பக்கங்கள்

இன்றென்ன ....




இன்றென்ன என் பாதையில்
இத்தனை வெளிச்சம் வெண்ணிறமாய்?

அடர்ந்து மறைத்த அக்கரிய
இருள் எங்குதான் சென்றதோ?

என் தோட்டத்து பூக்களெல்லாம்
வண்ணமாய் மிளிர்வதும் என்ன?

காதல் பறவைகளின் இன்னிசை
நீண்ட நெடுங்காலத்திற்குப் பின்...

புல்தரைகளும் சில்லிட்டு என்
பாதங்களை சிலிர்ப்பூட்ட செய்கிறதே

வசந்தத்தின் வாழ்த்துப் பாடல்
என் செவியெங்கும் தேனாமிர்தமாய்

நானென்ன பறந்து செல்கிறேனா
பூக்களின் சிறகுகள் வாங்கி

அதோ அங்கே வானவில்
அன்றேப்போதே கனவில் கண்டது

பறவைகளின் சிறுசிறு கூட்டம்
அங்கேயும் இங்கேயுமாய் சிறகடித்து

வாழ்க்கை இவ்வளவு வனப்பானதா
வாழாமல் விட்டேனே இவ்வரையில்....


--பிரியா


2 கருத்துகள்:

  1. நம்மைச் சுற்றியிருக்கும் இயற்கையையும், மனிதர்களையும் ரசிக்கத் துவங்கிவிட்டால் வாழ்ககை வசந்தம்தான்! ரசனைக்குத் தீனி போட்ட நல்ல கவிதை! மனம் நிறைய பாராட்டுகளும், தொடர நல்வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி.. உங்களைப் போன்றவர்களின் ஊக்குவிப்பும் வாழ்த்துக்களும் தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் என் பயணம் நெடியதாகவே இருக்கும்... :)

    பதிலளிநீக்கு