பக்கங்கள்

தாய்மையின் ஏக்கம்!



கருவினில் சுமக்கிறேன்
கனவினில் தினமும்
கனவு கரையாமல்
நினைவாகும் நாள்நோக்கி

சுமக்காமல் வளர்க்கிறேன்
என்னுயிராய் உனை
சுமக்கும் சுகத்திற்காய்
ஏங்கி ஏங்கியே!

துள்ளிக் குதிக்கும்
மழலை ஒன்று
ஓடியே திரியாதோ
எந்தன் வீட்டிலும்

கொல்லும் மழலையின்
கொஞ்சல் பேச்சு
எனக்கே சொந்தமாய்
இல்லாமல் போனதால்

தெருவெங்கும் தொலைகிறேன்
தெரியாத உனைதேடி
கண்மணியே சேரடி - என்
கருவறையில் சீக்கிரம்

பொல்லாத பூமியென்று
வந்திட தயக்கமோ
என்னிலும் மேலாய்
உன்னைக் காப்பேன்

தயக்கம் தொலைத்து
சேர்ந்திடுவாய் என்னிடம்
அன்னை உன்னை
அன்பால் வளர்த்திடுவேன்

உறக்கம் தொலைக்கிறேன்
நிதமும் உனக்காய்
அம்மா என்றழைக்கும்
ஒற்றை சொல்லுக்காய்

எப்படி அழைத்தால்
நீ வருவாய்
அறியாமல் தவிக்கிறேன்
அனுதினம் நானும்

சாளரம் வழியே
கசியும் கூச்சல்
உடன் கலந்து
உயிரின் ஓசையும்........


--பிரியா

8 கருத்துகள்:

  1. ஏங்க வைக்கும் வரிகள்... மனதை கலங்க வைத்தது வரிகள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் சுற்றத்தில் நான் எதிர் கொண்ட ஒரு சிலரின் ஏக்கத்தின் வெளிப்பாடே இந்த வரிகள்...

      நீக்கு
  2. அருமையான கவி தோழி! வாழ்த்துக்கள்!

    தூக்கம் தொலைக்கவரும்
    ஏக்கங்கள்தான் எத்தனை?
    தாக்கங்கொண்டே தினம்
    நோக்குமெ நோயாகி எமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தங்கள் வாழ்த்துகளுக்கு... ஏக்கம் இல்லாத வாழ்வேது...

      நீக்கு
  3. தாய்மைக்காய் ஏங்கித் தவிக்கும் தாயுள்ளத்தின் தாபங்கள் அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. அதனாலேயே மனதை ‌நெகிழ்த்தியது ப்ரியா! அந்த அன்னையின் ஏக்கக் குரலுக்கு இறைமை செவிசாய்க்கட்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி... தங்கள் வாழ்த்து பலிக்கட்டும்....

      நீக்கு
  4. தெருவெங்கும் தொலைகிறேன்
    தெரியாத உனைதேடி
    கண்மணியே சேரடி - என்
    கருவறையில் சீக்கிரம்.....

    தாய்மைக்கான ஏக்கம்
    மிக அழகாய் இருக்கு தங்கையே

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு