பக்கங்கள்

நூல் அறிமுகம் - உருமாற்றம் (The Metamorphosis)

நான் வாசித்து ருசித்த சில நூல்களை அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இத்தளத்தில் நூல் அறிமுகம் பகுதியை சில நாட்களுக்கு முன் தொடங்கியிருந்தேன். ஆனால் சில காரணங்களால் முதல் அறிமுகத்திற்க்குப் பின் நீண்ட நாட்களாக ஏதும் நூல்களைக் குறித்து இங்கே என்னால் பேச இயலவில்லை. இடைவெளி கொஞ்சம் பெரிதெனினும் இம்முறை மற்றுமொரு ஆகா சிறந்த நூலுடனே தங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.

பிரான்ஸ் காப்கா (FRANZ KAAFKA )அவர்களின், தமிழில் உருமாற்றம்  என்ற பெயரில் வெளிவந்த ஜெர்மன் மொழி நூலான THE METOMORPHOSIS என்பதுவே அதுவாகும்.

மனிதர்கள் பொதுவாகவே அவர்களுக்கு விருப்பப் பட்டதை செய்ய   அனுமதிக்கப்படுவதே இல்லை பொதுவாக இவை பெரும்பாலும் பாதிப்பது படிப்பு வேலை இதை போன்ற விடயங்களில்தான்.  அப்படியான கால கட்டங்களில் தனக்கு விருப்பம்  இல்லாத ஒன்றை செய்யும் பொழுது தனது கனவுகள் முடக்கப் படும் பொழுது அவன் தனக்குள் ஒரு புழுவினைப்போல் பூச்சியைப்போல் உணர்கிறான். அப்படியானதொரு மன நிலையில் இருக்கும் நம்முடைய எழுத்தாளர் காப்கா தன்னுடைய  அந்த நிலையை இந்த கதையின் முக்கிய கதாப்பாத்திரம் மூலம் விளக்குகிறார்.

இக்கதையின் நாயகன் ஒரு நிறுவனத்தில் மார்க்கட்டிங் துறையில் பணியில் இருக்கிறான். அவனுக்கு விருப்பம் இருக்கிறதோ இல்லையோ அவன் உடல் ஒத்துழைக்கிறதோ இல்லையோ நிதமும் பயணம் செய்தே தீர வேண்டிய சூழ்நிலை அவனுடையது. இருப்பினும் தன்னுடைய குடும்பத்திற்காக தனக்கு விருப்பமே இல்லாத அந்த வேலையை அவன் செய்கிறான். அப்படியான ஒரு நீண்ட பயணத்தின்  அடுத்த  நாளின் காலைப்  பொழுதில் அவன் தன் படுக்கையில் இருக்கிறான். அன்றும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இரயிலின் நேரம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது, அலுவலகத்திற்கு சென்று சில பொருள்களை எடுத்துக் கொண்டு பின் இரயில் நிலையம் செல்ல வேண்டும்.

அப்பொழுதுதான் அவன் உணர்கிறான் தான் அன்றைய பொழுதில் ஒரு பூச்சியாக மாறியிருப்பதை. உடலளவில் ஒரு முழுமையான பிரமாண்ட பூச்சியாக மாறியிருப்பதை, அவனால் தன்னுடைய உடலை அசைக்கவே முடிவதில்லை. அக்கணத்தில் அவன் உடலுடையதான அவன் போராட்டத்தில் காலம் கடக்கிறது இவன் குறித்த நேரத்தில் பணிக்கு வராததை அடுத்து அவன் நிறுவன தலைமை எழுத்தர் அவனைத்தேடி அவன் இல்லம் வருகிறார். அதன் பிறகே அவன் நிலை குறித்து அனைவருக்கும் தெரிய வருகிறது. அச்சமும் கவலையும் அனைவரையும் சூழ்கிறது. அவன் வீட்டின் நிலைமை அப்படியே புரட்டி போட்டதுபோல் மாறுகிறது. அவன் வீட்டில் ஒரே வருமானம் ஈட்டும் நபர் அவன் தான். இப்பொழுது குடும்பத்தினைக் குறித்த கவலையும் அவனை சூழ்கிறது.குடும்பத்திலும் அவனைக்  குறித்த கவலை.

இதன் பிறகு காப்கா இந்த கதையை நகர்த்திச் செல்வதுதான் அலாதியானது. தன மனதின் பிரதிபலிப்பை அவர் குடும்பத்தினருக்கும் அவருக்கும் இருக்கும் உறவினை அவர் இக்கதையின் மூலம் அதன் நாயகனின் உருமாற்றத்தின் வழியே சொல்லிக் கொண்டு செல்வார்.நாயகனின் உருமாற்றத்தினால் அவன் குடும்பத்தில் ஏற்படும் மாறுதல்கள் உறவுகளில் ஏற்படும் மாறுதல்கள் அனைத்தையும் கொண்டு இறுதி முடிவு மனதை கணப்படுத்தியே செல்லும். நிச்சயம் படித்து பாருங்கள் உங்களிலும் அந்த நாயகனை வாழ்வின் ஏதேனும் ஒரு கணத்தில் உங்களால் காண இயலும்

கதையை கீழுள்ள லிங்கில் ஆன்லைனில் படிக்கலாம். படித்துவிட்டு உங்கள் கருத்தையும் கூறுங்கள்.

http://balajikrishna.wordpress.com/2013/07/09/உருமாற்றம்-ஃப்ரன்ஸ்-காஃ/
--பிரியா

ஒரு செல்லப் பெயர்

நட்பெனும் பெயர் கொண்ட
ஒற்றைப் பாதையில் 
நாம் இப்பொழுது 
பயணித்தாலும்

சகியே .....

நோக்கும் இடத்திலெல்லாம் - சகியே
உந்தன் நிலவு முகத்தினினால் 
காணும் பெண்ணிலெல்லாம் - சகியே 
என்மனம் காதல் கொள்ளுதடி

சிதறல் -6

தடைகளின்றி 

நிறைவேறாத 
பலவற்றுடன் 
நிறைவேறிய 
ஒன்றாய் 
நகர்ந்து 
செல்கிறது - இந்த 
நீண்ட 
வாழ்க்கை 

நம்பிக்கையுடன்....பரிதாபத்திற்குறிய நாட்களின்
கடைசி பகுதியின்
இறுதி நொடிகளில்
நிற்கிறது வாழ்வு

நாளைய பொழுதின்
நீங்காத நம்பிக்கையுடன்
நீள்கிறது பொழுதுகள்
எதிர்வரும் பாதையினூடே

கண்ணீர் விட்டழுத
நேற்றைய பொழுதின்
நியாபகங்களின் ஊடே
நினைவுகளைத் தேக்கியபடி

கன்னத்தில் விழுந்திட்ட
கண்ணீர் துளிகள்
சட்டென கரைகின்றன
காற்றில் கற்பூரமாய்

கரைகளைக் கடந்து
தடைகளைக் கடந்து
தொடர்கிறது வாழ்க்கை
வாழ்வோமென்ற நம்பிக்கையுடன்--பிரியா

ஒரு மௌனம் ஒரு காதல்அருகருகே பயணித்தும்
கண்கொண்டு பார்த்தும்
பேச்சினைக் கடந்து
மௌனிகளாகவே தொடர்கிறோம்
நானும் சாலையோர மரமும்

