பக்கங்கள்

கவலைகளுக்கான கல்லறைகள்...



எனக்கான கவலைகளை
பல பொழுதுகளில்
நானே தோண்டி
புதைத்து விடுகிறேன்

யாருமற்ற கணங்களில்
புதைத்தவைகளை நானே
சிரமங்களுடன் மேலே
இழுத்தும் வைக்கிறேன்

சிலநேரம் உடைபட்டும்
சிலநேரம் உருவாகியும்
ஓய்வின்றி - என்
கல்லறைத் தோட்டங்கள்

தனி ஒருத்தியாய்
தோர்த்தும் தொடுத்தும்
சோர்ந்து ஓய்வினை
எதிர்நோக்கியவாறு நான்

எப்பொழுதும் புதிராகவே
இருக்கின்றன - என்
கவலைகளுக்கான
கல்லறைத் தோட்டங்கள்

ஒரு நாளின்
மையப் பகுதியில்
கல்லறைகளின் மத்தியில்
சிந்தனையுடன் வீற்றிருக்க

தூரத்திருந்து நண்பன்
கையசைத்து உரைக்கிறான்
புதைப்பதைக் காட்டிலும்
எரிப்பது சிறப்பென்று


-- பிரியா

12 கருத்துகள்:

  1. எரிப்பது சிறப்புதான்! ஆனால் சுலபமாய் முடிந்து விடுகிறதா என்ன? கனமான ஒரு விஷயத்தை ரசிக்க வைக்கும் வரிகளில் கவிதையாக்கித் தந்திருக்கீங்க ப்ரியா! பிரமிக்கிறேன் உங்களை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்.. நிச்சயமாய் சுலபமான காரியம் இல்லை... அனால் இது ஒரு வகை தீர்வே.. கவலைகளை மனதில் புதைத்து வைக்கையில் சமயம் வரும்போது அவை வெளிவரவே துடிக்கும், அதற்க்கு பதில் அவற்றை முற்றிலும் நீக்கி விட்டால்?

      நீக்கு
  2. எது செய்தாலும் நினைவுகள்.................... எதையும் மற்றும் சக்தி காலத்திற்கு உண்டு...!

    பதிலளிநீக்கு
  3. கவலைகளை கல்லறையில் புதைத்துவையுங்கள்
    கஷ்டங்களை காலால் மிதித்து விடுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புதைத்து வைத்த கவலைகள் மீண்டெழுந்து வருவதன் வெளிப்பாடே இக்கவிதை... நன்றி சார்..

      நீக்கு
  4. கவலைகளாஇ பற்றி கவலை பட்டுக்கிட்டே அழகான கவிதை

    பதிலளிநீக்கு
  5. சிறப்பான சிந்தனையில் உதித்த கவிதை! அருமை! நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்... தொடர்ந்து வாருங்கள்.. :)

      நீக்கு
  6. உண்மை தான் தோழி. கவலைகளை புதைப்பதைக் காட்டிலும் எரித்து விடுவதே சிறந்தது.
    ஏனெனில், மனதின் அடியில் புதைந்து போன கவலைகள், சில வேளைகளில் நினைவுகளை முட்டிக் கொண்டு எட்டிப் பார்ப்பதுண்டு.

    அழகான கவிதை,வாழ்த்துகள் தோழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சகோ... கடினமெனினும் எரிக்கப்பட்ட கவலைகள் நம்மை மீண்டும் தீண்டுவதே இல்லை... ஆகவேதான்

      நீக்கு