பக்கங்கள்

அமிலம் தொட்ட மலர்கள்


தொடர்ந்தே வருகிறது
வண்டுகள் துளைத்த
பூக்களின் மரணம்

சமூகத்தின் எச்சங்கள்
வரிசையாய் நிற்கின்றன
அடுத்தது யாரோ

எழுதி ஓய்ந்து
அழுகிறது மையும்
அடக்க வழியின்றி

முளைத்தெழும் கல்லறைகள்
வலியுடன் சொல்கிறது
பெண்ணினத்தின் அவலம்

எழும்புகின்றன கூக்குரல்கள்
எங்கெங்கும் ஓயாது
எவரோ கேட்பவர்?

எங்கேதான் குற்றம்
வளர்ந்த சமூகமா?
பிறந்த வீடா?

பாட்டிலும் எழுத்திலும்
பெண்மையை போற்றியே
பேருவகை கொண்டோமா?

எப்போதுதான் புரிவோம்
வாழும் உரிமை
எல்லோர்க்கும் உண்டென்று

யோசிக்கும் கணங்களில்
அமிலத்தில் கரைகின்றன
அழகான பூக்கள்


--பிரியா

8 கருத்துகள்:

  1. எழுத்தில் மட்டுமே உள்ளன என்பதை சொல்லி விட்டீர்கள்... அவலங்கள் மாறும்... மாற வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற வேண்டும் என்பதுதான் எண்ணமும் ஆசையும்...

      நீக்கு
  2. உண்மையை ஓங்கி உரைத்தீர் தோழி...

    அமிலத்தில் அமிழ்ந்து
    அடிச்சுவடே இல்லாமல்
    அழிந்தே போகிறதே
    அர்ச்சனை மலர்கள்...:(

    பதிலளிநீக்கு
  3. அமிலத்தில் கரைகின்றன அழகான பூக்கள்! நிஜந்தான் ப்ரியா... பேப்பரிலும், தொலைக்காட்சியிலும் பெண்மை போற்றுவதாய்க் காண்பதில் எந்தப் பயனுமில்லை. அனைவரின் மனங்களிலும் அது எழுதப்பட, பதியப்பட வேண்டும்! கவிதையின் ஒவ்வொரு வரியுமே வீரியமா வந்திருக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி சார்... தினம்தோறும் நம் படிக்கும் பல விடயங்கள் மனதில் நீங்காத காயத்தை ஏற்படுத்தி செல்கின்றன... அதன் விளைவே இப்பதிவு...

      நீக்கு
  4. kalathai vellum ungal kavithiyai pol nichyam oru nalla etirkalam kathirukkirathu. kalviyal mattume athu mudiyum..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி.. மாறும் என்ற நம்பிகையுடன் தொடர்ந்து பயணிக்கிறோம்... கல்வி மட்டுமே அல்ல அதனுடன் சேர்ந்த இன்னும் பல மாற்றங்களும் அவசியமே..

      நீக்கு