எங்களுக்குள் கதைக்க
எவ்வளவோ இருந்தும்
மௌனத்திலேயே கரைகின்றன
எழுத்துக்களற்ற எங்களின்
எண்ணப் பரிமாற்றங்கள்

தேர்ந்ததொரு புரிதலில் 
கிளைகளை அசைத்து 
சம்மதம் சொல்கின்றன 
என் மௌனங்களும்
தங்களுக்கு அர்த்தப்பட்டதாய்மறுத்துப் பேசாத 
மௌனக் காதலன் 
கிடைத்த மகிழ்ச்சியில்
குதூகலமாய் - என் காதல்
கிளைகளுடனும்  மரங்களுடனும் 

வார்த்தைகளைத் தேடும்
அவசியம் ஒழிந்ததில்
தடைகளைத் தாண்டிய,
எண்ணங்கள் மிதக்கின்றன
ஏகாந்த வெளியில்


-- பிரியா

ஒளி காட்டும் வழி


தீமையொழிந்து நன்மை பெருகிட
துன்பமழிந்து இன்பம் செழித்திட 
வெடிக்கட்டும் வெடிகள் திசையெங்கும்

இல்லாதோரும் இன்புற்று மகிழ
இனிப்பு பலகாரங்களில் பெருகட்டும்
பகிர்ந்தளிக்கும் சமத்துவ மாண்பு

மூடநம்பிக்கை இருளினை நீக்கி
பகுத்தறிவு வெளிச்சம் பரவிட 
எரியட்டும் தீபங்கள் ஓராயிரம் 

ஒலிஒளி வெள்ளமாய் இரவு 
உரைக்கட்டும் இவ்வுலகிற்க்கு - புது 
பாதைதனை தேர்ந்திட்டோம் நாங்களென்று 

உலகெங்கும் பரவட்டும் 
ஒளிசிந்தும் பாணங்களின் வேகம் 
நம் வெற்றியை பரைசாட்ட

வீறுகொண்ட வேங்கைகள் சேரட்டும்
புதுப்பாதைகள் எங்கும் நிறைந்ததாய் 
புதுப்பயணங்கள் பல செறிந்ததாய்

புனிதங்கள் கட்டி அமைத்த
பிம்பங்கள் பொழிந்திட - தொடரட்டும்
பயணங்கள் ஒளிகாட்டும் வழிதனிலே-- பிரியா

அனைவருக்கும் இனிய தீப ஒளித்திருநாள் வாழ்த்துக்கள்...

தேநீரின் கதையிதுஇளம் மாலையொன்றில்
நினைவுகளில் மூழ்கியபடி
தேநீரில் இலயித்திருந்தேன்
தன்னிலை மறந்து

குதித்தது தேநீர்
கோப்பையிலிருந்து
தன் கதையினைக்கூற
உயிர் பெற்றதாய்

சிதறல் - 5


நம் பொழுதுகள்

நான் உனக்காகவும் 
நீ எனக்காகவும்
பகிர்ந்தளித்த பொழுதுகள்
உனக்கானவையாயும்
எனக்கானவையாயும் 
பகிரப்படுகின்றன நினைவுகளில்...


நேரம்

நமக்கான 
நேரங்களும் மணித்துளிகளும் 
நம்முடையதாகவே இருக்கட்டும் 
வட்டியுடன் திரும்பினாலும்
முதலில் தொலைத்ததற்க்கு
முற்றிலும் ஒப்பாகாது.பழைய தடங்கள்

நேற்றைய பொழுதின்
தடயங்களும் கூட
தொடர்வதில்லை 
இன்றைய பொழுதின்
சில நினைவுகளால்அடங்கா காலம்

யாருக்கும் 
அடங்கா காலத்தை
தனக்குள் 
அடக்கும் முயற்ச்சியில்
"கடிகாரம்"--- பிரியா

அழகிய விடியல்

களிப்புகள் நிறைந்த
விடியல் ஒன்றினில்
இரசிக்கிறது மன்ம்
காண்பவை அனைத்தையும்

என்னுயிர் தோழன்...

எதிர்காலம் இதுதானென்று
எதுவும் அறியாமல்
எண்ணச் சிக்கலில்
சிக்கித் தவிக்கையில்

உனக்கான பாதை
இதுதான் என்று
கைகாட்டியாய் நின்று
வழிகாட்டியாய் ஆனவன்

ஒரு வெளிநாட்டுத் தந்தை....
கனவுகள் காண்கிறேன் நிதமும்
கண்ணே உன்னைக் கண்டிடும்
திருநாள் நோக்கியே!

தேசங்களின் தூரங்களின் மீது
இதுவரை இல்லாத கோபம்
வந்ததென்ன இப்போது உன்னாலே!

இந்தியா பெண்களுக்கான தேசமா?


இரண்டு மாதங்களுக்கு முன்பு நான் ஒரு கேள்வி என்ற பெயரில் பெண்ணிய கவிதை ஒன்றை எழுதி இருந்தேன்... அந்த கவிதைக்கு இங்கே எதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முகநூலில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பை சந்தித்தேன்... நான் ஏதோ இல்லாத ஒன்றை கவிதையாய் கர்ப்பனையில் வடித்தது போல.

யாருக்காக யாரை நினைத்து ஏழுதினேனோ அந்தப் பெண் வர்க்கத்தை சார்ந்தவர்களிடமே எதிர்ப்பை சம்பாதித்தது அவர்களுக்கு என் எழுத்தின் உண்மையைப் புரிய வைக்க மிகப் பெரிய பிரம்ம பிரயத்தனம் செய்ய வேண்டி இருந்தது... இதற்க்கும் அக்கவிதையின் மிக முக்கிய கருப்பொருள் வரதட்ச்சணைக் கொடுமையும் பெண்களின் அடிமை நிலையுமே ஆகும்.


இதை இப்பொழுது இங்கே பகிர காரணம் இணையத்தில் இன்று பார்த்த B.B.C ன் India a Dangerous Place to be a woman என்ற ஒரு மணி நேர டாகுமென்ட்ரி. இந்த படத்தைப் பார்க்கையில் எனக்கு அந்த நினைவுகள் மீண்டெழுந்து வந்தன அதனால்தான்.. கீழே அதனுடைய வீடியோ லின்க் கொடுத்துள்ளேன் உங்கள் நேரத்தின் ஒரு மணித் துளியை நிச்சயம் நீங்கள் இதற்க்காக செலவு செய்யலாம் தவறொன்றும் இல்லை..

