பக்கங்கள்

உனக்காக ...





நெடுந்தூரப் பயணங்களிலும்
நீங்காத நினைவுகளிலும்
உன்னையும் சேர்த்து
அலைகிறேன் நான் - நாள்தோறும்

உண்ணையில் உறங்கையில்
நடக்கையில் நிற்கையில்
மௌனங்களில் சப்தங்களில்
அனைத்திலும் இருக்கிறாய் - நீ

கொட்டிய மழைத்துளியில்
தகிக்கின்ற சூரியனில்
தடவிச்செல்லும் காற்றினில்
தேடிக்கொண்டே இருக்கிறேன் - உன்னை

இசையுடனான மாலையிலும்
புத்தகங்களுடனான பகலிலும்
கனவுடனாகிய இரவிலும்
அறிய முயல்கிறேன்
என்னுடன் கலந்த
உன்னுடைய இருப்பினை

தோற்காத பொழுதுகளுடனும்
குறையாத நம்பிக்கையுடனும்
தூரத்து மலைமுகடுகளையும்
அருவியின் தாலாட்டையும்
ரசித்தபடி காத்திருக்கிறேன்
உன் வருகைக்காக...


-- பிரியா

8 கருத்துகள்:

  1. உண்ணையில் உறங்கையில்
    நடக்கையில் நிற்கையில்
    மௌனங்களில் சப்தங்களில்
    அனைத்திலும் இருக்கிறாய் - நீ

    அழகிய நினைவுகளுடன் உங்கள் காத்திருப்பு

    அருமை சகோ வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நலம்தானே ப்ரியா...! இடையில் வாழ்க்கையானது என்னை பந்தாய் அலைக்கழித்து ஊர்ஊராய் சுற்ற வைத்ததில் சிறு இடைவெளிக்குப் பின் வந்திருக்கேன்.

    இசையுடனான மாலையிலும் | புத்தகங்களுடனான பகலிலும் | கனவுடனாகிய இரவிலும்...
    -என்ன அழகான ரசனை உங்களுடையது ப்ரியா! எனக்கும் உவப்பானதும் கூட. கவிதை வடித்திருக்கும் ஏக்கத்திற்கு விடையாய் நிச்சயம் வருகை நிகழும் என்று என் மனம் சொல்கிறது. இப்படி கவிதைகள் பிறப்பதற்காகவாவது அவன் வராமலே இருக்கட்டும் என்றும் ஒரு குரல் என்னுள் கேட்கிறது. என்ன கொடுமைம்மா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நலம் சார்.. உங்களுடைய பதிவில் படித்தேன்.. நீங்க எங்க கோயம்புத்தூர் வந்தது மால் பத்தி எழுதி இருந்தது எல்லாம்...

      ஹா ஹா ஹா.. எது நடந்தாலும் நான் கவிதை எழுதி உங்கள எல்லா தொல்ல பண்ணாம இருக்க மாட்டேன் சார்... என் ரசனையை ரசித்ததற்கு மிக்க நன்றி...

      நீக்கு
  3. சுகமான காத்திருப்பு...

    விரைவில் இனிய சந்திப்பு நிகழ வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. எண்ணத்தில் நிறைந்து எழுத்தில் கலந்த
    வண்ணக்கனவினை வடித்த கவிகண்டு
    பெண்ணே உன் கவலை தீர்த்திடபுரவியில்
    விண்ணென வீரன் விரைந்திடட்டுமே...

    அழகிய கவிதை தோழி! வாழ்த்துகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      நீக்கு