பக்கங்கள்

கோடுகள் பலவிதம்...




நாகரிகத்தை விழுங்கி
நவீனம் உமிழ்ந்த
கறுப்புக் கோடுகளில்....!

அறிவியல் அழித்த
ஆத்ம நெரிசலின்
குறுக்குக் கோடுகளில் - என

வண்ணங்களின் கோட்பாட்டிலும்
வடிவங்களின் செயல்பாட்டிலும்
மறைந்தே போனாலும்

எல்லைகள் வகுத்த
எண்ணற்ற கோடுகளின்
சமுதாயக் கிறுக்களில்

மறைந்தும் தெரிந்தும்
மயங்கிக் கிடக்கிறது
மனிதம் புள்ளிகளாய்

வரைந்தவர் யாரோ
வரைமுறை அற்று
தெளிவில்லை யாருக்கும்

எத்தனை கோடுகள்
எவ்வகை வந்தும்
சமூக எச்சத்தில்

இன்னமும் குறையவில்லை
தீராமல் தொடரும்
தேவைகளின் ஏக்கம் ...!



--பிரியா


சிறப்பு நன்றிகள்: சீரளன் அண்ணா (என்னுயிரே)

15 கருத்துகள்:

  1. எத்தனை கோடுகள்
    எவ்வகை வந்தும்
    சமூக எச்சத்தில்

    இன்னமும் குறையவில்லை
    தீராமல் தொடரும்
    தேவைகளின் ஏக்கம் ...!......தேவைகளின் ஏக்கம் அருமை ப்ரியா வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அண்ணா.. தேவைகளை யோசிக்க வைத்ததே நீங்கள் தானே நன்றி அண்ணா... வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரியதே...

      நீக்கு
  2. வணக்கம்

    வரைந்தவர் யாரே
    வரைமுறையற்று
    தொளிவில்லை யாருக்கும்
    சரியான வரிகள் கவிதை அருமை வாழ்த்துக்கள்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. //வரைந்தவர் யாரோ
    வரைமுறை அற்று
    தெளிவில்லை யாருக்கும்//

    ஆமாம் தோழி உண்மை!

    தீராது என்றும் தேறாது
    வாராது உடனே வாழாது
    கூறாது உண்மை காணாது
    மாறாது வழமை மாறாதே...!

    வாழ்த்துக்கள்!

    த ம.2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி வாழ்த்துகளுக்கும், தமிழ்மண வாக்கினிர்க்கும்....

      நீக்கு
  4. தொடரும் ஏக்கம் இன்னும் குறையவில்லை. நன்றாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  5. //எல்லைகள் வகுத்த எண்ணற்ற கோடுகளின் சமுதாய கிறுக்கலில்// இந்த வரிகளை மிக ரசித்தேன் !! கோடுகள் புள்ளிகளால் ஆனது :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் உண்மைதான் புள்ளிகளில் தொன்றும் மாற்றமே கோடுகளையும் மாற்றும்... நன்றி

      நீக்கு