தொலைத்ததும் தொலைந்ததும்

எண்ணக் கிறுக்கல்களின்
எல்லைக்குள் அடைந்து
நடைபோடும் நாட்களில்
மறைந்திருக்கிறது பலவற்றின்
தொடக்கமும் முடிவும்

ஒரு கேள்வியும் ஒரு பதிலும்


ஒரு கேள்வி
------------------

அவரவர்க்கானதை அவரவர்
தேடிக் கொண்டிருக்க - இங்கே
"பொதுவானவை" என்று
எவை இருக்கக் கூடும்ஒரு பதில்
---------------
ஒரு புரிதலுக்கான
போராட்டத்தின் பின்னே
உனக்கானவையும் எனக்கானவையும்
மாறுகின்றன
"நமக்கானவையாய்"-- பிரியா


கடலும் கிழவனும் (மொழிபெயர்ப்பு நூல்)

அறிமுகம்:

எழுத்துக்கள் அனைத்திற்க்கும் ஆதாரமாய் இருப்பது நல்ல வாசிப்புத் தன்மையே.அந்த அளவில் நான் வாசித்த என்னை மிகவும் கவர்ந்த சில புத்தகங்களையும் எழுத்தாளர்களையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளும் முயற்ச்சியாக புத்தக அறிமுகம் என்ற புதிய பகுதியை இன்று முதல் தொடங்குகிறேன். இதில் முதல் நூலாக எர்னெஸ்ட் ஹெமிங்க்வே என்ற ஆங்கில எழுத்தாளரின் The old man and The sea தமிழில் கடலும் கிழவனும் என்ற சிறு நாவலை இங்கே பகிற்கிறேன்.

சிதறல் - 4நினைவுகளினூடே
------------------------

யாருமற்ற 
கணங்களின் யோசிப்பில்
ஏதோ ஒன்றின் 
ஆரம்பப் புள்ளியாய்
சில நினைவுகள்

இது ஒரு நதியின் பயணம்..,ஊற்றுக்கள் கொடுக்கும் உயிரில்
உடலாகி ஊரும் கிளைகள்

இசைக்கருவி அற்றுப் பாடி
இலைகளில் தாளம் போட்டு

என் கூண்டுப் பறவைகளே...என் சின்னஞ்சிறு பறவைகளே
என் சின்னஞ்சிறு பறவைகளே

வண்ணக் கயிற்றினில் மயங்கியே
எணணங்களைத் தொலைத்ததும் ஏனோ

ஒரு ஒவியம்தேடிவந்த விடயங்களை
தனக்குள்ளே மறைத்து
செருக்குடன் நிற்கிறது
செதுக்கப்பட்ட ஓவியம்

கள்ள மழை
ஆயிரமாயிரம் துளிகளில்
இரவினைக் கிழித்து
பூமியில் வந்திறங்கியது
மழையின் பட்டாளம்

பிரிவின் எச்சம்...


எனக்காயும் உனக்காயும்
காத்திருந்த நாட்கள்
பனிநிறைந்த காட்டில்
சாம்பலாய் மாறிட

சருகுகளால் நிறைந்திருக்கும்
நந்தவனத் தோட்டத்தில்
எப்படித்தான் தேடிட
நமக்கான பூக்களை

இரவு...இரவென்பது மாயங்களுடன் கலந்து
இமைகளை இணைத்து வைக்கும்
இயற்கையின் இரட்டை நாதங்களில்
இயல்பான ஒன்றாகவே

இப்படியாக மனிதர்கள் - 3

பாகம் - 3 (இறுதி பகுதி)

முகிலனின் அருகில் நின்றிருந்த பாட்டி " அட பாவமே வயசான மனுஷன் பசியில கெடக்கும் போலயே" என்று பரிதாப பட்டவாறே அந்த பெரியவரை கூவி அழைத்தார் " இந்தா பெரியவரே  இங்க வாங்க " பாட்டியின் அழைப்பை ஏற்று அவரும் ரோட்டைக் கடந்து வந்தார்.

சாதியின் பெயரால் இன்னுமொரு மரணம்...
இன்னும் எத்தனை பேரை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் காவு  குடுக்க போகிறோம்.. இன்னும் எத்தனை பெரியார்கள் வேண்டும் நம்மை திருத்துவதற்கு.. மனம் துடிக்கிறது

மரணம்

இன்னும் பலரை காவு கொள்ள காத்திருக்கும் சாதியின்  பெயரால்...
மரணம் பல சுவடுகளை
நம்முன் விட்டுச் செல்கிறது

சமூக சீரழிவின் எதிரொலியாய்
சில எழுந்து நிற்கின்றன

இப்படியாக மனிதர்கள் - 2

பாகம் - 2

பாட்டி கொடுத்த டீ மற்றும் பிஸ்கட் இரண்டையும் சாப்பிட்டுக் கொண்டே  முகிலன் ரோட்டை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்படியே எதிரில் இருந்த கடைகளின் பக்கம் அவன் பார்வை சென்றத ஒரு ஒரு கடையாய் நோட்டமிட்டு கொண்டே வந்தவன் பார்வை அங்கே பேக்கரியில்  நிலைத்து நின்றது.

இப்படியாக மனிதர்கள் ...

பாகம் - 1

அந்த மாலை நேரம் மிகவும் இதமாக இருந்தது. தென்றலாய் வீசிய காற்று அன்று பகல் பொழுதில் வாட்டிய தகிக்கும் வெயிலுக்கு அருமருந்தாய் இருந்தது. ஆஹா இந்த தென்றல்தான் எத்தனை சுகமாய் இருக்கிறது என்ன இதமாய் தழுவிச் செல்கிறது. இந்த மாலைப்பொழுது மிகவும் இதமாய் தானிருக்கிறது.

இக்கவிதைஎன் வாசலில்
காத்துக் கொண்டிருக்கும்
மரணப் பிசாசின்
பயமற்ற தருணமொன்றில் - நான்
இக்கவிதையை எழுதுகிறேன்

கேள்வி ஒன்றுஊரெங்கும் நாடெங்கும் தேடியலைந்து
ஜாதிஜாதகப் பொருத்தம் பார்த்து

கூன்குருடு செவிடுபேடு நீக்கி
முகப்பொருத்தம் முற்றிலும் பார்த்து

மழையீன்ற முத்துக்கள்...
தாளமிட்டு மேலே விழுந்து
துள்ளிக் குதிக்கும் துளியதனை
சின்னக் கைகள் நீட்டியே
சேர்த்தே பிடித்திட முனைகின்றேன்

மணிவண்ணன் என்றொரு மாமனிதர்

ஒரு திரை உலக பிரமுகரின் மறைவிற்கு மனம் மிகவும் அழுகிறதென்றால் அது நிச்சயமாக இவர்தான்... நான் அதிகம் நேசித்த மிக சிறந்த நடிகர்... காமெடியோ குணசித்திரமோ அனைத்திலும் முத்திரை பதிப்பவர்.... தமிழ் திரையுலகில் உண்மையிலேயே தமிழீழ மக்களுக்கு ஆதரவு அளித்த நல்ல மனிதர்... எந்த விதமான அரசியல் சமரசங்களுக்கும் கட்டுப் படாதவர்... இயக்குனர், நகைச்சுவையாளர், பகுத்தறிவாளர், தமிழுணர்வாளர், நடிகர் என பன்முக முகங்களுக்குச் சொந்தகாரர்...

புதிய விடியல் - பகுதி 2


புலர்ந்தது மற்றுமொரு அழகான காலைப்பொழுது. அருமையாய் அழகாய் தன்னுடைய பணியை தொடங்க அதோ அங்கே வந்துவிட்டான் சூரியன்.தூங்கும் அனைவரையும் தட்டி எழுப்புகிறான் எழுந்திருங்கள் இதோ உங்களுக்கான அடுத்த நாள் இங்கே இனிதாய் இனிமையாய் , என்னை போல் நீங்களும் உங்கள் கடமையை செய்ய செல்லுங்கள் என்று சொல்லாமல் சொல்லி செல்கிறான் அனைவரிடத்திலும்.

