பக்கங்கள்

என் கூண்டுப் பறவைகளே...



என் சின்னஞ்சிறு பறவைகளே
என் சின்னஞ்சிறு பறவைகளே

வண்ணக் கயிற்றினில் மயங்கியே
எணணங்களைத் தொலைத்ததும் ஏனோ

உயிரற்ற கயிற்றினைக் கண்டு
உயிர்ப்புள்ள சிறகுகளை விடுத்தீர்

உணர்ந்து கொள்ளுங்கள் பறவைகளே
என் சின்னஞ்சிறு பறவைகளே

கட்டப்பட்ட உங்கள் சிறகுகளை
அறியாமலே இருப்பதேன் இன்னமும்

கயிறுகள் காக்க அல்ல
கட்டுப் படுத்தவே -உணருங்கள்

பருந்துகளும் கழுகுகளும் சுற்றிடலாம்
பயம் வேண்டாம் துணிந்திடுங்கள்

கூண்டுகள் அல்ல காப்பவை
சிறகுகள் மட்டுமே உறுதுணை

உயிர்ப்புடன் வெளியேறுங்கள் விரைவில்
உலகம் இருக்கிறது உங்களுக்காய்...

உணர்ந்து கொள்ளுங்கள் பறவைகளே
என் சின்னச்சிறு பறவைகளே

உயர்ந்த சிகரங்களின் உச்சிகளும்
பரந்து விரிந்த புல்வெளிகளும்

காத்துக் கிடக்கின்றன - உங்கள்
பாதங்களின் சின்னத் தீண்டலுக்காய்

அடர்ந்து செழித்த காடுகளும்
உருண்டோடும் வெள்ளை நதிகளும்

காலங்காலமாய் ஏங்கித் தவிக்கின்றன
காலம்கடந்த உங்களின் வரவிற்காய்

இன்னும் ஏனிந்த தயக்கம்
விரித்திடுங்கள் உங்கள் சிறகுகளை

பயந்தது போதும் பறவைகளே
பாய்ந்தோடி வந்திடுங்கள் பறந்திடவே

உணர்ந்து கொள்ளுங்கள் பறவைகளே
என் சின்னச்சிறு பறவைகளே

என் சின்னஞ்சிறு பறவைகளே
என் சின்னஞ்சிறு பறவைகளே



--பிரியா...







14 கருத்துகள்:

 1. அடைபட்டு அடைபட்டு
  அடுப்படியே வாழ்வென்று
  அன்றிருந்த காலம்
  அறுந்திட்ட புதுயுகத்தில்
  அறிவுடைமை ஏந்தி
  ஆற்றல்கள் வெளிக்காடி
  அடைந்திடு உந்தன்
  அழகிய தேசத்தை...!

  அழகிய கவிதை நம்பிக்கை தரும் வரிகள் ..வாழ்த்துக்கள் ப்ரியா
  இனிய சகோதரத்துவ நன்னாள் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வீட்டு கூண்டுப் பறவைகளுக்கு தாங்கள் எழுதிய கவிதை அழகாக உள்ளது...

  சிறப்பான வரிகள்...

  பெண்களுக்கான கட்டுப்பாடுகள் அனைத்தும் காவல்கள் தான் என்பனவற்றை மிகவும் அழகாக கூறியுள்ளீர்கள்...

  பாராட்டுகள்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது என் வீட்டு கூண்டு பறவைகளுக்கு அல்ல... இன்னொரு முறை நன்றாகப் படித்து பாருங்கள்... கட்டுப்பபாடுகளை நான் காவல்கள் என்று நிச்சயம் உரைக்கவில்லை...

   நீக்கு
 3. த,ம: இரண்டு

  இனிய சகோதரத்துவ நாள் நல்வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 4. பகுத்தறிவுள்ள பறவைகளாய் மாறட்டும் அனைத்துப் பறவைகளும்.

  பதிலளிநீக்கு
 5. என்னவொரு தன்னம்பிக்கை வரிகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 6. சின்னஞ்சிறு பறவைகளாய் உருவகித்து, எழுச்சியூட்டும் தன்னம்பிக்கை விதையை அழகா விதைச்சுட்டீங்க ப்ரியா! சூப்பர்!

  பதிலளிநீக்கு
 7. "பயந்ததுபோதும் பறவைகளே
  பாய்ந்தோடி வந்திடுங்கள் பறந்திடவே"
  இன்னும் ஏனிந்த தயக்கம்?
  அழகிய கருத்துக்கு அருமையான வரிகள்

  பதிலளிநீக்கு