வெள்ளையாய் கனவு
நேற்றைய இரவில்
நடுஜாமப் பொழுதில்
எவ்வளவோ தேடியும்
எதுவும் இல்லை
எதற்கான கனவிது
எதைச்சொல்ல வந்தது
வெறிச்சிட்ட வெளியில்
வெண்மையைத் தவிர
வேறொன்றும் இல்லை
நிறமேதும் இல்லா
நிறமேறிய கனவிது...
உணர்த்திச் செல்கிறது
உணராத ஒன்றை...
ஒன்றாய் பலவாய்
சின்ன சின்னதாய்
உடைந்தே போனாலும்
எனக்கான கனவது
என்னுடனே இருந்தது
எங்கும் செல்லாமல்
எண்ணவெளியில் மறையாமல்
இரவும் விடிந்தது
அதே வெண்ணிறமாய்
மாற்றங்கள் இன்றி
முந்தய இரவிற்கும்
விடிந்த பொழுதுக்கும்
வேற்றுமை இல்லை
வெண்மையாய் போனதால்!
--பிரியா
ம்... அழகிய கவிதை
பதிலளிநீக்குமிக்க நன்றி... :)
நீக்குநிறமேதும் இல்லா நிறமேறிய கனவிது! சூப்பர்! பல சமயங்களில் எனக்கும் கனவில் வந்தது பின் நினைத்துப் பார்த்தால் தெளிவாக நினைவிராமல் புகைபடர்ந்த கண்ணாடிக்குப் பின் பார்க்கும் காட்சி போல மங்கலாகத் தெரியும்! நான் வெண்ணிறக் குதிரையில் சவாரி செய்வதும் அத்தகைய நினைவுகளில் ஒன்று! (நிஜத்தில் குதிரைசவாரி செய்ததில்லைங்க) ரசிக்க வைத்தது கவிதை!
பதிலளிநீக்குமிக்க நன்றி... :) .... கனவு மறுநாள் அப்படியே நியாபகத்தில் வருவது அரிதே...
நீக்குவரிகள் நன்று. இன்னும் வரிகளைக் கூட்டி எழுதலாம்.
பதிலளிநீக்கு2 வரிகளா!!!!!...இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நிச்சயமாய் முயற்சிக்கிறேன்... தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்... :)
நீக்குஎன் முதல் கருத்தை அழிக்கவும் மிக நல்ல வரிகள்.
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
ஹா ஹா! அதனால் என்ன தங்களின் அந்த கருத்தையும் நான் ஏற்று கொள்கிறேன் .... இருக்கட்டும்... உங்கள் வாழ்த்துக்கு என் நன்றிகள்... :)
நீக்கு