அந்த குடிசையில்அந்த சூரியன் வந்து சொல்லும் முன்பே எழுந்து பணியை தொடங்கி விட்டனர் பொன்னியும் வளவனும். செல்வி வெளியில் வாசல் தெளித்து கோலமிட்டு கொண்டிருந்தாள் அழகாய். வளவன் காலையிலேயே இஸ்திரி வேலையை தொடங்கி விட்டான் அப்பொழுதுதான் வெயில் உரைக்கும் முன் இந்த சூட்டிலிருந்து வெளியே வர முடியும். பண்ணையார் வீட்டு துணிகளை அவன் இஸ்திரி செய்து கொண்டிருந்தான்.

அன்று ஞாயிற்று கிழமை ஆதலால் செல்வியும் நிதானமாக வேலைகளை செய்து கொண்டிருந்தாள். " ஏம்மா செல்வி, நா இந்த துணிகள இஸ்திரி போட்டு வெய்க்கறேன் நீ கால சாப்பாட்டுக்கு அப்புறம் இத கொண்டு பொய் பண்ணையாரம்மாட கொடுத்துட்டு வந்துரயா மா" என்றான் வளவன். செல்வியும் சரி என்று உரைத்து விட்டு தன் பணிகளைத் தொடர்ந்தாள்.
                                                                         
                                                              ***********

அந்த ஊரிலேயே மிகப் பெரிய வீடு பண்ணையாரின் வீடுதான். அந்த வீட்டின் பெரிய காம்பவுண்ட் கேட்டை திறந்து கொண்டு உள்ளே சென்றால் அதன் ஒரு புறம் மிக நீளமான மாட்டு கொட்டகை அதனை ஒட்டினாற்போல் உள்ள குதிரை லாயத்தில் இரண்டு குதிரைகள் கட்டப்பட்டிருந்தது. இந்த பக்கமாக மாட்டு வண்டி முதல் இந்த காலத்து புதிய ரக கார் வரை வரிசை கட்டி நின்றன.அந்தப் பெரிய பங்களாவினுள் பண்ணையாரம்மா அதட்டி அதட்டி வேலைக்காரர்களிடம் வேலை வாங்கி கொண்டிருக்கும் சத்தம் வெளி வரை கேட்டது .

பண்ணையார் வெளியே சாய்வு நாற்காலியில் வெற்றிலை பாக்கு பெட்டியுடன் அமர்ந்து கொண்டிருந்தார். அவரருகே கணக்கு பிள்ளை பவ்யமாய் நின்று கொண்டிருந்தார்.கணக்கு பிள்ளை தலையை சொறிந்தவாறே பேச்சை ஆரம்பித்தார்" அய்யா உங்க கிட்ட ஒரு சமாசாரம் சொல்லனும்னு" என்று மெதுவாய் இழுத்தார். " என்னய்யா கணக்கு ரொம்பவும் இழுக்கறே என்ன விஷயம் சட்டு புட்டுன்னு சொல்லு" என்றார் பண்ணை.

" அய்யா அது வேற ஒன்னும் இல்லீங்க. விஷயம் நம்ம தம்பி சேதுபதிய பத்தி தானுங்கஅதுதா கொஞ்சம் ரோசன பின்ன ஒன்னும் இல்லீங்க" என்று இழுத்து இழுத்து கொஞ்சம் பயத்துடன் சொல்லி முடித்தார். தனது மகனை பற்றி கணக்கு பிள்ளை சொல்வதாய் தொடங்கிய உடனே பண்ணையாரின் முகம் கருத்தது.அவரின் முக மாற்றம் கணக்கு பிள்ளையும் கொஞ்சம் பயமுறுத்தியது.

யோசனையாய் வெற்றிலையை மென்றவாறே கேட்டார் " என்ன விஷயம் கணக்கு இழுக்காம சொல்லு" " அய்யா நம்ம தம்பி அரசாங்கத்துக்கு கொடுக்குற பணம் வர வர அதிகமாயிட்டே போகுது..... அதுனால தினமும் நெறைய பிரச்சனைகள், நிதமும் யாராச்சும் ஒருத்தவங்க ஏதாச்சும் பிரச்சனைய சொல்லிட்டு வந்துகிட்டே இருகாங்க.. நீங்க பாத்து எதாச்சும் செய்யணும் சடுதியா அதுதா.. உங்க காதுல போட்டு வெப்பமேனு...." என்று இழுத்து முடித்தார் கணக்கு." அரசாங்கத்துக்கு கொடுக்கறதா? " புரியாமல் கேட்டார் பண்ணை. " அதுதான் யா டாஸ்மாக், குடிகறதுக்குனு செலவு பன்றததா அப்படி பூடகமா சொன்னேன்" என்றார் பண்ணை.

" அதுதான் ஊர் பூரா பரவி மானம்கெட்டு கெடக்குதே இதுல என்ன பூடகம் வேண்டி கெடக்குது" கோவத்துடன் முணுமுணுத்தார் பண்ணை. " இந்த கருமம் புடிச்சவன் எத்தன வாட்டிசொன்னாலும் கேக்க மாட்டேன்குறான். ஒத்த பிள்ளைனு சொல்லி செல்லம் குடுத்து கெடுத்து வெச்சுருக்கா அவ அம்மா. கட்டிக் காத்த ஜமீன் மானம் மறுவாத எல்லாம் போச்சு. ஏயா கணக்கு இந்த மருந்து மாத்திர ஏதோ இருக்காமே அத கொடுத்தா இந்த சனியனை கையால கூட தொட மாட்டாங்கலாமா கொஞ்சம் விசாரிச்சு பாருயா" என்று சொல்லிவிட்டு சோர்வுடன் எழுந்து உள்ளே சென்றார்.

ஆள் அரவம் கேட்டு  கணக்கு பிள்ளை திரும்பி பார்த்தார். செல்வி கையில் துணி மூட்டையுடன் வந்து கொண்டிருந்தாள். " யாரு வளவன் மக செல்வியா. துணி கொண்டுவந்தயாக்கும் போ போ உள்ள பண்ணையாரம்மாட்ட கொண்டு போய் கொடு போ" என்று கூறிவிட்டு தோட்டத்து பக்கம் செல்வதற்காய் ஆயத்தமானார்.செல்வியும் தலையாட்டிவிட்டு உள்ளே சென்றாள்.முன் வீட்டில் நின்று கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தாள்.


பண்ணையாரம்மா உள்ளே இருந்து வந்தவள் செல்வியை பார்த்து அவளருகில் வந்தாள்" என்ன செல்வி சௌக்கியமா. பள்ளிக்கூடம் போலயா. நீ பாடம் எல்லா நல்ல படிப்பயாமே நல்ல மார்க் வாங்குறேன்னு கேள்விபட்டேன். உன் அம்மா வரலையா நீ வந்துருக்க" என்று அடுக்கடுக்காய் கேட்டுக்கொண்டே துணி மூட்டையை பிரித்து பார்த்தவள் ஒரு சிலதை எடுத்து வெளியே வைத்து விட்டு மீதியை மீண்டும் கட்டி "செல்வி இதெல்லா சேதுபதியோடது கொஞ்சம் நீயே கொண்டு பொய் அவன் அறையில வெச்சுடு. மாடிப்படி ஏறுறதுனா எனக்கு படு சிரமம். எல்லா இந்த மூட்டு வலிவந்ததுல இருந்துதா.. மேல போய் வலது பக்கம் ரெண்டாவது அற அவனோடது" என்றவாறே மூட்டையை அவளிடம் அளித்தாள்.

