அன்பு நண்பர்களுக்கு வணக்கம்,
நீண்ட நாட்களுக்குப் பிறகான இடுகையாக புத்தக அறிமுகம் ஒன்றை இடலாம் என்றிருக்கிறேன். இந்த அமீரக வாழ்க்கையில் மிகச் சில நாட்களாகக் கிடைத்த அமீரக தமிழ் நண்பர்களின் அறிமுகத்தினால் தமிழ் இலக்கிய சந்திப்புகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டியது. அதன் பலனாக மலையாள எழுத்தாளர் வெள்ளியோடன் அவர்களின் புத்தகம் ஒன்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வாசிக்கக் கிடைத்தது.