அண்டவெளியின் ராஜவீதியில்
உலாவரும் நிலாமகள்
நட்சத்திரங்கள் புடைசூழ
எட்டெடுத்துச் செல்கிறாள்
வெட்கம் வந்து சேர்கையில்
மேகப்பட்டாடை உடுத்தி
போகின்ற வழியெங்கும்
பேதங்கள் ஏதுமின்றி
வெளிச்சம் என்னும்
வெள்ளிக்காசை இறைத்தே
விரைந்து வந்திடுங்கள்
வெளிச்சத்தில் கலந்திட
மெதுவாய் வந்தால்
தேய்ந்தே போவாள்
இரவின் பொழிவையும்
இழுத்தே போவாள்
வாருங்கள் சீக்கிரம்
தயக்கங்கள் இன்றி
நிறைகிறது வெளிச்சம்
நீங்காது எங்கும்
--பிரியா
ரசனையான வரிகள்... ரசித்தேன்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குமிக்க நன்றி... :)
நீக்குஅழகிய கவிதை
பதிலளிநீக்குநன்றி.. :)
நீக்குமெதுவாய் வந்தால் தேய்ந்தே போவாள்-வாழ்க்கைத் தத்துவம்
பதிலளிநீக்குஉண்மைதானே சார்
நீக்குஅழகிய வரிகள் அருமை
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ப்ரியா
நன்றி அண்ணா.. :)
நீக்கு