செல்வி படியேறி மேலே சென்றாள் கொஞ்சம் யோசித்து வலது புறம் திரும்பி இரண்டாவது அறையின் முன்னே நின்றாள். கதவு லேசாய் சாத்தப்பட்டு இருந்தது. தயக்கத்துடன் லேசாய் கதவை தட்டினாள் " யாரு ?" என்ற அதட்டல் குரல் கேட்டது. " நான் தேச்ச துணி கொண்டு வந்துருக்கேன் அம்மா உங்க அறைல வைக்க சொன்னங்க" என்று வெளியிலிருந்தே பதிலுரைத்தள் செல்வி. "உள்ளே வா" என்றது குரல். செல்வி மெதுவாய் கதவை திறந்து உள்ளே பார்த்தாள்.உள்ளே ஒரு கையில் மது புட்டியும் இன்னொரு கையில் புகையும் சிகரேட்டுமாய் அமர்ந்திருந்தான் சேதுபதி.

செல்வி வேகமாய் உள்ளே சென்று மேஜையை தேடி உள்ளே இருந்த மேஜையின் மீது துணி மூட்டையை வைத்து விட்டு வெளியேற எத்தனித்தாள். அவள் உள்ளே வந்ததில் இருந்து அவளையே பார்த்துக் கொண்டிருந்த குடி போதையில் இருந்த சேதுபதி அவளைவழி மறித்தான் . "நில்லு". ஒரு நிமிடம் நின்ற செல்வி நிலைமை சரி இல்லை என்பதை உணர்ந்தவளாய் " நா போகணும்" என்று வேகமாய் விலகி நடக்க யத்தனித்தாள். நிதானமில்லா சேதுபதி அவள் கையை பிடித்து இழுக்க நொடியில் வந்த கோவத்தில் பலாரென அவன் கன்னத்தில் அறைந்து அவன் கையை உதறி வெளியே ஓடினால் வீடு நோக்கி.

மாடி வராந்தாவில் ஒரு மூலையில் நின்ற பண்ணையார் இவற்றை எல்லாம் எதேச்சையாக கவனிக்க நேர்ந்தது. மகனின் மீதான ஆத்திரம் எல்லை கடந்தது. இருப்பினும் ஜமீனும் பரம்பரை கௌரவமும் அவரை மகனுக்கு எதிராயும் வெளுப்பவன் மகளின் சார்பாகவும் எதையும் பேச விடாமல் தடுத்தது.


                                                                                                                 (தொடரும் )

-- பிரியா


முதல் பகுதியைப் படிக்க (Part 1)

http://wordsofpriya.blogspot.in/2013/06/1.html

இறுதி பகுதியைப் படிக்க (Last Part)

http://wordsofpriya.blogspot.in/2013/04/blog-post_16.html

புதிய விடியல் - பகுதி 1கால் கொலுசின் மணிகள் கலகலவென்று ஒலிக்க ஓடி வரும் சின்ன குழந்தை போல சலசலத்து ஓடி வருகிறது அந்த நதி. அந்த நதியை பார்க்கும் அனைவருக்கும் கவிஞர்கள் சொல்லி சென்ற வர்ணனை நிச்சயமாய் நினைவில் வரும். நதியை கொண்டு பெண்ணைப் புகழ்ந்தானா? இல்லை பெண்ணை கொண்டு நதியை புகழ்ந்தானா? அத்தனை அழகை கட்டி கொண்டு ஓடி வருகிறது நதி.


அதோ அங்கே தெரிகிறது படித்துறை. அதனருகில் சற்று தள்ளி இரண்டு கோவேறு கழுதைகள், உலகம் போகும் போக்கை பற்றிய கவலை ஏதும் அற்று தன் உணவை மென்றபடி.அங்கிருந்து சற்று தள்ளி அமர்ந்திருக்கிறாள் ஒரு பதின்ம வயது சிறுமி கையில் உள்ள புத்தகத்தில் ஆழ்ந்தவளாய் சூழ்நிலை மறந்து.படித்துறையில் துணி துவைக்கும் சத்தம் கேட்கிறது. அங்கே ஊர் மக்களின் ஆடைகளில் உள்ள அழுக்கை எல்லாம் சுத்தம் செய்வது வளவனும் அவன் மனைவி பொன்னியும். அங்கே அமர்ந்து படித்து கொண்டிருக்கும் சிறுமி அவர்களின் செல்ல மகள் செல்வி.

செல்வி பக்கத்து ஊரில் இருக்கும் மேல்நிலை பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள். படிப்பில் படு சுட்டி. மேல்நிலை தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று மேல்படிப்பு படிக்க வேண்டும் என்பது செல்வியின் கனவு. செல்வியின் தந்தை வளவனின் ஆசையும் அதுவே. ஊர்க்காரர்களின் துணிகளை வெளுப்பதில் கிடைக்கும் வருமானம் மட்டுமே அந்த குடும்பத்தின் ஒரே வருமானம். குறைந்த வருமானம் எனினும் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

"ஏ! புள்ள செல்வி இங்க எந்திருச்சு வா" கூவி அழைத்தாள் செல்வியின் அம்மா பொன்னி.
 " ஏ! புள்ள ... என்ன இப்போ உனக்கு. புள்ள படிச்சுட்டு இருக்கில்ல இப்போ எதுக்கு கூப்புட்டு தொந்தரவு பண்ற " என்றான் வளவன். " ஆமா பெருசா படிச்சு கிளிச்சுட்டாலும். உங்க புள்ள படிச்சு என்ன கலெக்டர் ஆகப்போறால. எப்படியும் கட்டி கொடுக்கற வூட்டுல நம்மள மாறியே ஊர் துணிய துவைச்சுதான் வவுத்த கழுவனும். அதுக்கு இப்போ இருந்தே தொழில கத்துக்கறதுதானே உத்தமம். அதுக்குதான் கூப்புடுறேன். அதுல என்ன தப்பு" என்றாள் பொன்னி. இந்த வார்த்தைகள் வளவனின் மனதை என்னவோ செய்தன அவன் முகம் இருண்டது.

" நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நா என் புள்ளைய நல்லா படிக்க வெச்சு கலெக்டர் ஆக்கதான் போறேன். அவ எம்புட்டு நல்லா படிக்கற புள்ள அவ கனவ எதுக்காக களைக்கனும். அவ என் மகளா பொறந்த ஒரே ஒரு காரணத்துக்காக அவளும் ஊர் மக்க அழுக்க வெளுத்துதான் பொழைக்க வேணுமா. இது என்ன அவளுக்கு தலை எழுத்தா. அப்படியே அது தலை எழுத்தாவே இருந்தாலும் நா அத மாத்ததான் போறேன். நீ வேணுனா பாரு." உறுதியாய் தெறித்தன வளவனின் வார்த்தைகள். பொன்னி அசந்தவளாய் பேசும் தன் கணவனையும், படித்து கொண்டிருக்கும்  மகளையும் மாறி மாறி பார்த்தவாறு நின்றாள்.

