பக்கங்கள்

பெண்மை...
தாழும் திறந்தது
கையில் விளக்குடன்
கான மயிலொன்று
எட்டி நடக்குது

இத்தனை காலம்
அடைபட்டு கிடந்தது
விலங்கினை உடைத்து
வெளிப்பட்டு வந்தது

வீறு நடையுடன்
எட்டி நடக்கையில்
வீதி எங்கிலும்
ஒளிர தொடங்குது

பெண்ணிலை உயர
தன்னிலை உயர்த்தி
மூலை  முடுக்கெல்லாம்
வெளிச்சம் பரவுது

இருட்டினை கழுவி
வெளிச்சத்தை புகுத்தி
உலகினை மாற்றும்
பெண்மை இவள்

பெண்ணிலை மாறயில்
தன்னிலை உணர்ந்து
ஊரும் மாறுது
உலகும் மாறுது

நன்மை பெருகிட
மண்ணை வளர்த்திட
பெண்மை வாழ்த்தனும்
பேருண்மை தளைக்கணும்

-- பிரியா

10 கருத்துகள்:

 1. பெண்ணிலை மாறயில்
  தன்னிலை உணர்ந்து
  ஊரும் மாறுது
  உலகும் மாறுது

  மாற்றம் வேண்டும் உண்மையே..

  அழகிய வரிகள்
  வாழ்த்துக்கள் ப்ரியா

  பதிலளிநீக்கு
 2. நல்ல வரிகள்...

  அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 3. அழகிய ஓவியமும் அதற்கு
  அருமையான விளக்கமாய் அமைந்த கவிதையும்
  அருமையிலும் அருமை
  தொடர வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓவியம் ரவி வர்மாவின் புகழ் பெற்ற a lady with lamp... மிக்க நன்றி... தங்கள் வாழ்த்துகளுக்கு :)

   நீக்கு
 4. பெண்மையின் உண்மையை சொல்லியுள்ளீர்கள்

  பதிலளிநீக்கு