பயணங்கள் முடியலாம்
பாதைகள் முடிவதில்லை
வருகின்ற புதியவர்க்கு
வழிகாட்டிகள் எத்தனையோ
வந்துபோன பழையவர்கள்
வழியோரம் நட்டது
பொட்டல்வெளி பயணத்தில்
பூத்திருக்கும் கள்ளிச்செடி
மலர்வனங்கள் தந்திராத
மகிழ்ச்சியைத் தந்திடும்
முட்களைத் தவிர்த்து
பறிக்கத் தெரிந்தால்
கள்ளிப்பழம் இனித்திடும்
தேனினும் அமிழ்தாய்
பழம் தவிர்த்து
முள்ளைத் தீண்டினாலும்
வலியும் வேதனையும்
இன்னொரு வழிகாட்டி
கானல்கூட வெளியின்
கனவுப் பரிசு
தேடிப்பின் சென்றால்
உணர்த்திடும் உண்மை
ஆகையால்தான் வழிகாட்டிகள்
வழியின் மகத்துவம்
போற்றுவதாயின் தூற்றுவதாயின்
பயணியின் புரிதல்
தேசம் கடந்து
தேடத் துடிக்கும்
பயணங்கள் முடியலாம்
பாதைகள் முடிவதில்லை
--பிரியா
மலர்வனங்கள் தந்திராத
பதிலளிநீக்குமகிழ்ச்சியைத் தந்திடும்//உங்கள் மனதில் தோன்றுவதை தைரியமாக எழுதுங்கள்.தொடந்து எழுதினால் தவறுகள் உங்களுக்கே புரியும் ,பின்பு திருத்திக்கொள்ளலாம் தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
தவறை தாங்களும் சுட்டி காட்டலாம்... நிச்சயம் திருத்தி கொள்கிறேன்... :)
நீக்கு/// வழிகாட்டிகள் வழியின் மகத்துவம்... ///
பதிலளிநீக்குஅருமை...
வழிகாட்டியாகவே வாழ்வோம்...
தொடர வாழ்த்துக்கள்...
மிக்க நன்றி... :)
நீக்குமுள்ளுடன் பூக்கிறதே மோகமான ரோஜாவே
பதிலளிநீக்குதள்ளியே விடுவதில்லை தனிமையில் நில்லென்று
அள்ளி எடுக்கிறோம் அருந்துகிறோம் அழகினை
சொல்ல வேண்டியதில்லை சோகம் தவிர்த்திடு!...
தவறுகள் யாவருக்கும் ஏற்படுவது இயல்பு. எழுத எழுத நாமே அதைக் கண்டுணர முடியும். அதற்காக நீங்கள் தவிக்க வேண்டாம். தரும் செய்தி தரமாக இருக்கும்போது தவறுகள் தண்டிக்கப் படமாட்டாது. எல்லோரும் இன்னும் மாணவர்களே...
தொடருங்கள்! சாதனை படைப்பீர்கள்!
வாழ்த்துக்கள் தோழி!
வாழ்க வளமுடன்!
மிக்க நன்றி சகோ... ஆயினும் தவறினை சரியாக சுட்டி காட்டும் போது திருத்துவதற்கான வாய்ப்பாகவும் அமையும் அல்லவா.. அதற்காகவே கூறுகிறேன் தவறிருந்தால் உடனே கூறுங்கள் திருத்தி கொள்கிறேன் என்று...
நீக்குஆழமான கருத்தை அழுத்தமாகவும்
பதிலளிநீக்குஅருமையாகவும் பதிவு செய்துள்ளீரகள்
தொடர வாழ்த்துக்கள்
மிக்க நன்றி சார்... :)
நீக்குவானுக்கு வழிகாட்டியாய் நிலவிருக்க
பதிலளிநீக்குவாழ்வுக்கு வழிகாட்டியாய் வலியிருக்க
பயணங்களில் வழிகாட்டியாய் பாதைகள் இருக்க
உன் கவிதைகளுக்கு நலவழிகாட்டியாய்
சிந்தனைகள் இருக்கட்டும்....!
வாழ்த்துக்கள் ப்ரியா....
மிக்க நன்றி அண்ணா... :)
நீக்குவலியும் வேதனையும் இன்னொரு வழிகாட்டி. வழிகாட்டிகளே வழியின் மகத்துவம்! -க்ளாஸிக்! பாஸிடிவ் சிந்தனையை விதைக்கிற உங்கள் கவிதைகள் குறையொன்றுமில்லாதவைகளே! தொடர்ந்து எழுதுங்கள்!
பதிலளிநீக்குமிக்க நன்றி சார்... :)
நீக்குஅருமையாக எழுதுகிறீர்கள்..தொடருங்கள்..குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
பதிலளிநீக்குநிச்சயம் எழுதுகிறேன்... தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.. :)
நீக்கு