" ஏ| எதுக்கு இப்படி பாத்துட்டு நிக்கிறவ. நா நம்ம மகளோட தலை எழுத்ததான் மாத்தறேன்னு சொன்னேன். நமக்கு பொழப்பு இதுதான். வெயில் உச்சிக்கு ஏறுது பாரு சட்டு புட்டுன்னு வெளுத்துட்டு வீட்டுக்கு போவோம்.வெள்ளாவி வெக்கணும் பொட்டி போடணும் வேல கெடக்கு நெறையா" என்றபடி துணிகளை ஆற்று நீரில் அலச ஆரம்பித்தான் வளவன்.

சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் துணிகள் அனைத்தையும் வெளுத்து முடித்து கழுதைகளின் மேலேற்றி புறப்பட தயாரானார்கள். செல்வியும் ஒரு கையில் புத்தகத்தையும் மறு கையில்தூக்கு வாலியையும் எடுத்து கொண்டு அவர்களுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்தாள்.நடக்கையிலும் கூட கையில் புத்தகத்தை பிரித்து வைத்தவாறு படித்து கொண்டே நடந்தாள் செல்வி. " போதும் புள்ள ரோட்ட பாத்து நடந்து வா மீதிய வீட்டுல போயி படிச்சுக்கலாம். முள்ள கிள்ள காலுல ஏத்திக்காத" பரிவுடன் வந்தன வளவனின் வார்த்தைகள். செல்வியும் தந்தையின் பேச்சுக்கு கட்டுப்பட்டவளாய் புத்தகத்தை மூடி கொண்டு நடந்தாள்.

சிறுது நேரத்தில் அவர்கள் குடிசையை அடைய, பொன்னி வெள்ளாவி அடுப்பை பற்ற வைக்க சென்றாள், வளவன் கழுதைகளின் மேலிருந்த பொதியை இறக்கி வைத்துவிட்டு துணிகளை இஸ்த்திரி போட கரி துண்டுகள்  களைக்க சென்றான். செல்வி அவர்களுக்கான உணவை தயாரிக்கும் பொருட்டு குடிசைக்குள் சென்றாள்.

பொன்னியும் வளவனும் தங்கள் வேலையை முடித்து கொண்டு வர... அவர்களுக்கான உணவை சாப்பிட எடுத்து வைத்தாள் செல்வி. மூவரும் ஒன்றாய் அமர்ந்து உண்ண ஆரம்பித்தனர். உணவிற்கு பின் வளவன் திண்ணையில் சென்று படுக்கையை போட பொன்னி குடிசையினுள் அந்த கிழிசல் பாயை விரித்தாள் தான் படுக்க. செல்வி தூண்டல் விளக்கை இன்னும் கொஞ்சம் தூண்டி விட்டவளாய் புத்தகத்தை எடுத்து கொண்டு படிக்க அமர்ந்தாள்.

விளக்கின் ஒளியில் தங்கமாய் ஜொலித்துக் கொண்டிருக்கும் தன் மகளின் முகத்தையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தாள் பொன்னி. அவள் மனதுள் ஏதேதோ வகையினதாய் எண்ணங்கள் ஓடி கொண்டிருந்தன அவற்றுள் அன்று அவள் கணவன் படித்துறையில் பேசியவையும் ஓங்கி ஒழித்து கொண்டிருந்தன. அவள் கண்ணில் ஏனோ லேசாய் கண்ணீர் கசிந்தது. யாருமறியாமல் துடைத்து கொண்டேகேட்டால் " ஏ! புள்ள காலைல இருந்து படிச்சுகிட்டே இருக்கியே இப்ப வந்து கெடந்து உறங்கலாம்ல. காலைல படிக்கலாம்ல" பரிவுடன் ஒலித்தன அவள் வார்த்தைகள். " இல்லமா, பரிட்ச நெருங்கிட்டு இருக்கு இப்ப இருந்து படிச்சாதான் நல்ல மார்க் வாங்க முடியும். அப்போதான் மா மெரிட் ல சீட் கெடைக்கும் மேல் படிப்பு படிக்க" என்றாள் செல்வி

அவள் சொல்வதில் பாதி புரிந்தும் புரியாமலும் இருந்தாலும் புரிந்ததாய் ஒரு முனகலுடன் சுருண்டு படுத்தாள் பொன்னி. மீண்டும் மகளையே பார்த்து கொண்டிருந்தாள் உறக்கம் வராதவளாய்.எவ்வளவு நேரமோ தெரியாது திடீரென எதோ நினைத்தவளாய் எழுந்து அடுப்பை பற்ற வைத்தாள்,சத்தம் கேட்டு செல்வி நிமிர்ந்து பார்க்க வளவன் வெளியே இருந்து குரல் கொடுத்தான்" இந்த நேரத்துல என்ன புள்ள உருட்டற சத்தம்". " புள்ள கண்ணு முழிச்சு படிக்குதிள்ளஅதா ஒரு காபி தண்ணி போடலானு. நீ தூங்கு  மச்சான்" என்றாள் பொன்னி. செல்வி ஒரு புன்னகையுடன் மீண்டும் படிக்க தொடங்கினாள். வளவனும் ஒரு புன்னகை பூத்தான் எதோ ஒன்றின் புரிதலுடன், அதில் ஒரு நிம்மதியும் சேர்ந்தே இருந்தது.


                                                                                                                           (தொடரும் )

---- பிரியா


இரண்டாம் பகுதியைப் படிக்க (2nd Part)

http://wordsofpriya.blogspot.in/2013/06/2_12.html

இறுதி பகுதியைப் படிக்க (Last Part)

http://wordsofpriya.blogspot.in/2013/04/blog-post_16.html

புதிய விடியல் - பகுதி 3


பண்ணையாரின் வீட்டிலிருந்து வீடு வந்த செல்வி யாரிடமும் எதுவும் சொல்லாமல் அமைதியாய் குடிசைக்குள் சென்று உட்கார்ந்து கொண்டாள். போதிய மட்டும் தண்ணீரை குடித்து ஆசுவாசபடுத்திக் கொண்டு தந்தையும் தாயும் என்ன செய்கிறார்கள் என்று எட்டிப் பார்த்தாள், அவர்கள் இருவரும் அவரவர் வேலையில் மும்முரமாக இருந்தனர். செல்வி மெதுவாய் புத்தகத்தை எடுத்து கையில் வைத்து படிப்பதற்காய் அமர்ந்தாள். மனம் புத்தகத்தில் லயிக்காமல் எங்கோ வெறித்து பார்த்தவாறு அமர்ந்திருந்தாள்.


வளவனின் குரல் கேட்டு சித்தம் கலைந்தாள்" என்னப்பா " என்றாள். " நாங்க படித்துறைக்கு போறோம் நீ பாத்து இருந்துக்கோ புள்ள அத சொல்லத்தான் கூப்டேன்" என்றான் வளவன். ஏதோ யோசித்தவளாய்" நானும் உங்களோட வரேன் பா' என்று கூறி அவர்களுடன் கிளம்பினால் செல்வி. மூவரும் கழுதைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.


மூவரும் கிளம்பி சென்றனர்.ஆற்றுக்கு செல்லும் வழியில் சில சிறார்கள் பட்டம் விட்டு கொண்டிருந்தனர். அதை பார்க்கையில் செல்வியின் மனதில் குதூகலமாய் இருந்தது. அதை பார்த்து ரசித்துக் கொண்டே சென்றாள். அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவில் பண்ணையாரின் காரும் நின்று கொண்டிருந்தது. அதிலிருந்து இரு கண்கள் செல்வியே வெறித்து பார்த்து கொண்டிருந்தன. இதயரியாமல் அவள் பட்டம் விடுவதையே பார்த்து கொண்டு மெதுவாய் நடந்த வண்ணம் இருந்தாள். இந்த குதூகலத்தில் அவள் மெய் மறந்ததில் முன் சென்று கொண்டிருந்த பொன்னியையும் வளவனையும் விட்டு அவள் சற்றே பின் தள்ளி நின்றாள்.


திடீரென தன்னை உணர்ந்தவளாய் அவள் அவர்களின் பின்னால் வேகமாய் நடக்க ஆரம்பித்தாள். வழியில் இருந்த சோளக்காட்டின் வரப்பின் மீது வேகமாய் மனதில் தோன்றிய புதிய உற்சாகத்துடன் நடந்து சென்றாள். திடீரென்று சோளக்காட்டின் உள்ளிருந்து ஒரு கை அவளை பிடித்து உள்ளே இழுத்தாது. பயத்துடன் அலறி கொண்டே திரும்பியவள் அங்கே சேதுபதியை கண்டு திகைத்தாள்.அவன் ஒரு கையில் மது புட்டியை பிடித்து கொண்டே இன்னொரு கையில் அவள் கையை பிடித்து இழுத்துக் கொண்டு சென்றான். அவனது பிடி உடும்பு பிடியாய் இருந்தது. கோபம் குரோதம் தன்னிரக்கம் அனைத்தும் சேர்ந்து அவன் பிடியை வலுவாக்கியது." அப்பா.... " செல்வி பலம் கொண்ட மட்டும் அலறினாள். "டேய் விடுட கைய விடுடா " என்று அவனிடமும் போராடினால். மகளின் அலறல் குரல் வளவனை எட்டியது ஏதோ விபரிதம் என உணர்ந்தவன் வேகமாய் ஓடி வந்தான் வந்த வழியே. அங்கே சிதறிக் கிடக்கும் மகளின் புத்தகங்களையும் வேகமாய் அசையும் சோளக்கதிர்களையும் கொண்டு எதையோ யூகித்தவனாய் வெறி கொண்டு ஓடினான். சிறிது தூரத்தில் பண்ணையாரின் மகன் செல்வியின் கையை பிடித்து இழுத்து செல்வதை பார்த்ததும் அலறினான்" செல்வி....".


குரல் கேட்டு இருவருமே திரும்பி பார்க்க அங்கே வளவனை கண்டு செல்வியின் கண்களில் கண்ணீரும் மனதில் ஏதோ ஒரு பாதுகாப்பு உணர்வும் பரவ வளவனைஅங்கே எதிர்பார்க்காத சேதுபதி அதிர்ச்சியில் பிடியை நழுவ விட அவன் கையை தட்டி செல்வி தந்தையிடத்தில் சேர்ந்து வளவனின் தோள்களில் சாய்ந்து அழுதாள்" அப்பா..." அதற்குள் அங்கே வந்துவிட்ட பொன்னி அனைத்தையும் யூகித்து அதிர்ச்சியில் உறைந்தவளாய் தன்னிச்சையாய் வளரும் கண்ணீரை துடைக்கவும் மறந்து நின்றாள்.


சற்று தூரத்தில் சிறுவர்கள் விட்ட பட்டம் காற்றின் திசைக்கு அங்கும் இங்கும் அடித்து செல்லப்பட்டு பின்பு அங்கே இருந்த உயரமான மரத்தின் உச்சாணிக் கொம்பில் சென்று உட்கார்ந்து கொண்டது.


அன்று இரவு வளவனின் குடிசை முன்னே பண்ணையார் கணக்குபிள்ளை இன்னும் சில ஊர் பெரியவர்கள் கூடி இருந்தனர். வளவன் சொல்வதும் செய்வதும் அறியாது வானத்தை பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தான். அவன் மனதில் ஆயிரம் எண்ணங்கள்  புயலாய் வீசிக் கொண்டிருந்தன. செல்வி குடிசையினுள் பொன்னியின் மடியில் வெறித்தபடி  சுருண்டு படுத்திருந்தாள். பொன்னியின் கண்களில் பொங்கிய கண்ணீர் தடைபடாமல் வந்து கொண்டிருந்தது.


கணக்கு பிள்ளை தான் முதலில் பேச ஆரம்பித்தார்" இப்படியே ஆளாளுக்கு பேசாம இருந்தா எப்படி. எதோ நடந்து போய்டுச்சு. அதுதா ஏதும் நடக்காம புள்ள வீடு வந்தசுள்ள. இதே இப்படியே சுமூகமா முடிச்சு விட்ருவோம். ஊருக்குள்ள தெரிஞ்சா எல்லாருக்கும் அசிங்கம். ஜமீன் மானம் மரியாதையும் முக்கியம் இல்ல" என்றார். வளவன் அமைதியாய் அவரை நிமிர்ந்து பார்த்து " மானம் மரியாதயெல்லா ஜமீனுக்கு மட்டும் தானாயா, குடிசைல இருக்க எங்களுக்கு இல்லையா" என்று மெதுவாய் கேட்டான். " என்னடா கேட்ட " என்று சீரிய கணக்குபிள்ளையை பண்ணையார் கையமர்த்தினார்.


அவர் மனதிலும் ஆயிரம் எண்ணங்கள் சீறியபடி இருந்ததன. அவர் விஷயத்தை கேள்விப்பட்ட உடன் கோவத்தில் பொங்கிப் போனார். வீட்டிற்கு வந்த மகனை பெல்டால் நன்கு நைய்ய புடைத்து விட்டு அழுது கெஞ்சிய மனைவியின் முகத்திற்க்காய் அவனை அத்துடன் விட்டு விட்டு இங்கே வந்திருந்தார். அவர் மனதில் மகன் மீது கோவம் மிகுந்திருந்தாலும் பரம்பரை கௌரவமும் அந்தஸ்த்தும் அதையும் தாண்டி நின்றன.


மெதுவாய் பேச ஆரம்பித்தார்" வளவா உன் மககிட்ட என் மகன் நடந்து கிட்டது தப்புத்தா அத நா இல்லேனு சொல்ல முடியாது. வயசு கோளாறு தலைக்கு ஏறுன போத வேற, பொம்பள கையாள அடி வாங்குனதும் சேத்து அவன இப்படி செய்ய வெச்சுருச்சு. இது பொம்பள புள்ள சமாச்சாரம் வெளிய போன பொண்ணு வாழ்க்கைக்குதா பாதிப்பு சாஸ்தி. சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காத வயசு பொண்ணு என்னதா படிக்க வெச்சாலும் அடுத்த வீட்டுக்கு போறவதானே. அதுனால தாமதிக்காம ஒரு கல்யாணத்த பண்ணி வெச்சுரு. விஷயம் வெளிய போன அதும் சிரமம்.  ஊரு கண்ணு மூக்கு வெச்சு பேச ஆரம்பிச்சுரும்.  இந்தா  இதுல பணம் இருக்கு இத எடுத்துக்கோ பொண்ணு கல்யாணத்த சீக்கிரமா முடிக்க பாரு" என்று கூறி ஒரு கட்டு பணத்தை எடுத்து திண்ணையின் மீது வைத்து பேச்சை முடித்தார்.


