பக்கங்கள்

சிதறல் - 21

உறவு
=====
என்
எதிர்பாராத் தருணங்களை - இன்னும்
இதமாக்கிச் செல்வதில்
இருக்கிறது
எனக்கும் மழைக்குமான
பந்தம்


---X ---

நீயும் நானுமாய்
நானும் நீயுமாய்
கரைந்துகொண்டே இருக்கிறது
நாட்கள்
அடுத்தென்பது அறியாமல்...


---X ---
வாழ்க்கை 
==========

கலைப்பதும் கோர்ப்பதுமாய் 
எத்தனயோ தருணங்கள் 
அனைத்தையும் வென்றெடுத்து 
அடுத்தொன்றை 
எதிர் நோக்கியபடி....

---X ---
திரும்புதல் என்பது 
எப்பொழுதும் சாத்தியமே 
ஒற்றை வழிப்பாதையே 
ஆயினும்.... --பிரியா 

3 கருத்துகள்:

  1. இனிக்கும் வரிகள் அருமை பிரியா வாழ்க்கை கவிதை உண்மை வரிகள்......தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. அருமை நானும் blogger உருவாக்கிடேன் Money earn செய்ய என்ன செய்ய மேம்

    பதிலளிநீக்கு