்டும்

மலர் கொய்ய
வந்தவன் நீ
கொய்தது எதுவோ?

மங்கையவள் மனமும்
மலரென்று அறிந்தனையோ
கொண்டுசெல்ல துணிந்தனையோ


--பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக