பக்கங்கள்

ஓ வண்ணத்துப்பூச்சியே !

ஓ வண்ணத்துப்பூச்சியே ! ஓ வண்ணத்துப்பூச்சியே !
எங்கேதான் ஓடுகிறாய்
நிற்காமல் நீயும்?

அது என்ன
உன் முதுகில்
இத்தனை அழகாய் கோலம்

யாரடி வரைந்தார்
சலிக்காமல்
இத்தனை புள்ளிகளுடன்!

நீ என்ன
ரங்கோலி கலவையா
வரைமுறை இன்றி
இத்தனை நிறங்கள்
உந்தன் மேனியில்.......

ஒரு சமயத்தில்
இத்தனை மலர்களுடன்
காதல் செய்கிறாயே

எந்த மலரும்
உன்னைக் கேட்கவில்லையா
நீ என் இப்படி என்று

என்னவெல்லாம் மாயம் செய்தாய்
மலர்கள் உன்மேல் - தீராத
மயக்கம் கொள்ள

அட!
என்னதான் அவசரமோ
இப்படி நில்லாமல்
பறக்கிறாய்

எனக்கும் தான்
கொஞ்சம் கற்றுக்கொடேன்
நில்லாமல் ஓடும்
உந்தன் சுறுசுறுப்பை

ஒரு கேள்விக்கானும்
விடை சொல்லேன்
பாவம் நானும்

--- பிரியா 

3 கருத்துகள்:

 1. வண்ணத்துப்பூச்சியின் வருகை அருமை...

  பதிலளிநீக்கு
 2. Agenda
  The debut event of the Coimbatore bloggers, acknowledging our existence as a community. The agenda is very simple - we get to know each other, what we are writing about, and what we are looking at.
  Register now:
  http://www.indiblogger.in/bloggermeet.php?id=237
  When?
  Sunday, December 15th, 2013 (4:30 PM - 7:30 PM)

  Where?
  Cafe Coffee Day
  Thiruvenkatasamy Road
  RS Puram
  Coimbatore - 641002

  Here's wishing all of you Coimbatore IndiBloggers an awesome meet!

  The IndiBlogger Team

  பதிலளிநீக்கு