1)தெருவிளக்கு
விடிய விடிய போராடி
விடிந்தபின் ஒய்வு எடுக்கும்
கொள்கை வீரன்...
'தெருவிளக்கு'
2)அறிவு
அனர்த்தங்களை
அர்த்தங்கள் ஆக்கும்
மானுட விந்தை - அறிவு
3)கனவு....
முடிந்துபோன நேற்றைக் கொண்டு
முகம் தெரியாத நாளைக்காக
கண்கள் கட்டும் கயிற்று பாலம்
4)வாழ்க்கை...
சந்தோஷத்தில் பூத்து
துக்கத்தில் முடியும்
நிதர்சன உண்மை
--பிரியா
சிதறல்கள் அருமை.தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு4)வாழ்க்கை...
பதிலளிநீக்குசந்தோஷத்தில் பூத்து
துக்கத்தில் முடியும்
நிதர்சன உண்மை
உங்கள் கவிதைகளும் உண்மைதான் ப்ரியா
வாழ்த்துக்கள்
நன்றி அண்ணா....
நீக்குஅனைத்தும் அருமை... முக்கியமாக 2 & 4
பதிலளிநீக்குரசித்தேன் 1 & 3
தொடர வாழ்த்துக்கள்...
சிதறல்களில் 3ம் 4ம் மனதை இழுத்துப் பிடித்து வெகுவாக ரசிக்க வைத்தன. மற்ற இரண்டும் ஓ.கே.தான். இந்தக் குறுங்கவிதைச் சிதறல்களைத் தொடருங்கள் ப்ரியா!
பதிலளிநீக்குநிச்சயம் இன்னும் சிறப்பாய் எழுத முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி.. :)
நீக்கு
பதிலளிநீக்குவணக்கம்!
புதுகவிதை கண்டு புகழ்ந்தேன்! மயக்கும்
மதுகவிதை என்றே மகிழ்ந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி அய்யா... தங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும்...
நீக்குஅனைத்துமே அருமை. தொடருங்கள்.
பதிலளிநீக்குமிக்க நன்றி... நிச்சயமாய்.. :)
நீக்கு