அங்கு ஒரு கனத்த மௌனம் நிலவியது. வளவன் எதுவுமே பேசவில்லை. பண்ணையும் மற்றவர்களும் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு எழுந்து சென்றனர். செல்கையில் பண்ணை ஒரு நிமிடம் திரும்பி குடிசையினுள் இருந்த செல்வியை பார்த்தார் அவர்  கண்கள் லேசாய் பளபளத்தது. மேல் துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு நடக்கத் துவங்கினார் .


வளவன் நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். பின்னர் ஏதோ நினைத்தவனாய் எழுந்து நின்றான் அவன் கண்களில் ஒரு உறுதி தெரிந்தது. பொன்னியையும் செல்வியையும் நோக்கி உரைத்தான்" இந்த ஊர் காரனுக கட்டுற துணி மட்டும் தா அழுக்காகுமா  என்ன. ஏ புள்ள அழுதது போதும் எழுந்து எல்லாத்தையும் கட்டு கெளம்புவோம். செல்வி நீயும் எழு மா" என்றான்.

அந்த இருட்டில் அந்த மூவரும் கிளம்பி விட்டனர். இது வரை ஊர் பொதிகளை மட்டுமே சுமந்து கொண்டிருந்த அந்த கோவேறு கழுதைகள் முதன் முதலாய் வளவன் வீட்டு பொதிகளை சுமந்து நடந்தன. அவைகளின் முன்னால் வளவன் முதுகில் செல்வியின் புத்தகப்பை அவனின் முன்னால் செல்வியும் பொன்னியும் கைகளில் மூட்டைகளுடன்.

மறுநாள் பொழுது புலர்ந்த போது பண்ணையார் வீட்டில் ஒரே அதகளமாய் இருந்தது. வீட்டின் முன் மருத்தவமனை செல்வதற்காக கார் தயாராய் இருந்தது. உள்ளே பண்ணையாரம்மா அழுது ஆர்பாட்டம் செய்து கொண்டிருந்தாள். சேதுபதியின் அறையில் இருந்த பாட்டில்கள் எல்லாம் எடுத்து உடைக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. பண்ணையார் மகனை வலுக்கட்டாயமாய் காரில் ஏற்றி போதை பழக்கம் மீட்பு மருத்துவமனைக்கு புறப்பட்டார்.


யாருமே இல்லாத அந்த குடிசையில் காற்றில் படபடத்து கொண்டிருந்தது பண்ணையார் விட்டுச் சென்ற பணக்கட்டு. இந்த பயணம் நிச்சயமாய் ஒரு புதிய விடியலை நோக்கியே.


                                                     (முற்றும் )

-- பிரியா


முதல் பகுதியைப் படிக்க (1st Part)

http://wordsofpriya.blogspot.in/2013/06/1.html

இரண்டாம் பகுதியைப் படிக்க( 2nd Part)

http://wordsofpriya.blogspot.in/2013/06/2_12.html

சிதறல் - 2

காதல்
-----------

நீயும் நானும்
நானும் நீயும்
அவ்வளவே காதல்

நான் ஒருநாள்....நான் ஒருநாள்,

      மிதந்து செல்லும் 
      வானத்து மேகங்களின் 
      பஞ்சுக் கூட்டங்களில் 
      ஒற்றைப் பொதியாய்
      கலந்திருக்கக் கூடும் 

ஒரு சாலையில்...வழி நெடுக வாசம்பூசி
வர்ணம் பொங்க வாழ்த்துக்கூறி
வரவேற்ப்பிசைக்கும் சின்னப் பூக்கள்

அமிலம் தொட்ட மலர்கள்


தொடர்ந்தே வருகிறது
வண்டுகள் துளைத்த
பூக்களின் மரணம்

சமூகத்தின் எச்சங்கள்
வரிசையாய் நிற்கின்றன
அடுத்தது யாரோ

எழுதி ஓய்ந்து
அழுகிறது மையும்
அடக்க வழியின்றி

முளைத்தெழும் கல்லறைகள்
வலியுடன் சொல்கிறது
பெண்ணினத்தின் அவலம்

எழும்புகின்றன கூக்குரல்கள்
எங்கெங்கும் ஓயாது
எவரோ கேட்பவர்?

எங்கேதான் குற்றம்
வளர்ந்த சமூகமா?
பிறந்த வீடா?

பாட்டிலும் எழுத்திலும்
பெண்மையை போற்றியே
பேருவகை கொண்டோமா?

எப்போதுதான் புரிவோம்
வாழும் உரிமை
எல்லோர்க்கும் உண்டென்று

யோசிக்கும் கணங்களில்
அமிலத்தில் கரைகின்றன
அழகான பூக்கள்


--பிரியா

ஏதாகிலும் ஒன்றை....இன்று ஏதாகிலும் ஒன்றை எழுத வேண்டும்
இதோ எடுத்தாயிற்று காகிதமும் எழுதுகோலும்....

உனக்காக ...

நெடுந்தூரப் பயணங்களிலும்
நீங்காத நினைவுகளிலும்
உன்னையும் சேர்த்து
அலைகிறேன் நான் - நாள்தோறும்

அம்மாவிற்காய் ....
உன் பிரார்த்தனைகள்
உன் சந்தோஷங்கள்
உன் கனவுகள்
அனைத்தும் எனக்காய்!
உன் அழுகைக்கும் கூட
சில சமயம் அர்த்தம் நானே!
இழந்துவிட உன் சொந்தங்களின்
ஒற்றை எதிரி நானே!
இப்படி உனக்கான அனைத்துமாய் நான்
எனக்கான அனைத்துமாய் நீ
உனக்கென எதைத்தந்திட
முடியும் என்னால்
என் அன்பை விட பெரிதாய்.......

Love u ma always......
thank u for being my side in all the situations.......


--பிரியா

சிதறல்கள் - 1


1)தெருவிளக்கு

விடிய விடிய போராடி
விடிந்தபின் ஒய்வு எடுக்கும்
கொள்கை வீரன்...
'தெருவிளக்கு'


2)அறிவு

அனர்த்தங்களை
அர்த்தங்கள் ஆக்கும்
மானுட விந்தை - அறிவு3)கனவு....

முடிந்துபோன நேற்றைக் கொண்டு
முகம் தெரியாத நாளைக்காக
கண்கள் கட்டும் கயிற்று பாலம்


4)வாழ்க்கை...

சந்தோஷத்தில் பூத்து
துக்கத்தில் முடியும்
நிதர்சன உண்மை

--பிரியா
ஓ பாட்டி....


எத்தனைதான் சுருக்கங்கள் 
எண்ணிவிட எத்தனித்தேன் 
பாட்டியின் முகத்தினிலே 

பொம்மையும் நானும்....எப்பிறவியில் செய்த பாவமோ
இப்பிறவியில் தனியாய் பிறக்க
சபித்துவிட்டார் கடவுள்

அவளும்.....


அவளும் காதலிக்கிறாள்

கருப்பு வெள்ளை
கனவுகள் இல்லை